தங்கம் தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது என்றால் யாராலும் நம்ப முடியாது, ஆனால் உண்மையில் இப்படியொரு விஷயம் உலகம் முழுவதும் நடக்கிறது என்பது தான் உண்மை. தற்போது துபாயில் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு அதிகளவிலான தள்ளுபடியில் தங்கம் விற்கப்படுகிறது.
இஸ்ரேல்-ஈரான் மோதல் 10 நாட்களை கடந்துள்ள நிலையில், ஈரான் ஏவுகணை தாக்குதல்களால் ஐக்கிய அரபு அமீரக வான்வெளி முழுமையாக இயங்க முடியாமல் தவித்து வருகிறது. இதனால் பயணிகள் விமானங்கள் குறைவாக இயங்குகின்றன. இதற்கும் தங்கத்திற்கும் என்ன தொடர்பு..?

தங்கம் பொதுவாக பயணிகள் விமானங்களின் சரக்கு பிரிவின் வாயிலாக தான் உலக நாடுகளுக்கு அனுப்பப்படுகிறது. இப்போது உலகின் முக்கிய விமான போக்குவரத்து துறையின் இணைப்பு பாலமாக இருக்கும் ஐக்கிய அரபு அமிரீகத்தில் விமான சேவை பாதிக்கப்பட்டு உள்ளதால் தங்கத்தின் இயக்கம் கடினமாகியுள்ளது.
துபாய் உலகின் முக்கிய தங்க சுத்திகரிப்பு மற்றும் ஏற்றுமதி மையமாக உள்ளது. இங்கிருந்து தான் ஆசியா, ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன், ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்கம் அனுப்பப்படுகிறது. ஆனால் விமானங்கள் குறைந்துள்ளதால், ஏற்றுமதியாளர்கள் தங்கத்தை சேமிப்பதற்கும், பாதுகாப்புக்காக செலவு செய்வதற்கு பதிலாக தள்ளுபடியுடன் விற்கத் தொடங்கியுள்ளனர்.
இதனால் தற்போது துபாயில் லண்டன் சந்தை விலையை காட்டிலும் ஒரு அவுன்ஸுக்கு 30 டாலர் வரை தள்ளுபடி விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல ஏற்றுமதி கப்பல்கள் இன்னும் துபாயில் தேங்கியுள்ளன. சில தங்கங்கள் இந்த வாரத்தின் மத்தியில் விமானங்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலானவை இன்னும் ஐக்கிய அரபு அமிரீகத்தில் தேக்கம் அடைந்துள்ளன.
ஏற்றுமதியாளர்கள் கடல் வழியாக அல்லது நில வழியாக அனுப்ப தயங்குகின்றனர். சவுதி அரேபியா, ஓமான் போன்ற நாடுகளுக்கு நில வழியாக அனுப்புவது ஆபத்து மற்றும் சிக்கலானது. எல்லை கடந்து செல்லும் போது பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதோடு செலவுகளும் அதிகமாகும், இதனால் தங்கம் மொத்தமும் துபாய் தங்க சந்தையில் தேக்கம் அடைந்துள்ளது.
இதேவேளையில் துபாயில் பல இந்திய வம்சாவளியினர் தங்கள் கையில் இருக்கும் தங்கத்தை விற்று பணமாக மாற்றி வருகின்றனர். இது போர் பதற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளது. மக்கள் விற்கப்பட கடைக்காரர்கள் 4-5 சதவீத தள்ளுபடியுடன் வாங்குகின்றனர்.
தள்ளுபடியில் விற்கப்பட முக்கியமான காரணம், லாக்கர் செலவு, பாதுகாப்பு செலவு, பாதுகாப்பு இடத்திற்கான கட்டணம் ஆகியவற்றை குறைக்கும் விதமாக சந்தை விலையை விட குறைவாக விற்கப்படுகிறது. இது தினசரி நடக்கும் விஷயமில்லை, சந்தையில் டிமாண்ட் குறையும் போது, இருப்பு அளவு சேமிப்பு லிமிட்-ஐ தாண்டினால் மட்டுமே நடக்கும்.
இதேவேளையில் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகமாகி, விற்பனைக்கு வரும் தங்க இருப்பு குறைந்தால் ப்ரீமியம் விலையில் அதாவது சந்தை விலையை காட்டிலும் அதிகப்படியான விலைக்கு விற்கப்படும். சீனாவில் தற்போது இதுதான் நடக்கிறது.
More From GoodReturns

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!



Click it and Unblock the Notifications