சர்வதேச அளவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது . அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு அதிகரித்திருப்பது மற்றும் உலக பங்குச் சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்படுவது உள்ளிட்டவை காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தை நோக்கி கவனத்தை செலுத்துகின்றனர். இதன் காரணமாகவே உலக அளவிலும் இந்தியாவிலும் தங்கத்தின் விலை உச்சமடைந்து வருகிறது.
Finshots வெளியிட்டுள்ள தகவலின் படி கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் தங்கம் கிட்டதட்ட 50 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு பெற்றுத் தந்துள்ளது. இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகியவை கடந்த ஆறு மாத காலமாக சரிவில் இருக்கும் நிலையில் தான் தங்கம் முதலீட்டாளர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை தந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தின் விலை பல்வேறு காரணிகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது. முதலில் சர்வதேச அளவிலான பொருளாதார சூழல், அடுத்ததாக பங்குச்சந்தைகளில் காணப்படும் மாற்றங்கள், மேக்ரோ பொருளாதார நிலையற்ற தன்மை மற்றும் சர்வதேச அளவில் தங்கத்திற்கு ஏற்படக்கூடிய டிமாண்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தான் தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கங்களை காண்கிறது.
அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, குறிப்பிட்ட சில நாடுகளுக்கு இடையிலான போர்கள் மற்றும் பல்வேறு நாடுகளின் கரன்சிகளின் மதிப்பு ஏற்ற இறக்கங்களுடன் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இப்படி நிலையற்ற தன்மை நீடிப்பதன் காரணமாக நிறுவனங்கள் சார்ந்த முதலீட்டாளர்களும் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் பங்குச்சந்தைகள் மற்றும் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதை விடுத்து தங்கத்தில் அதிகமான அளவு முதலீடு செய்கின்றன. இதுதான் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் உயர்வதற்கு காரணமாக இருக்கிறது.
2022 ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை பல மடங்கு வாங்கி குவித்து வைக்கின்றன. குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய ஐந்து நாடுகளும் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை 1100 டன்கள் மதிப்பிலான தங்கத்தை வாங்கி கையிருப்பாக வைத்துள்ளன. உலக அளவில் இருக்கும் தங்கத்தில் 20 சதவீத தங்கம் இந்த ஐந்து நாடுகளின் வசம் இருக்கிறது.
பொருளாதார மந்த நிலை ஏற்படலாம் என்ற அச்சமே பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி வைப்பதற்கு முக்கிய காரணம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்தி இருக்கும் வர்த்தகப் போர் பல்வேறு நாடுகளிலும் பொருளாதார நிலையற்ற தன்மையை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகப்படுத்தி உள்ளது. எனவே தான் அனைவரும் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி படையெடுக்கின்றனர்.
இப்படி மத்திய நாடுகளின் வங்கிகள் ஒருபுறம், நிறுவன முதலீட்டாளர்கள் ஒருபுறம் என அனைவரும் தங்கத்தை வாங்குவதற்கு முன் வருவதால் தங்கத்தின் டிமாண்ட் அதிகரித்து விலை உயர்கிறது. ஆனால் சில சமயங்களில் தங்கத்தின் விலை சரிவடையவும் செய்திருக்கிறது. ஆனால் அடுத்த சில மாதங்களில் தங்கத்தின் விலை சரிவடைவதற்கான வாய்ப்பு சற்றே குறைவு என்றே கூறலாம்.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்தாலும் வாரன் பஃபெட் போன்ற முதலீட்டாளர்கள் ஏன் தொடர்ந்து பங்குச்சந்தையிலேயே முதலீடு செய்கின்றனர் என்றால் வரலாற்று ரீதியாக அது வழங்கிய லாபமே இதற்கு காரணம். 1974 ஆம் ஆண்டில் இருந்து ஈக்விட்டி சந்தைகள் ஆண்டுக்கு 10 சதவீத லாபத்தை தந்துள்ளன தங்கம் 4 முதல் 6 சதவீதம் வரை மட்டுமே லாபம் தந்திருக்கிறது. எனவேதான் நீண்ட கால முதலீடு என பார்க்கும்போது தங்கத்தை விட ஈக்விட்டி சந்தைகள் சிறந்ததாக இருக்கும் என வாரன் பஃபெட் போன்ற நிபுணர்கள் கருதுகின்றனர்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?



Click it and Unblock the Notifications