ஒவ்வொரு இந்திய குடும்பத்தின் கனவிலும், கண்ணீரிலும் கலந்திருக்கும் ஒரு உலோகம் உண்டென்றால் அது தங்கம் தான். சாமானிய மனிதன் தன் வாழ்நாள் சேமிப்பை தங்கமாக மாற்ற துடிக்கும் வேளையில், நம் நாட்டின் பொருளாதாரக் காவலனான இந்திய ரிசர்வ் வங்கி (RBI), கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கம் வாங்குவதை திடீரெனக் குறைத்திருப்பது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை 4,700- டாலருக்கு மேலாக ஏற்றம் கண்டு விண்ணை முட்டும் வேளையில், ஆர்பிஐ-ன் இந்த திடீர் மௌனம் ஒரு எச்சரிக்கை மணியா? அல்லது வரப்போகும் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்திற்கான முன்னெச்சரிக்கையா? நம் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பில் 16% அளவிற்கு தங்கத்தை சேர்த்து வைத்திருக்கும் ஆர்பிஐ, இப்போது கொள்முதலை குறைத்திருப்பதற்கு பின்னால் இருக்கும் அந்த மறைமுக லாஜிக் என்ன? சாமானியர்கள் தங்கம் வாங்குவதை தள்ளிப் போட வேண்டுமா? இந்தியப் பொருளாதாரத்தின் இந்த மௌனப் புரட்சியை விரிவாக பார்ப்போம்.

ஆர்பிஐ-யின் கொள்முதல் சரிவு?
ஆர்பிஐ கடந்த 2024-ம் ஆண்டு 72.6 டன் தங்கம் வாங்கியிருந்ததாக காட்டும் தரவுகள், 2025-ல் வெறும் 4.02 டன் மட்டுமே வாங்கியுள்ளதை சுட்டிக் காட்டுகின்றன. இது முந்தைய ஆண்டை விட 94% குறைவு என்பதுடன், கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த அளவாகும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்பிஐ வசம் எவ்வளவு தங்கம் உள்ளது?
புதிய கொள்முதல் குறைந்திருந்தாலும், ஆர்பிஐ -ன் வசம் தற்போது 880.2 டன் என்ற சாதனை அளவிலான தங்கம் கையிருப்பில் உள்ளது. 2024 இறுதியில் இது 876.18 டன்களாக இருந்தது.
நவம்பர் 2025 நிலவரப்படி, ஆர்பிஐ-ன் தங்கக் கையிருப்பின் மதிப்பு 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. இது இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 2025-ன் இறுதியில் 16.2% ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த விகிதமாகும். 2024-ல் இது வெறும் 10% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏன் குறைத்துள்ளது?
ஆர்பிஐ தொடர்ந்து தங்கம் வாங்குவதை குறைத்திருப்பது ஒரு பக்கம் இருந்தாலும், 2025-ல் சர்வதேச சந்தையில் தங்கம் விலை 65% க்கும் மேல் அதிகரித்ததே, இந்த மதிப்பு உயர்வுக்கு மிக முக்கியக் காரணம். அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு ஏற்கனவே அதிக அளவில் இருப்பதால், தற்போதைய உச்ச விலையில் கூடுதல் தங்கம் வாங்குவதை ஆர்பிஐ குறைத்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெறும் 5 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பில் தங்கத்தின் பங்கு 6%க்கும் குறைவாகவே இருந்தது. ஆனால், 2026-ன் தொடக்கத்தில் இது 16%-ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அமெரிக்க டாலர் மீதான அதீத சார்பைக் குறைத்து, உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இந்திய ரூபாயை பாதுகாப்பதே முக்கிய நோக்கமாகவும் பார்க்கப்படுகிறது.
தங்கம் எங்கே?
முன்பு லண்டன் வங்கியில் அதிகமாக இருந்த இந்திய தங்கம், இப்போது இந்தியாவுக்கே கொண்டு வரப்படுகிறது. இந்தியாவின் மொத்த தங்கத்தில் சுமார் 65% அல்லது 575 டன் இப்போது இந்திய மண்ணிலேயே (மும்பை மற்றும் நாக்பூர் காப்பகங்களில் பாதுகாப்பாக உள்ளது. இது உக்ரைன்-ரஷ்யா போரின் போது ரஷ்யாவின் வெளிநாட்டு சொத்துக்கள் முடக்கப்பட்டதை பார்த்த பிறகு, நமது தங்கம் நம்மிடமே இருப்பது தான் பாதுகாப்பு என்ற முடிவை இந்தியா எடுத்திருக்கலாம்.
உலகளாவிய போக்கு: டாலரை விட தங்கம் முக்கியம்!
உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் 1996-க்குப் பிறகு முதல் முறையாக, அமெரிக்க அரசாங்கப் பத்திரங்களை விட தங்கத்தை அதிக அளவில் சேமிக்கத் தொடங்கியுள்ளன. மத்திய வங்கிகளின் கையிருப்பில் தங்கம் தற்போது 20% பங்கைக் கொண்டுள்ளது, இது யூரோவை (16%) விட அதிகம்.
டிசம்பர் 2025 நிலவரப்படி, உலக நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகாரப்பூர்வமாக 32,140 டன் தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ளன. இது கடந்த சில தசாப்தங்களில் இல்லாத மிகப்பெரிய அளவாகும். 2022-ஆம் ஆண்டு தொடங்கிய இந்த அதிரடி கொள்முதல், நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து 1,000 டன்களுக்கும் அதிகமாக நீடிப்பது உலகப் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற சூழலை காட்டுகிறது.
மொத்தத்தில் ஆர்பிஐ-ன் கொள்முதல் சரிவானது திட்டமிடப்பட்டோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய காரணங்களுக்காகவோ குறைக்கப்படவில்லை என்பதை முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இது விலையில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவும் வாய்ப்பில்லை. ஆனால் இனி மீண்டும் புதிய தாக மத்திய வங்கிகள் வாங்க தொடங்கினால் விலை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications