அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த வருடத்தை காட்டிலும் சுமார் 13 சதவீதம் அதிகரித்து 1.72 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு மோடி அரசு மறைமுக வரியை மொத்தமாக நீக்கிவிட்டு ஜிஎஸ்டி அமலாக்கம் செய்த நாளில் இருந்து 1.72 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல் என்பது 2வது உச்ச அளவாகும்.
இந்த தடாலடி உயர்வு மூலம் 2023 ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் ஒரு மாதத்தில் சராசரி அளவு 1.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 1.49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதைவிட முக்கியமாக அக்டோபர் மாதத்தில் நாட்டின் பெரும்பாலான மாநிலத்தில் ஜிஎஸ்டி வரி வசூல் வளர்ச்சி பாதையில் உள்ளது. சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஜிஎஸ்டி வரி வசூல் அளவு குறைந்த பட்சம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
பண்டிகை காலம் என்பதால் நாட்டின் நுகர்வும், பொருளாதார செயல்பாடுகளும் அதிகரித்து ஜிஎஸ்டி வரி வசூல் அளவுகள் உயர்ந்திருந்தாலும், மற்றொரு காரணமும் இதில் உண்டு. ஜிஎஸ்டி வரி அமைப்பு கடந்த சில மாதங்களாக அனுப்பிய வரி நிலுவைக்கான நோட்டீஸ், இன்புட் டாக்ஸ் கிரெடிட்-ல் நடந்த குறைப்பாடுகள் குறித்த நோட்டீஸ் ஆகியவை அக்டோபர் மாதத்தில் கூடுதலாக வரி அமைப்பால் செட்டில் செய்யப்பட்டு உள்ளது.
மத்திய அரசு வரி வசூல் மற்றும் கணக்கீட்டில் தற்போது டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் பல அதிகப்படியான தவறுகள், வரி ஏய்ப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் ஜிஎஸ்டி போர்ட்டல் உடன் பிற வர்த்தக கட்டமைப்பு டேட்டாவும் இணைக்கப்பட்டு உள்ளது கூடுதல் மோசடிகளை கண்டுப்பிடிக்க வழி வகுத்து வருகிறது.
மேலும் 2017-18 ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க அதிகப்படியான காலம் செப்டம்பர் 30 வரையில் இருந்தது. இக்காலக்கட்டம் நிறைவடையும் நேரத்திலும், அரையாண்டு முடிவின் காரணமாகவும் அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூல் 1.72 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும் மாநிலங்கள் மத்தியில் மகாராஷ்டிரா 14%, கர்நாடகா 12%, உத்தர பிரசேதம் 10%, தமிழ்நாடு 9% வரையிலான ஜிஎஸ்டி வரி வசூல்-ஐ பதிவு செய்துள்எளது. இதேவேளையில் மக்கள் பிரச்சனைகளால் சூழ்ந்துள்ள மணிப்பூரில் 19 சதவீத சரிவு, ஹிமாச்சல பிரதேசத்தில் 2 சதவீதமும் சரிந்துள்ளது.
இக்கூடுதல் வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது, இதனால் அரசின் சொத்துக்கள், பங்குகள், வர்த்தகங்கள் விற்பனை ( டிஸ்இன்வெஸ்ட்மென்ட் ) செய்வதில் ஏற்படும் சரிவை ஈடு செய்ய முடியும். இதன் மூலம் அரசு கடன் வாங்கும் அளவு கணிசமாக குறைக்கவோ அல்லது கடன் வாங்குவதை ஒத்திவைக்க முடியும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications