தங்கம் என்பது பாரம்பரியமான பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்பாகக் கருதப்படுகிறது. பொருளாதார அல்லது அரசியல் நிலைமை அசாதாரணமாக இருக்கும் போது, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக வாங்க விரும்புகிறார்கள். பணத்தை மண்ணில் போடுவதும் பொன்னில் போடுவதும் ஒன்றுதான் என பலர் கூறக் கேட்டிருப்போம். ரியல் எஸ்டேட் விலையும் நாளுக்கு நாள் ஏற்றத்தை கண்டு கொண்டே வருகிறது.
அதேபோல தங்கமும் ஏற்றம் இறக்கத்துடன் இருந்து வருகிறது. இப்படி இருக்கையில் மக்கள் ஒன்று நிலத்தில் தங்கள் பணத்தை செலவு செய்கின்றனர். இல்லையேனில் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். சமீபத்தில், தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக சரிவைக் கண்டுள்ளது, இது முதலீட்டாளர்களிடையே கவலைக்குரியதாக உள்ளது. பொதுவாக, பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தலின் போது தங்கத்தின் விலை உயர வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏப்ரல் 7, 2025 அன்று, தங்கத்தின் விலை எதிர்பாராத விதமாக வீழ்ச்சியடைந்தது. சர்வதேச சந்தையில், ஸ்பாட் தங்கத்தின் விலை 2.4% குறைந்து, ஒரு அவுன்சுக்கு 2,963.19 டாலர் ஆக இருந்தது. இது மார்ச் 13-ம் தேதிக்கு பிறகு காணப்பட்ட மிகக் குறைந்த விலை ஆகும். இதனுடன், இந்திய சந்தைகளிலும் இதே போன்று விலை வீழ்ச்சி நடந்தது. 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.91,450 ஆக குறைந்தது, இது முன்னதாக இருந்த ரூ.93,000 இலிருந்து ரூ.1,550 குறைவாகும். இந்த திடீர் சரிவு முதலீட்டாளர்களிடையே குழப்பத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக உலகளாவிய சந்தை சரிவுகளின் போது, தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்வது வழக்கம். இதை 2020 கொரோனா காலத்திலும், 2008 சர்வதேச நிதியியல் நெருக்கடி காலத்திலும் பார்த்திருப்போம். ஆனால் தற்போது நிலைமை முற்றிலும் மாறுப்பட்டதாக உள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அனைத்து முதலீட்டு பிரிவிலும் சரிவு ஏற்பட்டு இருக்கும் வேளையில், பெரும் முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்த முதலீட்டை பணமாக்க முடிவு செய்துள்ளதன் விளைவு தான் தற்போதை விலை சரிவுக்கு முக்கியமான காரணம்.
பிற முதலீடுகளில் ஏற்படும் சரிவை ஈடு செய்ய தங்கத்தை விற்று லாபம் பார்க்க முயற்சிக்கின்றனர். இது தான் தங்கத்தின் விலையை தற்போது குறைக்கிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக மோதல்களை அதிகரித்து, புதிய வரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது உலகளாவிய பொருளாதாரத்தில் மந்தநிலை அச்சுறுத்தலை ஏற்படுத்தி, முதலீட்டாளர்களை தங்கத்தை விற்று, பணத்தை திரும்பப் பெற தூண்டுகிறது.
வர்த்தக சவால்கள் மற்றும் வரிகள் காரணமாக, உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் என்ற அச்சம் உள்ளது. இது முதலீட்டாளர்களை தங்கத்தை விற்று, பாதுகாப்பான முதலீடுகளை தேட தூண்டுகிறது. சில நிபுணர்கள், தங்கத்தின் விலை குறைவாக இருப்பது முதலீட்டுக்கு நல்ல வாய்ப்பு என்று கருதுகின்றனர். வர்த்தக மோதல்கள் மற்றும் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல்கள் நீடித்தால், தங்கத்தின் மீதான தேவை மீண்டும் அதிகரிக்கலாம்.
தங்கத்தின் விலை சரிவுக்கு பல காரணங்கள் உள்ளன, அதில் முதலீட்டாளர்களின் நிதி திரும்பப் பெறுதல், அமெரிக்காவின் வர்த்தக வரிகள், மற்றும் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் ஆகியவை முக்கியமானவை. முதலீட்டாளர்கள், சந்தை நிலைமைகளை கவனித்து, தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!



Click it and Unblock the Notifications