Gold Price 26% சதவீதம் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா..?

பங்குச்சந்தை சரிவு, ரூபாய் மதிப்பு சரிவு, அதிகப்படியான பணவீக்கம், விலைவாசி உயர்வு, கிரிப்டோகரன்சி விலையில் தடுமாற்றம், பொருளாதார வளர்ச்சியும் மந்த நிலையில்.. வளைகுடாவில் முடியாத போர், ரஷ்யாவில் இருந்து எரிபொருள் ஏற்றுமதியில் நிலையற்ற தன்மை, ஹார்முஸ் வழித்தடத்தைத் தாண்டி பாம் அல் மண்டெப் வழித்தடத்திலும் முடக்கம்..

இப்படி முதலீட்டுச் சந்தையையும், முதலீட்டாளர்களையும் மொத்தமாகப் புரட்டிப்போடப்பட்டு வரும் வேளையில் பலருக்குத் தங்கம் முக்கிய முதலீடாக மாற துவங்கியுள்ளது.

Gold Price 26% சதவீதம் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா..?

குறிப்பாக இந்தியாவின் மிடில் கிளாஸ் மக்களுக்குத் தங்கம் விலை குறைத்திருக்கும் இந்த சூழ்நிலையில் தங்கம் புதிய அட்டிராக்ஷனாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான கேள்வி..

கடந்த ஒரு மாதத்தில் சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 3 சதவீதமும், இந்தியாவின் எம்சிஎக்ஸ் சந்தையில் 4 சதவீதமும் தங்கம் விலை குறைந்திருக்கும் வேளையில் இன்னமும் குறையுமா என்பது தான்.

தங்கம் விலை என்னாகும் என்பதை புரிந்துகொண்டால் மட்டுமே நாம் செய்யும் முதலீட்டில் எத்தகைய தாக்கம் ஏற்படும், எப்போது வெளியேற வேண்டும் போன்றவற்றுக்கான விடை தெரியும்.

Also Read

தங்கம் விலை 26% சரிவு ஏன்..?

தங்கம் விலை சர்வதேசச் சந்தையில் 2026ஆம் ஆண்டில் 5 சதவீதமும், கடந்த 6 மாதத்தில் 13.6 சதவீதமும் சரிந்து தற்போது ஒரு ட்ராய் அவுன்ஸ் தங்கம் விலை 4194.24 டாலர் என்ற நிலையில் உள்ளது.

பொதுவாகப் போர் நடக்கும் காலகட்டத்தில் தங்கம் தான் பிரதான முதலீடாக இருக்கும், உதாரணமாக ரஷ்யா - உக்ரைன் போர் காலகட்டத்தில் தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. ஆனால் ஈரான் போரில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது, இதோடு ஏஐ முதலீட்டிலும், அதன் மூலம் கிடைக்கும் லாபத்திலும் ஏற்பட்ட தடுமாற்றம் அமெரிக்கா பொருளாதாரத்தை ஆட்டிவைத்துள்ளது.

ஈரான் போரின் முக்கிய பிரச்சனையே எரிபொருள் விலை உயர்வு மூலம் ஏற்படும் பணவீக்க பாதிப்பு. இந்த பணவீக்கத்தால் அமெரிக்க அரசின் 10 வருடக் கருவூல பத்திரத்தின் முதலீட்டு லாபம் 5.3 சதவீதம் என அதிகப்படியான லாபத்தைத் தொட்ட காரணத்தால் மொத்த முதலீட்டுச் சந்தையும் தற்போது அமெரிக்கப் பத்திரத்தைச் சார்ந்து திரும்பியுள்ளது.

தங்கத்திற்கு இதுபோன்ற வட்டி வருமானம் கிடைக்காத காரணத்தால் தங்கம் மீது செய்யப்பட்டு இருந்த முதலீடு அனைத்தும் பத்திர சந்தைக்கு மாறி வருகிறது. இந்திய பங்குச்சந்தையில் இருந்து FII முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை வெளியேற்றுவதற்கும் இதுதான் காரணமாக இருந்து வருகிறது. இதோடு டாலரின் வலிமையும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய அடிப்படையாக இருந்து வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தான் தங்கம் குறைந்து வருகிறது, சர்வதேசச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அதன் உச்ச விலையில் இருந்து 26 சதவீதம் குறைந்துள்ளது, இதுவே இந்தியச் சந்தையில் 23 சதவீதம் குறைந்துள்ளது. ஆனாலும் முதலீட்டுச் சந்தையில் தங்கம் மீதான முதலீட்டுக்குச் சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏன்..?

Recommended For You

மத்திய வங்கிகளின் திட்டம் என்ன..?

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் தங்கம் மீது முதலீட்டுச் சந்தை வல்லுநர்கள் பாசிட்டிவான கருத்தை முன்வைக்க முக்கிய காரணம் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தான்.

2026ஆம் ஆண்டில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சுமார் 700 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, 2010-2021 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக வருடத்திற்கு 470 மட்டுமே வாங்கப்பட்ட நிலையில் தற்போது 700 டன் தங்கத்தை உலக நாடுகளின் மத்திய வங்கி வாங்கியுள்ளது.

வேகமாக வளரும், வளர்ந்த நாடுகளும் டாலருக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டு தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. குறிப்பாகச் சீனா...

இதனால் முதலீட்டுச் சந்தையிலும், பொருளாதாரத்திலும் மிகப்பெரிய மாற்றம் நிகழும் என்பதை மத்திய வங்கிகளின் தொடர் தங்கக் கொள்முதல் காட்டுகிறது எனச் சந்தை முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கம் விலை கணிப்பு

தற்போதைய முதலீட்டுச் சந்தையின் சூழ்நிலையில் தங்கம் விலை 2026ஆம் ஆண்டு கடைசி காலாண்டில் ஒரு அவுன்ஸ் 6000 டாலர் வரையில் உயரும் என ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது. இதேபோல் 2027ன் பிற்பகுதியில் 6300 டாலர் வரையில் அதிகரிக்கும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

பிப்ரவரி மாத கணிப்பில் ஜேபி மோர்கன் தங்கம் விலை 6300 வரையில் உயரும் என கணித்திருந்தது, ஆனால் தற்போது 6000 டாலராகக் குறைத்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து சரியுமா..?

போர் அச்சம் குறையாத நிலை, மிட்-டேர்ம் தேர்தல், பொருளாதார மந்த நிலை ஆகியவற்றின் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து குறைய வாய்ப்புள்ளது, இதேவேளையில் இந்தியச் சந்தையில் உருவாகியுள்ள பண்டிகை கால டிமாண்ட் மற்றும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கம் வாங்குவது போன்றவை தங்கம் விலையைக் கட்டுப்படுத்த சாதகமாக அமையும்.

தங்கம் விலை உயர்வுக்கும், சரிவுக்கும் தற்போது முக்கிய அளவுகோல் ஈரான் போர். இந்த போர் அமைதியாக முடிந்து எரிபொருள் சப்ளை சீராகும் பட்சத்தில் தங்கம் விலை கட்டாயம் பெரிய அளவில் உயரும். இதற்கு முதல் படியாக ரஷ்யா மீதான டீசல் ஏற்றுமதி தடைக்கான நீக்கத்திற்கு டிரம்ப் ஒப்புதல் அளித்து ஏப்ரல் 2027 வரை அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது.

இதனால் தங்கம் விலை சரிவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும், மீண்டும் உயர்வதற்கான வாய்ப்புகளை மத்திய வங்கிகளின் டாலருக்கு எதிரான நிலைப்பாடு வலு சேர்க்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+