இந்தியாவில் தங்கம் இறக்குமதிக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது இருந்தாலும் இதில் இருக்கக்கூடிய சில ஓட்டைகளை பயன்படுத்தி சிலர் தங்கத்தை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசு ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது.
முறைகேடாக இந்திய சந்தையில் தங்கம் கொண்டுவரப்படுவதாக தொடர்ந்து அரசுக்கு புகார் வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக அலாய்களில் அதிகளவு தங்கத்தை கலந்து இந்தியாவிற்கு கொண்டுவந்து முறைகேடாக பயன்படுத்துகிறார்களாம். தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து திரவ வடிவில் கொலாய்டு வடிவில் மற்ற பொருட்களோடு கலந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அலாய்களில் 1 சதவீதத்திற்கும் மேல் தங்கம் கலந்திருந்தாலும் வரி விலக்கு கிடைக்காது என மத்திய அரசுக்கு சொந்தமான அந்நிய வர்த்தக கண்காணிப்பு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் பல்லேடியம் ,ரோடியம் ,இரிடியம் அலாய் இறக்குமதி மீது புதிய கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.
இந்த வகையான அலாய்களில் தங்கத்தை அதிக அளவில் கலந்து அரசுக்கு தெரியாமல் வரி சலுகையுடன் இறக்குமதி செய்கிறார்களாம். இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுகிறது. இப்படி முறைகேடாக தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டு பலரும் மோசடி செய்கின்றனர் என தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன.இதனை அடுத்து தான் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
இந்தியாவில் அரிய உலோகங்கள் வரிசையில் சேர்க்கப்படாத பலேடியம், ரோடியம் ,இரிடியம் ஆகியவை அலாய் வடிவில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி இருக்கிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் அலாய்களில் 1 சதவீதத்துக்கும் கீழ் தங்கம் இருந்தால் இறக்குமதி வரி கிடையாது. அதுவே இந்தியாவில் தற்போது தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக இருக்கிறது. இந்த 6 சதவீத வரியை செலுத்தாமல் தப்பிப்பதற்கு பலரும் அலாயில் தங்கத்தை ஒரு சதவீதத்திற்கும் மேல் கலந்து போலியாக கணக்கு காட்டி இறக்குமதி செய்கிறார்களாம்.
இந்தியா வந்த பிறகு அந்த அலாய்களை ஆய்வகத்திற்கு கொண்டு சென்று அதிலிருந்து தங்கத்தை பிரித்து எடுத்து பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக அரசுக்கு ஒரு ஆண்டுக்கு பல நூறு கோடி ரூபாய்க்கு மேல் வரி இழப்பு ஏற்படுகிறதாம் . அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் அரசு இந்த கட்டுப்பாட்டினை அறிவித்திருக்கிறது. 1% கீழ் தங்கம் கலந்திருக்கும் அலாய்களுக்கு தொடர்ந்து வரி விலக்கு கிடைக்கும் தொழில்சாலைகளுக்கான இறக்குமதிக்கு இது பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!



Click it and Unblock the Notifications