இந்தியாவில் குறையும் தங்கம் விலை.. உலக அளவில் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? 3 முக்கிய விஷயங்கள்!

தங்கம் விலை சமீபத்திய நாட்களில் ஏற்றம் இறக்கமாக இருந்து வருகிறது. இந்தியாவில் தங்கம் விலை குறைய தொடங்கினாலும், உலக அளவில் பார்க்கும்போது உயர்ந்து வருகிறது. இந்தியாவில் இன்று காலை 11.40 மணியளவில் தங்கம் விலை 1 கிராம் ரூ.7474-ஆக இருந்தது என இந்தியன் புல்லியன் மற்றும் ஜுவல்லர்ஸ் அசோசியேசன் தெரிவித்தது. இது கடந்த திங்கட்கிழமை விற்கப்பட்ட விலையோடு ஒப்பிடுகையில் சுமார் 1000 ரூபாய் குறைவாகும். செப்டம்பர் மாதம் பதிவு செய்யப்பட்ட குறைந்தபட்ச விலையை தற்போது தங்கம் நெருங்கி வருகிறது.

ஆனால் உலக அளவில் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் பிற பொருளாதார காரணிகளின் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டாலரின் மதிப்பு உயர்ந்த காரணத்தினால் கடந்த வாரம் தங்கம் விலை உயர்ந்தது. தங்கத்தை முதலீடாக கருதும் முதலீட்டாளர்கள் பெடரல் ரிசர்வ் அதிகாரிகளின் வட்டி விகிதங்கள் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ள உன்னிப்பாக காத்திருக்கின்றனர்.

 இந்தியாவில் குறையும் தங்கம் விலை.. உலக அளவில் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? 3 முக்கிய விஷயங்கள்!

இந்தியாவில் தங்கம் விலை ஏன் குறைந்து வருகிறது?:

குறைந்த தேவை: இந்திய தங்கச் சந்தையில் விலை குறைந்து வந்தாலும், தங்கத்திற்கான டிமாண்ட் குறைந்துள்ளது. இது திருமண சீசன் என்பதால் பலரும் நகை வாங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தங்கத்திற்கான தேவை குறைந்தது உள்ளூர் சந்தையில் தங்க விலை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய முதலீட்டாளர்களுக்கு விலை மலிவு: தங்கம் விலை வீழ்ச்சி இந்திய நுகர்வோருக்கு தங்கத்தை வாங்கக் கூடியதாக மாற்றியுள்ளது. பண்டிகை காலத்தில் அதிக விலை காரணமாக தங்கம் வாங்காமல் ஒத்திவைத்த மக்களுக்கு தற்போது தங்கம் வாங்குவதற்கான சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக சில்லறை விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அமெரிக்க பொருளாதாரம்: அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. அதிக வட்டி விகிதம் இருக்கும்போது மக்கள் அதிக வட்டி தரக்கூடிய பிற திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்க மீதான ஈர்ப்பு குறைகிறது. இந்த தாக்கமும் இந்திய தங்க விலை குறைவுக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

உலக அளவில் தங்கம் உயர்வதற்கான காரணம்: உலக அளவில்.. குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் அரசியல் மற்றும் பொருளாதார நிலமை சீரற்றதாக உள்ளது. இதன் காரணமாக அங்குள்ள முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக பார்க்கின்றனர். வளைகுடா நாடுகள் போன்ற பகுதிகளில் உள்ள மக்களும் தங்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதன் காரணமாக டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை உயர்ந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+