துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்ததை அடுத்து இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்காக செய்திருந்த முன்பதிவுகளை இந்தியர்கள் ரத்து செய்து வருகின்றனர்.
மணிகண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் சுமார் 2000 பேர் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு செல்வதற்காக இருந்த தங்களுடைய பயணத்திட்டங்களை ரத்து செய்து இருக்கிறார்கள் என கூறியுள்ளது. கடந்த மாதம் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நாடு முழுவதும் இந்த தாக்குதல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து இந்திய அரசு ராஜாங்க ரீதியாக பாகிஸ்தான் மீது பல நடவடிக்கைகளை எடுத்தது. மே 7ஆம் தேதி அன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதனை எடுத்து பாகிஸ்தான் இந்தியாவின் ராணுவ தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. ஆனால் இந்தியா தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகள், டிரோன்கள் ஆகியவற்றை அழித்தது.

இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உருவானது. பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்து பதற்றத்தை தணித்துள்ளன.இந்த சூழலில் துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருக்கிறோம் என அறிவித்தன. இதில் துருக்கி பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளையும் வழங்கியுள்ளது. இதனால் கோபமடைந்திருக்கும் இந்தியர்கள் துருக்கி நாட்டிற்கு தாங்கள் சுற்றுலா செல்வதற்காக செய்திருந்த முன் பதிவுகளை எல்லாம் ரத்து செய்து வருகிறார்கள்.
சுற்றுலா தொடர்பாக இயங்கக்கூடிய பல்வேறு ஆன்லைன் தளங்களும் துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு ஏற்கனவே செய்யப்பட்டு இருந்த முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டு வருவதாகவும் , புதிதாக யாரும் இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்வதற்கு விரும்பவில்லை என்றும் தகவல் வெளியிட்டுள்ளன .இந்தியாவை சேர்ந்த மற்றும் சர்வதேச அளவிலான விமான சேவை நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களில் இந்த நாடுகளுக்கு செல்ல இந்தியாவ்சில் இருந்து பதிவு செய்யப்பட்ட சுமார் 2000 டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக கூறுகின்றன.
மே முதல் ஜூலை வரையிலான மாதங்களில் பள்ளி விடுமுறையை முன்னிட்டு பலரும் துருக்கி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல பேக்கேஜுகளை எடுத்திருந்தார்கள். அவற்றில் பெரும்பாலானவை தற்போது ரத்து செய்யப்பட்டு விட்டன என சுற்றுலா துறை சார்ந்து செயல்பட கூடிய ஏஜென்சிகள் கூறுகின்றன.
குறிப்பாக மே 7ஆம் தேதி தான் மத்திய அரசு ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. அதன் பின்னர்தான் ஏராளமான இந்தியர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கான தங்களுடைய சுற்றுலா திட்டத்தை ரத்து செய்து வருவதாக யாத்ரா தளத்தின் தலைமை செயல் அதிகாரியான ஷபின் சோப்ரா தெரிவித்திருக்கிறார். தங்கள் தளம் வழியாக முன்பதிவு செய்த சுமார் 50 சதவீத ஹாலிடே பேக்கேஜ் பதிவுகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்.
குறிப்பாக கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் இந்த பயண திட்டங்கள் ரத்து செய்வது 260 சதவீதம் அதிகரித்துள்ளது என கிளியர் டிரிப் தளம் தெரிவித்து இருக்கிறது. அதேபோல மேக் மை ட்ரிப் தளமும் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு இதுவரை இருந்த அளவு முன் பதிவுகளை தற்போது காண முடியவில்லை எனக் கூறியிருக்கிறது. 60 சதவீதத்துக்கும் மேல் பதிவுகள் ரத்தாகி இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவை சேர்ந்த 2.7 லட்சம் சுற்றுலா பயணிகள் துருக்கிக்கு சென்று இருக்கின்றனர். இந்தியர்கள் குறிப்பாக பட்ஜெட் விலையில் வெளிநாட்டு சுற்றுலா செல்ல விரும்பும் பலருக்கும் துருக்கி சிறந்த தேர்வாக இருந்தது. 2024ஆம் ஆண்டில் அஜர்பைஜான் 2.4 லட்சம் இந்தியர்கள் சுற்றுலா சென்று இருக்கின்றனர். இந்த இரண்டு நாடுகளிலும் இந்திய சுற்றுலாப் பயணிகள் சராசரியாக 1000 முதல் 2000 டாலர்கள் வரை செலவு செய்திருக்கின்றனர்.
இந்தியர்களின் சுற்றுலா பயணங்கள் ரத்து என்பது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் சுற்றுலா துறையை பெருமளவில் பாதிக்கும் என சொல்லப்படுகிறது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு மாற்றாக ஏராளமான இந்தியர்கள் கிரீஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கும், வியட்நாம், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கும் பயண திட்டங்களை மாற்றிவருகின்றனர் என மேக் மை டிரிப் தளம் தெரிவிக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக தான் இந்தியர்களுக்கு பிடித்தமான சு ற்றுலா தளங்களாக துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் மாறின. ஆனால் பாகிஸ்தானுக்கு அளித்த ஆதரவின் மூலம் இரு நாடுகளும் தங்களின் வருமானத்தை இழக்கும் நிலைக்கு வந்துவிட்டன. கடந்த ஆண்டில் மட்டும்இந்தியர்கள் துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு சுற்றுலாவின் மூலம் மட்டும் 4000 கோடி ரூபாய் வருமானம் தந்திருக்கின்றனஎ. தற்போது அந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்த காரணத்தினால் தன்னுடைய சுற்றுலாத் துறை வருமானத்தை இழந்திருக்கிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தவர்கள் தங்களுடைய பயணத் திட்டங்களை ரத்து செய்வதால் சர்வதேச சுற்றுலாத் திட்டங்களை வழங்கக்கூடிய ஆன்லைன் தளங்கள் இந்த இந்த இரண்டு நாடுகளுக்கான சுற்றுலா திட்டங்களை தாங்கள் விளம்பரம் செய்வதையே நிறுத்தி விட்டோம் என கூறி இருக்கின்றன. பெரும்பாலான இந்தியர்கள் சுற்றுலா மூலம் இந்த நாடுகளுக்கு நாம் வழங்கக்கூடிய தொகையானது நம் நாட்டிற்கு எதிராகவே பயங்கரவாதத்தை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது என கூறுவதாக மும்பையை சேர்ந்த டிராவல் ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆர்பிஜி குழுமத்தின் தலைவரான ஹர்ஷ் கோயன்கா இந்தியர்களே உலகில் நாம் கண்டு மகிழ மகிழ்வதற்கு பல்வேறு அழகான இடங்கள் இருக்கின்றன. தயவு செய்து துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகளுக்கு செல்லாதீர்கள் என கூறி இருந்தார் .கொல்கத்தாவை சேர்ந்த ஒரு டிக்கெட் ஏஜென்ட் நிறுவனம் தங்கள் மாநிலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 200 பேராவது துருக்கி செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வார்கள் தற்போது அது 50 க்கு கீழ் குறைந்துவிட்டது என்றும் அஜர்பைஜானுக்கு செல்ல வேண்டும் என டிக்கெட் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக குறைந்துவிட்டது என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். நாட்டின் பல்வேறு நகரங்களில் செயல்படும் டிராவல் ஏஜென்சிகளும் இதையே கூறுகின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications