டெல்லி: இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாமலேயே போனதற்கு மிக முக்கிய காரணம் இந்தியா அமெரிக்காவின் வேளாண் பொருட்களை இந்திய சந்தையில் அனுமதிக்க தயங்கியது தான்.
வர்த்தகப் பேச்சுவார்த்தை: அமெரிக்க அரசு தங்கள் நாட்டின் வேளாண் பொருட்கள் மற்றும் பால் பொருட்கள், கடல் சார்ந்த உணவு பொருட்களை இந்தியாவில் வரியே இல்லாமல் இறக்குமதி செய்ய கேட்டது. ஆனால் இந்தியாவோ இந்த விஷயத்தில் நிச்சயம் அனுமதி கிடையாது என திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இது இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தை வெற்றி பெறாமல் போனதற்கு மிக முக்கிய காரணம்.

வேளாண் பொருள் இறக்குமதிக்கு தடை: இந்தியாவைப் பொறுத்தவரை வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் தான் இருக்கிறது. இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பை தரக்கூடிய, அதே வேளையில் கிராமங்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய ஒரு விஷயமாகவும் விவசாயம் மற்றும் அது சம்பந்தப்பட்ட வேலைகளும் தான் இருக்கின்றன. எனவே வேளாண் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்வதற்கு பெரும்பாலும் அனுமதிப்பது கிடையாது.
அதிகபட்ச வரி: 2022 ஆம் ஆண்டு பார்க்கும்போது இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு சம்பந்தப்பட்ட பொருட்களுக்கு 40 சதவீத வரி விதித்திருக்கிறது. இது மற்ற நாடுகளுக்கும் பொருந்தும். இந்தியா விதிக்கும் அதிகபட்ச வரி இது என்று கூட கூறலாம். ஏனெனில் வெளிநாட்டிலிருந்து குறைந்த விலைக்கு வேளாண் பொருட்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்தால் அது இந்தியாவை சேர்ந்த விவசாயிகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். இது லட்சக்கணக்கானவர்களின் வாழ்வாதாரத்திலேயே நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.
பொருளாதாரமே பாதிக்கும்: நாட்டின் பொருளாதாரத்திலும் பிரச்சினையை உண்டாக்கும் என்பதால் தான் அரசு இதனை பெரும்பாலும் அனுமதிப்பது கிடையாது. இந்தியாவின் 44 சதவீத பணியாளர்கள் வேளாண் சம்பந்தப்பட்ட வேலைகளில் தான் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களால் வெளிநாட்டு வேளாண் பொருட்களோடு போட்டியிட முடியாது. இந்தியாவில் கரீப் பருவத்தில் விளைவிக்கப்படும் 13 முக்கிய பயிர்களில் பெரும்பாலானவற்றின் விலையை சர்வதேச நிலவரங்களோடு ஒப்பிடும்போது சர்வதேச சந்தையில் அவை குறைவாக இருக்கின்றன.

விலை ஒப்பீடு: 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி சர்வதேச சந்தையில் சோயா பீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ,சூரியகாந்தி விதைகள், கடலை என்ணெய், சோயா பீன்ஸ், சோளம், துவரம் பருப்பு ,அரிசி கோதுமை ஆகியவற்றின் விலையை நாம் பார்த்தால் சர்வதேச சந்தையை விட இந்தியாவில் தான் அவற்றின் விலை அதிகமாக இருக்கிறது. இந்திய சந்தையில் ஒரு குவிண்டால் சோயா பீன் எண்ணெய் விலை 14,220 ரூபாய் அதுவே சர்வதேச சந்தையில் 9,300 ரூபாயாகத்தான் இருக்கிறது.
இந்தியாவில் விலை அதிகம்: சூரியகாந்தி விதையை பார்க்கும்போது இந்திய சந்தையில் 14,396 ரூபாய் விலை கொண்டிருக்கிறது அது சர்வதேச சந்தையில் 10,403 ரூபாயாக தான் இருக்கிறது. சூரியகாந்தி விதையின் விலை இந்தியா சந்தையில் 5,781 ரூபாயாக இருக்கிறது சர்வதேச சந்தையில் ஒரு குவிண்டாலின் விலை 3, 712 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது. இந்தியாவில் இந்த பொருட்களின் விளைச்சல் குறைவு என்பதால் இதன் விலையும் அதிகமாக இருக்கிறது என்கிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி.
இந்தியாவில் பெரிய பாதிப்பு: வெளிநாட்டு சந்தையிலிருந்து இந்த பொருட்களை இந்திய சந்தைக்குள் விட்டால் இந்தியாவில் இந்த வேளாண்மையில் ஈடுபட்டிருக்க கூடிய மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால்தான் அரசு வெளிநாட்டில் இருந்து இந்த உணவு சம்பந்தப்பட்ட மற்றும் வேளாண் சம்பந்தப்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதில் கவனமாக இருக்கிறது.
விவசாயிகளுக்கு பாதிப்பு: ஏற்கனவே வெளிநாடுகளில் இவற்றின் விலை குறைவாக இருக்கிறது. எனவே இந்தியாவில் இருந்து இதனை ஏற்றுமதி செய்தாலும் அதிக விலைக்கு யாரும் வாங்கப்போவதில்லை. எனவே இந்த விவசாயிகளுக்கு இந்த பொருட்களை விற்பனை செய்ய இந்திய சந்தை மட்டும் தான் இடம். வெளிநாட்டு பொருட்கள் வந்தால் போட்டி ஏற்பட்டு விலை குறையும்,இது விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தும். எனவே தான் அரசு வெளிநாட்டிலிருந்து உணவுப் பொருட்கள் இறக்குமதிக்கு மறுப்பு தெரிவிக்கிறது.
வெளிநாட்டில் மானியம் அதிகம்: சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் எல்லாம் விவசாயத்திற்கு அரசு சார்பில் பெருமளவில் மானியம் வழங்கப்படுகிறது எனவே அங்கே விளைச்சலும் அதிகம் அவற்றின் விலையும் குறைவு, ஆனால் இந்திய சந்தையில் அப்படி கிடையாது. வெளிநாட்டு உணவு பொருட்கள் இந்திய சந்தையில் நுழைந்தால் இது இந்தியாவின் உணவு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்பது மட்டும் இல்லாமல் பெரிய அளவில் வேலை வாய்ப்பின்மையையும் உருவாக்கும்.
More From GoodReturns

ஈரான் போர்: டிரம்ப் வெளியிட்ட ஒரேயொரு அறிவிப்பு..!! டக்குன்னு குறைந்த கச்சா எண்ணெய் விலை..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

டிரம்ப் அறிவிப்பால் இந்தியாவுக்கு சவால்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்லும் முக்கிய தகவல்..!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications