சந்தை வீழ்ந்தாலும் சரி, உயர்ந்தாலும் சரி.. நான் வாங்கி கொண்டே இருப்பேன் - இது ஏதோ ஒரு சாதாரண மனிதனின் வார்த்தை அல்ல. உலகப்புகழ் பெற்ற 'Rich Dad Poor Dad' புத்தகத்தின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகியின் தாரக மந்திரம். இன்று பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்கம் அல்லது மற்ற முதலீடுகளின் மதிப்பு கொஞ்சம் குறைந்தாலே பதற்றமடைந்து விற்பனை செய்ய தொடங்குகிறார்கள். ஆனால், கியோசாகியோ விலையை பற்றி எனக்கு கவலையில்லை என்று வெளிப்படையாக கூறியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து நான் தங்கம், வெள்ளி, பிட்காயின் மற்றும் எத்தேரியத்தை வாங்கிக் கொண்டே தான் இருக்கிறேன். அதன் மூலம் இன்னும் பணக்காரன் ஆகிக் கொண்டே தான் இருக்கிறேன். இதுதான் என்னுடைய பார்முலா என்றும் கூறுகிறார்.

ஏன் தங்கம் வெள்ளி & மற்ற முதலீடுகள்?
அமெரிக்க டாலர் உள்ளிட்ட காகித பணங்கள் ஒரு நாள் மதிப்பிழக்கும். தொடர்ந்து அவற்றின் மதிப்பை அரசாங்கங்கள் குறைத்து வருகின்றன. அமெரிக்க டாலரின் வாங்கும் திறன் குறைந்து வருவதே இதற்கு முக்கிய சான்று. அமெரிக்காவின் தேசிய கடன் தொடர்ந்து அதிகரித்து வருவது, பொருளாதார வளர்ச்சிக்கு மிக ஆபத்தான ஒன்றாக மாறலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.
உலகப் பொருளாதாரம் ஒரு பெரும் வீழ்ச்சியை நோக்கி செல்லாம். அப்போது மேற்கண்ட சொத்துக்கள் மட்டுமே நம்மை காப்பாற்றும் என்பதும் அவரது கணிப்பு. ஆக விலையை பார்க்காதீர்கள். மதிப்பை மட்டும் பாருங்கள் என அவர் சொல்லும் இந்த அதிரடி வியூகத்தின் பின்னணியில் உள்ள 3 முக்கிய காரணங்களையும் சுட்டிக் காட்டுகிறார்.
ஏன் கவலைப்பட வேண்டும்?
அமெரிக்க மத்திய வங்கி மற்றும் கருவூலத்தை நிர்வகிக்கும் உயர் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்து வரும் கியோசாகி, எனது ஏழைத் தந்தை போல பி.எச்டி (PhD) முடித்த, ஆனால் நடைமுறை அறிவில்லாத திறமையற்றவர்கள் கையில் அமெரிக்க அரசாங்கமும் பொருளாதாரமும் சிக்கியிருக்கும் போது, தங்கம் மற்றும் பிட்காயின் விலையை பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
கியோசாகியின் கணிப்பை உறுதி செய்யும் விதமாக தங்கம் மற்றும் வெள்ளி விலையானது உச்சத்தை எட்டி வருகிறது. கடந்த வார இறுதியில் வெள்ளி விலை அவுன்சு ஒன்று 100 டாலர் என்ற மைல்கல்லை தாண்டியது. இது அதிகபட்சமாக 102.87 டாலர் வரை சென்றது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் வெள்ளியின் மதிப்பு 40% உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலையும் 5,000 டாலர் என்ற இலக்கை நோக்கி உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் 4,981.52 டாலர் என்ற நிலையில் காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பொருளாதார கொள்கைகள் மீதான பயம், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் கரன்சிகள் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மத்தியில் பாதுகாப்பான முதலீட்டை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். இதுவே சமீபத்திய உயர்வுக்கும் காரணம். இதேபோன்று பிளாட்டினம் விலையும் புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
3 முக்கிய காரணங்கள்!
வர்த்தகப் போர் மற்றும் இறக்குமதி வரி: அமெரிக்கா வெள்ளி இறக்குமதிக்கு வரி விதிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் நியூயார்க் சந்தைக்கு வெள்ளியை உடனே கொண்டு செல்ல உலக நாடுகள் போட்டி போட்டன. இதன் விளைவாக, கடந்த அக்டோபரில் லண்டன் சந்தையில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளிக்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.
புவிசார் அரசியல் பதற்றங்கள் : வாஷிங்டன் மற்றும் அதன் ஐரோப்பிய கூட்டாளிகளுக்கு இடையே நிலவும் விரிசல் மற்றும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் ஏற்பட்டுள்ள சுணக்கம் ஆகியவை முதலீட்டாளர்களை பதற்றத்திலேயே வைத்துள்ளன. பங்குச் சந்தை போன்ற ரிஸ்கான அம்சங்களில் முதலீடு செய்வதை விடுத்து, பாதுகாப்பான புகலிடமாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளியை மக்கள் வாங்க தொடங்கியுள்ளனர்.
அமெரிக்க பெடரல் வங்கியின் சுதந்திரம்: அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அதன் சுதந்திரத்தை இழக்க கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது. அரசியல் தலையீடுகள் அதிகரித்தால் டாலரின் மதிப்பு வீழ்ச்சி அடையும் என்பதால், பாரம்பரிய நிதி அமைப்புகளுக்கு வெளியே இருக்கும் பிட்காயின் மற்றும் தங்கம் போன்ற சொத்துக்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இது நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து தங்கம், வெள்ளி விலை அதிகரிக்க வழிவகுக்கலாம். எது எப்படியாயினும் சரியான ஆலோசனையுடன் திட்டமிடல் நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?



Click it and Unblock the Notifications