டெல்லி: ஒவ்வொரு ஆண்டிலும் ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திலேயே தங்க பத்திரம் வெளியீடு குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும். தற்போது ஆகஸ்ட் மாதம் முடிவடைய போகிறது, ஆனால் இதுவரை 2024 ஆம் ஆண்டுக்கான தங்க பத்திர வெளியீடு குறித்து அறிவிப்பை வெளியிடவில்லை. படிப்படியாக மத்திய அரசு தங்க பத்திர முதலீடு திட்டத்தை கைவிட இருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த நிதியாண்டில் 443 லட்சம் யூனிட் தங்க பத்திரங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டது.
இது 2023-ஆம் நிதியாண்டில் 122 லட்சம் யூனிட்டுகளாகவும், 2022-ஆம் ஆண்டில் 270 லட்சம் யூனிட்களாகவும், 2021 ஆம் நிதி ஆண்டில் 323 லட்சம் யூனிட்களாகவும் இருந்தன. கடந்த 2015-ஆம் ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை தீர்ப்பதற்காக தான் மத்திய அரசு தங்க பத்திரத் திட்டத்தை கொண்டு வந்தது.

இதன் மூலம் அரசு வழக்கமாக வெளியிடும் பத்திரங்களை விட கூடுதலான நிதியை அரசு திரட்டியது. அதுமட்டுமின்றி அரசு பத்திரங்களில் 7 சதவீத வட்டி வழங்க வேண்டிய சூழலில் தங்க பத்திர திட்டங்களில் 2.5 சதவீத வட்டி வழங்கினால் மட்டுமே போதும்.
இந்த திட்டத்தினை பொருத்தவரை முதலீட்டாளர்களுக்கு லாபமான திட்டமாக இது அமைந்தது. ஏனெனில் தங்க பத்திரம் வெளியிட தொடங்கி இத்தனை ஆண்டுகளில் தங்கத்தின் விலை வளர்ச்சி பாதையிலேயே இருந்துள்ளது. ஆனால் இது தான் அரசுக்கு தற்போது சிக்கலாகி இருக்கிறது.
உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை 35 ஆயிரம் ரூபாய், 2024ஆம் ஆண்டில் 75 ஆயிரம் ரூபாய் என அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அரசு தங்க பத்திரங்களை விற்று திரட்டிய நிதியை விட அதனை திரும்ப வழங்கும்போது அதிக நிதியை செலவிட வேண்டியதாக இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்த திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு 2.5 சதவீதம் வட்டியும் கூடுதலாக வழங்க வேண்டியிருக்கிறது.
உதாரணமாக முதல் முதலில் அரசு தங்க பத்திரத்தை வெளியிட்ட போது 245 கோடி நிதியாக திரட்டியது. அப்போது 49 லட்சம் யூனிட் தங்கம் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 2,684 ரூபாய் என இருந்தது. அதுவே திரும்ப அந்த முதலீட்டாளர்களுக்கு வழங்கும்போது 6132 என ஒரு கிராமின் விலை உயர்ந்திருந்தது. கிட்டத்தட்ட 120% இது அதிகமாகும்.
அது மட்டும் இன்றி ஆண்டுக்கு 2.5% வட்டியும் வழங்க வேண்டும். 245 கோடி நிதியாக திரட்டி அரசு அதனை திரும்ப வழங்கும் போது 560 கோடி ரூபாய் தங்கத்தின் விலை மற்றும் 49 கோடி ரூபாய் வட்டி என 610 கோடி ரூபாயை செலவிட வேண்டி இருக்கிறது.
இதுவரை வெளியிடப்பட்ட தங்க பத்திரங்கள் அடுத்தடுத்த முதிர்வு பெற இருப்பதால் இதுவே அரசுக்குபெரும் நிதி சுமையாக இருக்கிறது. இதனால் தான் புதிதாக பத்திரங்களை வெளியிட அரசு தயக்கம் காட்டுகிறது என சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே நடப்பாண்டில் பத்திர வெளியிட்டு குறித்து அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Written by: Devika
More From GoodReturns

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

அலர்ட்.. தங்கம் ரூ.7300,வெள்ளி ரூ.15000 சரிவு.. Big drop.. சொல்லி வைச்ச மாதிரியே நடக்குதே..!

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?



Click it and Unblock the Notifications