இந்தியாவில் தங்கம் வெறும் முதலீடு அல்ல, பாதுகாப்பு மற்றும் சமூக அந்தஸ்தின் அடையாளமாகவும் உள்ளது. திருமணங்கள், பண்டிகைகள் அல்லது எதிர்கால சேமிப்புகளுக்கு தங்கம் இன்றியமையாத பங்காக வகிக்கிறது. ஆனால், ஒரே நாளில் சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் தங்க விலையை ஒப்பிடும்போது வேறுபாடுகள் தென்படும். இந்த வேறுபாடுகள் உருவாக என்ன காரணம்.
இன்று தமிழ்நாடு ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி ஆகியவை 2 முறை விலை உயர்வை சந்தித்து மக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.
தங்கம் இன்று 2 முறை விலை உயர்ந்து 14,750 ரூபாயாக உள்ளது. காலையில் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்த தங்கம், மாலையில் 130 ரூபாய் வரையில் உயர்ந்தது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று 2 முறை உயர்வைக் கண்டுள்ளது. காலை நேரத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் ரூ.10 உயர்ந்து கிராம் ரூ.365 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு கிலோ வெள்ளி ரூ.3.65 லட்சம் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுவே மும்பையில் பார்த்தால் ஒரு பவுன் தங்கம் விலை 117520 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 3,35,000 ரூபாயாகவும் உள்ளது. டெல்லியில் ஒரு பவுன் தங்கம் விலை 117640 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி விலை 3,35,000 ரூபாயாகவும் உள்ளது. தோராயாமாக தென்னிந்திய மாநிலங்களில் இதன் விலை அதிகமாக உள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு என்ன காரணம்..?
டிமாண்ட் அடிப்படையில் விலை மாற்றம்
இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கேரளா ஆகியவை நாட்டின் மொத்த தங்க நுகர்வில் சுமார் 40 சதவீதத்தை கொண்டுள்ளன. இம்மாநிலங்களில் தங்கம் வாங்குவது என்பது திருமணங்கள், கோயில் திருவிழாக்கள், சுப நாட்களுடன் இணைந்த ஒரு நிகழ்வாகவே காலம் காலமாக இருந்து வருகிறது.
இதனால் வருடம் முழுவதும் தங்க நுகர்வு என்பது ஏதாவது ஒரு காரணத்திற்காக எப்போதும் உயர்வாக தென்னிந்திய மாநிலங்களில் இருந்து வருகிறது. இதனால், நகைக்கடை உரிமையாளர்கள் சற்று அதிக விலை நிர்ணயம் செய்ய முடிகிறது. இந்த உள்ளூர் தேவை தங்க விலையில் சிறிய உயர்வை ஏற்படுத்துகிறது, குறிப்பாக தென் இந்தியாவில் இதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.
போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு செலவுகள்
இந்தியாவில் பயன்படுத்தப்படும் தங்கம் பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது மும்பை, சென்னை போன்ற முக்கிய துறைமுகங்கள் வழியாக நாட்டுக்குள் வரும். பின்னர், நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தங்கத்தை கொண்டு செல்வது எளிதானது அல்ல, அதிகப்படியான பாதுகாப்பு, காப்பீட்டு செலவுகள், சிறப்பு சேமிப்பு ஆகியவை அடங்கும். இறக்குமதி மையங்களிலிருந்து தொலைவில் உள்ள நகரங்களில் இந்த செலவுகள் அதிகமாகும். இதனால், அங்கு தங்க விலை சற்று உயர்கிறது, இது வாங்குபவர்களுக்கு கூடுதல் சுமையாகிறது.
உள்ளூர் நகைக்கடைகள் மற்றும் சந்தை நிலவரங்கள்
உள்ளூர் சந்தை நிலைமைகள் தங்க விலையை கணிசமாக பாதிக்கின்றன. தேவை அதிகமுள்ள பகுதிகளில் நகைக்கடைகள் அதிக லாப விகிதத்தை சேர்க்கின்றன, ஏனெனில் விற்பனை அளவு ஆண்டு முழுவதும் உயர்வாக இருக்கும். இதற்கு மாறாக, தேவை குறைவான நகரங்களில் போட்டி அதிகமாகி விலை குறையலாம்.
வரி அமைப்பு மற்றும் உள்ளூர் கட்டணங்கள்
இந்தியா முழுவதும் தங்கத்திற்கு ஜிஎஸ்டி ஒரே மாதிரியாக உள்ளது. இருப்பினும், சில உள்ளூர் கட்டணங்கள், நுழைவு செலவுகள் அல்லது விதிமுறை செலவுகள் மாநில அளவில் வேறுபாடுகள் உள்ளது. இந்த சிறிய வேறுபாடுகள் பெரிய கொள்முதல்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
உதாரணமாக கேரளாவில் துறைமுகங்கள் அருகில் இருப்பதாலும், வளைகுடா சந்தையுடனான திறன்மிகக் வர்த்தக அமைப்பாலும் சில நேரத்தில் விலை சற்று குறைவாக இருக்கும், ஆனால் உள்ளூர் தேவையால் விலை ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.
பெருநகரங்களில் தங்க விலை வேறுபாடுகள்
மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்கள் சர்வதேச தங்க விலையை மிகவும் நெருக்கமாக பின்பற்றுகின்றன. ஆனால் சென்னை, ஹைதராபாத் ஆகியவற்றில் நகைக்கான டிமாண்ட் இருக்கும் காரணத்தால் இதன் விலை உயர்வில் தனிப்பட்ட தாக்கம் இருந்து வருகிறது.
உதாரணமாக, ஒரே நாளில் மும்பையில் துறைமுக அடிப்படை விலை இருக்கும், டெல்லியில் மக்களின் டிமாண்ட் பிரதிபலிக்கும், சென்னையில் அதிகப்படியான நகை நுகர்வு இதன் விலையை உயர்த்தும். இந்த வேறுபாடுகள் இயல்பானவை.
இந்தியாவில் தங்க விலை தேவை, போக்குவரத்து, உள்ளூர் வணிக நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் உருவாகிறது. தென் நகரங்களில் உயர் விலை என்பது தேவை, டிசைன், சந்தை இயக்கங்கள் காரணமாகவே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது, அநியாய விலை அல்ல.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!



Click it and Unblock the Notifications