தங்கம் விலை இன்று தடாலடியாகச் சரிந்திருக்கும் வேளையில், இந்த சரிவுக்குக் காரணங்கள் என்ன? எதிர்கால போக்கு என்ன? என்பது தான் தங்கம் வாங்குவோருக்கு இருக்கும் முக்கியமான கேள்வியாக உள்ளது.
தங்கம் விலை புதன்கிழமை வர்த்தகம் துவங்கியது முதல் தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க ஃபெடரல் திறந்தவெளி சந்தை குழு (FOMC) கூட்டக் குறிப்புகள் முந்தைய வெளியீடுகளை விடக் கடுமையாக இருந்தது தான். வட்டி விகிதம் குறைப்பது குறித்து எவ்விதமான சாதகமான அறிவிப்புகளையும் வெளியிடாமல் முடக்கி வைத்துள்ளது.

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி (Fed) நீண்ட காலத்திற்கு தற்போது இகுக்கும் கட்டுப்பாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பதற்கான முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் மிகுந்த எச்சரிக்கையான அணுகுமுறை கையாள முடிவு செய்துள்ளது. அமெரிக்க டாலரை உயர்த்துள்ள வேளையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரே வட்டியைக் குறைக்கும் என்ற உறுதியான முடிவில் உள்ளது.
வட்டி விகிதம் குறைத்தால் மட்டுமே தங்கம் விலை உயரும், அதுவரையில் முதலீடுகள் அனைத்தும் பத்திர சந்தைக்குச் செல்லும். அமெரிக்க பெடரல் ரிசர்வ்-ன் முடிவுகளையும் உறுதிப்பாட்டையும் கண்டு தங்கத்தின் மீதான முதலீடுகள் விற்பனை செய்யப்பட்டு இன்று அதன் விலை குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய்க்கான தேவை குறைவது, பொருளாதார மந்தநிலை, அமெரிக்க தேர்தல், சர்வதேச அரசியல் அச்சம் ஆகியவை பணவீக்கத்தின் போக்கைத் தொடர்ந்து அதிகப்படியான அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் தங்கம் பெரிய அளவிலான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் தங்க வணிகர்கள் மே மாதத்திற்கான அமெரிக்க உற்பத்தி மற்றும் சேவை PMI (Purchasing Managers Index) இன் ரிப்போர்ட்டை கூர்ந்து கவனிக்க முடிவு செய்துள்ளனர். PMI குறியீட்டின் பலவீனமான அளவுகள் ஃபெடரல் வட்டி சரிவுக்கு வழிவகுக்கும், இதன் நம்பிக்கையில் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
மேலும் புவிசார் அரசியல் பதற்றங்கள், நிச்சயமற்ற பொருளாதார மற்றும் வர்த்தக தன்மைகள் மற்றும் நிலையான பணவீக்கம் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும். இதனால் மே மாத PMI தரவுகள் தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் தங்கம் வாங்குவோர் மே மாதத்தில் ஏற்படும் சரிவை முழுமையாக பயன்படுத்திக்கொள்வது சிறந்தது.
வியாழக்கிழமை சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 2413 டாலரில் இருந்து 2369 டாலர் வரையில் சரிந்துள்ளது. நேற்றைய அமெரிக்க சந்தை வர்த்தகத்திலும், இன்று காலை ஆசியச் சந்தை வர்த்தகத்திலும் தங்கம் முதலீட்டாளர்கள் அதிகளவில் விற்பனை செய்தனர். இதன் எதிரொலியாக இந்தியாவில் தடாலடியாகக் குறைந்துள்ளது.
இன்று எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.59 சதவீதம் வரையில் சரிந்து 72,617 ரூபாய்க்கு ஜூன் மாத பியூச்சர்ஸ் ஆர்டர்கள் விற்கப்பட்டது. இதேபோல் வெள்ளி விலை 1.92 சதவீதம் சரிந்து 91,228 ரூபாய்க்கு சரிந்தது.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 1100 ரூபாய் குறைந்து 67,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 1200 ரூபாய் குறைந்து 73,640 ரூபாயாக குறைந்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் விலையேற இதுதான் காரணமா? 23 மாதங்களாக தொடரும் வேட்டை!அமெரிக்காவையே ஓரங்கட்டிய நாடுகள்? ஏன்?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?



Click it and Unblock the Notifications