டிசம்பர் 31ஆம் தேதி இரவில், பிளிங்கிட், ஜெப்டோ, இன்ஸ்டாமார்ட் போன்ற குவிக் காமர்ஸ் டெலிவரி தளங்களில் திரட்சை பழங்கள் ஸ்டாக் இல்லாமல் போயின. இந்த திடீர் தேவைக்கு காரணம் என்ன?
கடந்த 2-3 வருடங்களாக வருடத்தின் இறுதி நாளில் திராட்சை பழத்திற்கான டிமாண்ட் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஸ்பானிஷ் மரபில் 12 திரட்சை பழங்களை டிசம்பர் 31 நள்ளிரவு 12 மணிக்கு சாப்பிட்டால், ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்த பழங்கால ஸ்பானிஷ் வழக்கம் இந்தியாவில் சமீப காலமாக பிரபலமடைந்துள்ளது. மக்கள் 12 திரட்சை பழங்களை ஒரு தட்டில் வைத்து, மேசைக்கு அடியில் உட்கார்ந்து சாப்பிடுவதும் ஒரு வழக்கமாக இருந்து வருகிறது. இதை மக்கள் டிசம்பர் 31 ஆம் தேதி வீடியோ எடுத்த சமூக வலைதளங்களிலும் பதிவிட்டு வைரலாகி வருகின்றனர்.
கடந்த ஆண்டும் இதே டிரெண்ட் இருந்தது, ஆனால் இந்த வருடம் குவிக் காமர்ஸ் தளத்தில் அவுட் ஆஃப் ஸ்டாக் வரும் அளவுக்கு இந்த வழக்கம் டிரெண்டாகியுள்ளது. இதனால், புத்தாண்டு கொண்டாட்டங்களில் திரட்சை பழங்கள் முக்கியமானதாக மாறிவிட்டன.
ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவன இணை நிறுவனர் பானி கிஷன் இதுக்குறித்து கூறுகையில், காலை 5 மணி முதலே திரட்சைக்கான தேடல்கள் எங்கள் தளத்தில் அதிகரித்தன. முதல் பாதி நாளிலேயே 2,35,000 தேடல்கள் பதிவாகின, இது சாதாரண நாட்களை விட 78 மடங்கு அதிகம். ஜெப்டோவிலும் திரட்சை பழங்கள் முக்கிய தேடலாக இருந்தன என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 2024 டிசம்பர் 31 அன்று, ஐஸ் க்யூப்ஸ், காக்டெய்ல் கலவைகள், ஸ்னாக்ஸ் உடன் திரட்சை பழங்கள் அதிக ஆர்டர்களை பெற்றன. இது இந்த ஆண்டும் தொடர்கிறது.
பிளிங்கிட் சிஇஓ அல்பிந்தர் தின்ட்சா கூறுகையில், கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஒரே நாளில் அதிக திரட்சை ஆர்டர்கள் வந்தன. இந்த போக்கு 2025 இறுதியிலும் தொடர்ந்தது, இனி வரும் காலத்திலும் இது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குவிக் காமர்ஸ் தளங்களின் விரைவு சேவையை வெளிப்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications