உலகிலேயே தங்கம் அதிகம் வாங்கும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் சீனா முதல் இடத்தில் இருந்தாலும், இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரையில் தங்கம் மீது முதலீடு செய்வது அதிகம்.
முன்பெல்லாம் தங்கத்தை நகையாக வாங்குவது மட்டுமே வழக்கமாகக் கொண்டிருந்த மக்கள் செய்கூலி, சேதாரம் வாயிலாகப் பணத்தை மிச்சப்படுத்தும் நோக்குடன் தங்கத்தை காயின்களாகவும், பார்களாகவும் வாங்குவது சமீபத்தில் அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் பணத்தில் இதில் சேமித்தாலும் தங்கத்தை மக்கள் வாங்குவது முற்றிலும் பெரும் தலைவலியான விஷயம்.

தங்கம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவது இல்லை, வெளிநாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. கிட்டதட்ட கச்சா எண்ணெய் போல, கச்சா எண்ணெய் பெட்ரோல், டீசலாக மாற்றி நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பலன் அளிக்கிறது. ஆனால் தங்கம் வெறும் சேமிப்பாக மட்டுமே முடங்கி கிடக்கிறது. .
மேலும் தங்கம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் காரணத்தால் டாலரில் வாங்கப்படுவதால் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைவது மட்டும் அல்லாமல் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும் பிரச்சனை தங்க இறக்குமதிக்கு உள்ளது. இதைத் தடுக்கத்தான் மத்திய அரசு தங்க முதலீட்டுப் பத்திரம் கொண்டு வந்தது.
இதேவேளையில் தங்கத்தை மக்கள் மட்டும் தான் வாங்குகிறார்களா என்றால்? இல்லை.. அமெரிக்கா, ஜெர்மனி, பாகிஸ்தான், இலங்கை என வல்லரசு நாடுகள் முதல் பொருளாதாரத்தில் தத்தளிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தனது பண புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும், நாணய மதிப்பை அதிகரிக்கவும் தங்கத்தை முக்கிய ஆதாரமாக வைத்துச் செயல்படுத்துகிறது.
கொரோனா காலத்தில் தங்கத்தை அதிகமாக வைத்திருந்த பல நாடுகள் தங்கம் விலையில் ஏற்பட்ட அப்போதைய உயர்வை பணமாக்கிக்கொள்ள அதிகளவில் விற்பனை செய்தது. இதேபோல் முதலீட்டுச் சந்தையில் எப்போதெல்லாம் நிலையற்ற தன்மை வருகிறதோ அப்போதெல்லாம் தங்கம் மீதான முதலீடுகள் அதிகரிக்கும்.
இதன் படி கொரோனா, ரஷ்யா - உக்ரைன் போர், சீனா- தைவான் பிரச்சனை, சீனாவின் நீண்ட லாக்டவுன், தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீன போர், அனைத்தையும் தாண்டி 2024 ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்க உட்பட உலகின் 50 சதவீத மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பொது தேர்தல் நடக்க உள்ளது. இதன் வாயிலாகச் சர்வதேச முதலீட்டுச் சந்தையில் ஏற்பட்டு வரும் தடுமாற்றத்தின் கீழ் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனாவுக்கு பின்பு தங்கம் விலை கிட்டத்தட்ட 20000 ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 1400 ரூபாய் உயர்ந்து 63,900 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1530 ரூபாய் உயர்ந்து 69,710 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரணத் தங்கம் விலை ஒரு சவரன் 1120 ரூபாய் உயர்ந்து முதல் முறையாக 51,120 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 300 ரூபாய் உயர்ந்து 80800 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் உயர்ந்து 24,330 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

குறைந்த விலையில் தங்கம் வாங்க ஆசையா?18K vs 22K - அட்சய திருதியையில் எது வாங்குவது புத்திசாலித்தனம்?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?



Click it and Unblock the Notifications