தங்கம் விலை உயர்வு ஒரு எச்சரிக்கை மணி! ரே டாலியோ உலக பொருளாதாரத்திற்கு ரெட் சிக்னல்!

தங்கம் விலை லாபத்தின் அறிகுறி மட்டுமல்ல, அது உலக பொருளாதாரத்திற்கு விடுக்கப்படும் ஒரு எச்சரிக்கை அலாரம் ஆகவும் இருக்கலாம் என சர்வதேச பிரபல முதலீட்டாளரான ரே டாலியா ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார். பங்குச் சந்தையில் நிலவி வரும் பதற்றம், நாணய மதிப்புகளின் வீழ்ச்சி மற்றும் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் சூழல் என அனைத்தும் சேர்ந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பு புகலிடமான தங்கத்தை நோக்கி தள்ளுகிறது. இந்த சூழலில் தான் தங்கம் விலையானது அதிரடியான ஏற்றம் கண்டு வருகிறது. ஆனால் பிரபல முதலீட்டாளரோ தங்கம் விலை உயர்வு என்பது வெறும் லாபக் கணக்கு மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த பொருளாதார அமைப்பிலும் ஏதோ ஒன்று சரியாக இல்லை என்பதற்கான ரெட் சிக்னல் என கூறுகிறார். டாலியா ஏன் இவ்வாறு எச்சரிக்கிறார், தங்கத்தின் இந்த விலையேற்றம் சொல்வதென்ன? முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன, வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.

தங்கம் விலை உயர்வு ஒரு எச்சரிக்கை மணி! ரே டாலியோ உலக பொருளாதாரத்திற்கு ரெட் சிக்னல்!

டாலியாவின் எச்சரிக்கை!

முதலீட்டாளர் ரே டாலியோ 2025ம் ஆண்டு முழுவதும் பொருளாதாரம் பற்றிய கவலையை தொடர்ந்து விடுத்து வந்தார். அமெரிக்க பொருளாதாரம் ஒரு புதிய ஆண்டுக்குள் (2026ம் ஆண்டில்) நுழையும்போதும், அவர் தனது எச்சரிக்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார். குறிப்பாக 2025ம் ஆண்டு முழுவதும் உலகளாவிய கடன் நெருக்கடி மற்றும் காகித பணத்தின் மதிப்பு வீழ்ச்சி குறித்து எச்சரித்து வந்தார்.

குறிப்பாக தங்கம் விலையானது 1979-க்குப் பிறகு இல்லாத அளவில் ஒரு மிகப்பெரிய உயர்வை 2025ல் சந்தித்தது. இது குறித்து எச்சரித்துள்ள டாலியோ, தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி உயர்வானது முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இது பணத்தின் மதிப்பு குறைந்து வருவதையே காட்டுகிறது. மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவது, புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் ஆபரணத் தேவை என பலவும் உயர்வுக்கு காரணங்களாகச் சொல்லப்பட்டாலும், காகித பணம் அதன் உண்மையான மதிப்பை இழப்பதே அதன் முக்கிய காரணம் என கூறுகிறார்.

உண்மைதான் என்ன?

கடந்த ஒரு வருடத்தில் தங்கம் 65% அளவுக்கு லாபம் கொடுத்துள்ளது. இது அமெரிக்காவின் எஸ்&பி 500 குறியீட்டை விட 47% அதிக லாபத்தை தந்தது. வேறு விதமாகச் சொன்னால், தங்கத்தின் மதிப்போடு ஒப்பிடும்போது பங்குச் சந்தை 28% சரிவைக் கண்டுள்ளது.

மதிப்பு குறைந்து வரும் ஒரு நாணயத்தைக் கொண்டு லாபத்தைக் கணக்கிடுவது, முதலீட்டாளர்களை தவறாக வழி நடத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். ஒரு நாணயத்தின் மதிப்பு குறையும் போது, அதில் கணக்கிடப்படும் சொத்துக்களின் விலை உயர்ந்தது போலத் தோன்றும். ஆனால் உண்மையில் அதன் வாங்கும் திறனை குறைந்திருக்கும்.

உதாரணத்திற்கு அமெரிக்க டாலர் அடிப்படையில் முதலீடு செய்தவருக்கு எஸ் &பி குறியீடு 18% லாபம் தந்தது. அதுவே யென் அடிப்படையில் 17% மட்டுமே லாபம் தந்தது. ஆனால் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால், பங்குச் சந்தை முதலீடானது 28% நஷ்டத்தையே தந்துள்ளது.

பலவீனமான டாலர் ஆபத்தா?

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பலவீனமான டாலர் ஏற்றுமதிக்கு உதவும் என அதனை ஆதாரித்தாலும், டாலியோ போன்ற வல்லுனர்கள் இதை வேறு விதமாக பார்க்கின்றனர். ஒரு நாட்டின் நாணய மதிப்பு சரிவு ஏற்றுமதிக்கு உதவும் என ஆதரித்தாலும், நிபுணர்கள் அதனை வேறு விதமாக பார்க்கின்றனர். ஒரு நாட்டின் நாணய மதிப்பு குறையும்போது, அந்த நாட்டின் செல்வம் மற்றும் வாங்கும் திறன் குறையும். அதோடு இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை உயர்த்த வழிவகுக்கும். இதுவும் உள்நாட்டு மக்களுக்கு சிரமமாக அமையும். மொத்தத்தில் தங்கத்தின் விலையேற்றம் பொருளாதார வளர்ச்சியின் சறுக்கல் மற்றும் நாணயத்தின் மதிப்பிழப்பு ஆகியவற்றை பிரதிபலிப்பதாகவும் கருதுகிறார். பங்குச் சந்தையின் தற்போதைய ஏற்றம் பலரையும் இந்த எச்சரிக்கை அறிகுறிகளைப் புறக்கணிக்கச் செய்திருக்கலாம். ஆனால் தங்கம் மற்றும் பங்குகள் இரண்டுமே தற்போது விலை மலிவாக இல்லை என்பதால், சூழல் மாறும்போது அவை வீழ்ச்சியை சந்திக்கவும் வாய்ப்புள்ளது. ஆக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+