தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக சரிந்தது மக்களுக்கு பெரும் நிம்மதியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை. ஆனால் இந்த நிம்மதியை கெடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் வீதம் உயர்ந்து யூடர்ன் அடித்துள்ளது.
வெள்ளிக்கிழமை சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4085 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது, அமெரிக்க வர்த்தக நேரத்தில் 4142 டாலர் வரையில் உயர்ந்தது. மேலும் எம்சிஎக்ஸ் சந்தையில் டிசம்பர் மாதம் முடியும் கோல்டு பியூச்சர்ஸ் விலை 1.21 சதவீதம் சரிந்து 1,22,600 ரூபாயாக உள்ளது, இதேபோல் வெள்ளி விலை 1.64 சதவீதம் சரிந்து 1,46,082 ரூபாயாக உள்ளது.

இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 1,15,400 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 430 ரூபாய் உயர்ந்து 1,25,890 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 344 ரூபாய் உயர்ந்து 1,00,712 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 3000 ரூபாய் குறைந்து ஒரு கிலோ 1,71,00 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 70 ரூபாய் உயர்ந்து 45,840 ரூபாயாக உள்ளது.
உலகளாவிய சந்தையில் தங்கத்தின் விலை உயர்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வும், அமெரிக்க கருவூல பத்திர முதலீட்டின் மீதான முதலீட்டில் பதிவான லாப உயர்வும் முக்கிய காரணங்களாக உள்ளன.
இதை தொடர்ந்து டிரம்ப் - ஜி ஜின்பிங்-ன் தென் கொரிய சந்திப்பு காரணமாக அமெரிக்கா-சீனா வர்த்தக பதற்றங்கள் குறைந்திருந்தாலும், ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா விதித்த தடைகளால் எண்ணெய் விலை உயர்ந்து, புவிசார் அரசியல் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ளன.
இதனால் பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி குறித்த அச்சங்கள் மீண்டும் அதிகரித்துள்ளது, இதனால் அடுத்த சில நாட்களுக்கு தங்க விலையில் அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் முடிவு மற்றும் செப்டம்பர் மாதம் அமெரிக்க பணவீக்க அறிக்கை அதன் மூலம் அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பு ஆகியவை தான் தங்கம் விலையின் திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
2 வாரத்திற்கு முன்பு தங்கம் விலை உயர்வுக்கு எப்படி டிரம்ப் காரணமாக இருந்தாரோ, தற்போது ரஷ்ய கச்சா நிறுவனங்கள் மீது தடை விதித்து தங்கம் விலையின் சரிவுக்கு காரணமாக இருந்துள்ளார். பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.38 சதவீதம் சரிந்து 65.74 டாலராக உள்ளது.
தற்போதைய தங்க விலை தேக்கநிலை, அமெரிக்க டாலர் மற்றும் பத்திர முதலீட்டில் பதிவாகியுள்ள லாப உயர்வால் ஏற்பட்டிருந்தாலும், உலகளாவிய பொருளாதார சூழல் இதை மாற்றலாம். அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்தால், பொருளாதார நிச்சயமின்மை குறைந்து, தங்க விலை உயரலாம்.
மறுபுறம், பணவீக்க அறிக்கை உயர் பணவீக்கத்தைக் காட்டினால், முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்புவர்கள், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு, பொருளாதார மற்றும் புவிசார் நிலைமைகளைப் பொறுத்து மாறுபடும், இது முதலீட்டாளர்களுக்கு முக்கியமான கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!



Click it and Unblock the Notifications