எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

பங்குச்சந்தை முதலீடுகள் வெறும் காகித முதலீடுகள் மட்டுமே, போர் காலங்களில் அவை கரைந்து போகும் - ரிச் டாட் புவர் டாட் (Rich Dad Poor Dad) புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி (Robert Kiyosaki) விடுத்துள்ள இந்த அதிரடியான எச்சரிக்கை உலக முதலீட்டாளர்களை அதிர வைத்துள்ளது.

மத்திய கிழக்கில், குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியில் அதிகரித்து வரும் பதற்றங்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை பாதித்து, ஒரு மாபெரும் பொருளாதார சரிவுக்கு வித்திடும் என அவர் கணித்துள்ளார். 1974-ல் ஏற்பட்ட நிதி மாற்றங்களின் விளைவுகள் இப்போது 2026-ல் வெடிக்க காத்திருப்பதாக கூறும் கியோசாகி, சாதாரண சேமிப்பாளர்கள் தங்கள் வாழ்நாள் உழைப்பை இழக்க நேரிடும் என பகீர் கிளப்பியுள்ளார்.

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

இந்த இக்கட்டான சூழலில் இருந்து தப்பிக்கப் பங்குகளை (Stocks) நம்புவதை விட, தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் போன்ற நிஜமான சொத்துக்களில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என்பது அவரது வாதம். உலக சந்தை உண்மையிலேயே கவிழப்போகிறதா? உங்கள் பணத்தை பாதுகாக்க கியோசாகி சொல்லும் மாஸ்டர் பிளான் என்ன? வாருங்கள் விரிவாக பார்ப்போம்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் அவ்வபோது தங்கம், பிட்காயின் குறித்து தனது கணிப்புகளை பகிர்ந்து வருபவர். பெரும்பாலும் தங்கத்திற்கு ஆதாரவாக இருந்து வரும் கியோசாகி, தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான சூழல் மத்தியில் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்திக்கலாம் என கணித்துள்ளார். வழக்கமான பேப்பர் முதலீடுகள் புவிசார் அரசியல் பதற்றங்களால் பாதிக்கப்படலாம். உதாரணத்திற்கு தென் கொரியாவின் கோஸ்பி பங்குச் சந்தை குறியீடு ஒரே நாளில் வரலாறு காணாத அளவுக்கு 12% வீழ்ச்சியை கண்டுள்ளது.

இந்த வீழ்ச்சியானது 2008 நிதி நெருக்கடி மற்றும் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பிறகு ஏற்பட்ட சரிவுகளை விட மோசமானது என்று கூறியுள்ளார். இந்த சரிவுக்கு முன்னதாக கோஸ்பி குறியீடானது இரண்டு மாதங்களில் 45% ஏற்றம் கண்டிருந்தது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

சந்தை வீழ்ச்சிக்கு முன்னதாக ஜேபி மார்கன் மற்றும் நொமுரா போன்ற சர்வதேச ஆய்வாளர்கள், சந்தை இன்னும் உயரும் என்று கணித்துள்ளனர். ஆனால் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றமே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என கியோசாகி குற்றம் சாட்டியுள்ளார். உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கை கொண்டு செல்லும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதே இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்யையே பெரிதும் நம்பியிருக்கும் தென் கொரியா போன்ற நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த மோசமான வீழ்ச்சிக்கு மத்தியில் பிட்காயின் 6.5% ஏற்றம் கண்டு, 71,000 டாலராக உச்சம் எட்டியுள்ளது. போர் பதற்றங்கள் மத்தியில் பிட்காயின் 63,000 டாலர்களில் இருந்து, 71,000 டாலராக உச்சம் தொட்டுள்ளது. பிட்காயினுக்கு என்று தனியாக ஒரு தலைமையோ அல்லது அரசாங்க கட்டுப்பாடோ இல்லை என்பது அதன் மிகப்பெரிய பலம்.

கியோசாகியின் இந்த அதிரடி எச்சரிக்கைக்கு பிறகு, அவரை பின்தொடரும் சிலர் சந்தை மீண்டும், மீண்டு வருவதை சுட்டிக்காட்டினர். இப்போது எல்லா சந்தைகளும் பச்சையாக என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர் சந்தையை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும் என்று அவருக்கு பதிலளித்தார். இருப்பினும், இத்தகைய தற்காலிக முன்னேற்றங்கள் தனது கருத்தை மாற்றாது என்று கியோசாகி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+