தங்கம் விலை: அடுத்தடுத்து யூ டர்ன்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? குழப்பத்தில் மக்கள்..!!

தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக இருப்பது மக்களை குழப்பமடைய வைத்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் தங்கம் விலை வேகமாக உயர தொடங்கி, டிசம்பரில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய் என்ற மைல்கல்லை தொட்டது.

புது ஆண்டு தொடங்கி ஜனவரி மாதத்திலும் தங்கம் விலை உயர்வு நிற்கவில்லை. ஜனவரி மாதத்தில் இன்னும் பல மடங்கு வேகமாக தங்கத்தின் விலை உயர்ந்தது. குறிப்பாக ஜனவரி 29ஆம் தேதி அன்று வரலாற்றிலேயே இல்லாத உச்சமாக சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1.33 லட்சம் என்ற விலையை எட்டி சாமானிய மக்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வைத்தது.

தங்கம் விலை: அடுத்தடுத்து யூ டர்ன்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? குழப்பத்தில் மக்கள்..!!

ஜனவரி 29ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. ஆனால் இப்போது தான் பெரிய சிக்கலே வந்திருக்கிறது. அதாவது ஒரு நாள் தங்கம் விலை உயர்கிறது, ஒரு நாள் விலை சரிகிறது. எனவே தங்கம் விலை மேலும் உயருமென அச்சப்பட்டு நகை வாங்குவதா அல்லது மேலும் குறையுமென காத்திருப்பதா. சரி விலை மறுபடியும் உயரும் போல என நகை வாங்கிவிட்டால் அடுத்த நாளே சரிகிறது. விலை குறைகிறதே மேலும் குறையும் என காத்திருந்தால் அடுத்த நாளே உயர்கிறது.

பிப்ரவரி 1ஆம் தேதி தொடங்கி இன்று வரையிலான வர்த்தக நாட்களில் தங்கம் விலை 4 நாட்கள் குறைந்துள்ளது, 5 நாட்கள் உயர்வு கண்டுள்ளது. பிப்ரவரி 1ஆம் தேதி அன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை ஒரு கிராம் 14,900 ரூபாய் என இருந்தது, விலை ஏறுவது இறங்குவது என இன்று 14,600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் மட்டுமல்ல வெள்ளியின் நிலையும் இது தான். சென்னையில் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று வெள்ளி விலை ஒரு கிராம் 320 ரூபாய், இன்றைய தினம் ஒரு கிராம் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை 3 நாட்கள் விலை உயர்ந்தும், 3 நாட்கள் விலை சரிந்தும் இருந்தது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சத்தில் 425 ரூபாய் என உச்சம் தொட்டு பின்னர் சரிந்துள்ளது.

தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே ஏற்ற இறக்கமாக இருப்பது தான் இருப்பதால் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை வைத்திருப்பவர்கள் தங்கம், வெள்ளியை எப்போது வாங்குவது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். விசேஷம் என்பதால் லட்சக்கணக்கில் தங்கம் ,வெள்ளி வாங்க வேண்டும் வேண்டிய கட்டாயத்தில் இவர்கள் இருக்கின்றனர். ஒரு நாளில் ஏற்படக்கூடிய விலை மாற்றமும் இவர்களுக்கு பல ஆயிரங்களை சேமிக்கவும் செய்யலாம் கூடுதலாக செலவு வைக்கவும் செய்யலாம்.

முதலீட்டாளர்களை பொறுத்தவரை தங்கம் வெள்ளியில் இப்போது முதலீடு செய்யலாமா அல்லது இன்னும் விலை குறைந்த பிறகு முதலீடு செய்யலாமா என காத்திருக்கின்றனர். தற்போதைக்கு தங்கம், வெள்ளி ஆகிய இரண்டுமே தன்னுடைய வரலாற்று உச்சத்தில் இருந்து சரிவடைந்துவிட்டது. அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எந்தவித ஒரு புவிசார் மோதல்களையும் தொடங்காமல் , வர்த்தக மோதல்களையும் தொடங்காமல் இருக்க வேண்டும். அமெரிக்கா ஈரான் , அமெரிக்கா ரஷ்யா, உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதல்கள் தனிந்தே இருக்க வேண்டும், அமெரிக்காவில் வேலை வாய்ப்பு விகிதம் அதிகரித்து பணவீக்க விகிதம் குறைய வேண்டும். இவையெல்லாம் நடக்கும் பட்சத்தில் தங்கத்தின் விலை பெரும் அளவு உயராது.

இதில் ஏதேனும் ஒன்று மாறினால் கூட பழையபடி தங்கத்தின் விலை ஏறுமுகத்தை நோக்கி திரும்பும். எனவே தான் தங்கம் , வெள்ளி நகை வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் விலை குறைகிறது என்றாலே வாங்கி விட வேண்டும் மேலும் விலை குறையும் என காத்திருக்க வேண்டாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முதலீட்டாஇ பொறுத்தவரை நீண்ட கால அடிப்படையில் இலக்கு வைத்து தங்கம் வெள்ளியில் முதலீடு செய்யுங்கள் எனக் கூறுகின்றனர் , குறுகிய கால விலை மாற்றங்கள் குறித்து கவலை கொள்ளாதீர்கள் என கூறுகின்றனர்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+