சென்னை: நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணியாற்றும் மொத்த பெண் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 2021-22ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலைகள் தொடர்பான ஆண்டு சர்வே வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 14.9 லட்சம் பெண் பணியாளர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருவது தெரியவந்துள்ளது.
இவர்களில் 6.3 லட்சம் பேர் அதாவது 42% பேர் தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்திய மாநிலங்களில் பணியமர்த்தப்பட்டு இருப்பது இந்த ஆய்வின் மூலம் வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளில் அதிகப்படியான பெண்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாடு இந்தியாவின் உற்பத்தி மையமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் இங்கே கிடைக்கும் திறமையான பணியாளர்கள் மற்றும் தொழில் தொடங்கும் சாதகமான சூழ்நிலை ஆகும்.
ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் காலணி துறைகளில் இங்கே அதிக அளவிலான ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆப்பிள் ஐபோன் உள்ளிட்ட பல்வேறு உயர்ந்த பிராண்டுகள் இங்கே ஆலைகளை நிறுவி பொருட்களை தயாரிக்கின்றன.
இந்தியாவின் தொழில் தொழில் செய்ய உகந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதற்கு மற்றொரு முக்கிய காரணம் இங்கே கிடைக்கும் பெண் பணியாளர்கள்.
தங்களது நிறுவனத்தில் சமத்துவத்தை கடைபிடிக்க வேண்டும், பெண்களுக்கு அதிக வாய்ப்பு கொடுக்க வேண்டும் என விரும்பும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை விரும்புகின்றன என்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உருவாகி இருப்பதாகவும் இதன் காரணமாகவே பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருவதாகவும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது உதவுகிறது என்றும் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தி பிரிண்ட் தளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் கொள்கைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக கொண்டுவரப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவையே பெரும்பாலான பெண்கள் மேற்படிப்புகளை பயில்வதற்கும் பணிகளுக்கு வருவதற்கும் காரணமாக அமைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள தகவல்களின்படி தமிழ்நாட்டில் உற்பத்தி துறையில் பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாகவே உள்ளது. கிட்டத்தட்ட 64% பெண்கள் இந்த துறைகளில் பணிபுரிகின்றனர். இது தேசிய சராசரியான 43 சதவிகிதத்தை விட அதிகம் குஜராத்தில் 44% பேரும் மகாராஷ்டிராவில் 35% பெண்களுமே உற்பத்தி துறையில் பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் இதுபோல தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் பெரும்பாலானவர்களின் வயது 20 முதல் 24க்குள் இருப்பதாக கூறும் யூனியன் பேங்க் ஷேர் ப்ரொபசர் ஆப் எக்னாமிக்ஸ் அண்ட் டைரக்டர், மகாபாரே கிட்டத்தட்ட 20% பெண்கள் விவசாயம், மீன் தொழில் மற்றும் பண்ணை தொழில் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications