தங்கத்தை வாங்காதடா பரமா.. அரசு திரும்பத் திரும்பச் சொல்வது ஏன்..?!

இந்திய மக்கள் தங்கம் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புவது மட்டும் அல்லாமல் தங்கத்தை வாங்காமல் இருக்குச் சிறப்பு முதலீட்டு திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. ஆனால் மத்திய அரசு ஏன் இப்படிச் செய்கிறது..? அதற்கான காரணம் என்ன..?

தங்கம் இந்தியர்களுக்கு விருப்பமான முதலீட்டு வடிவமாக இருப்பது மட்டும் அல்லாமல் நகைகள் மூலம் வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறியுள்ளது. மக்கள் தங்கத்தை மதிப்புக் கூட்டு முதலீடாகவும், பணவீக்கத்திற்கு எதிரான போராடும் ஒரு கருவியாகப் பார்க்கின்றனர். இது இரண்டுமே சரியானது தான்.

தங்கத்தை வாங்காதடா பரமா.. அரசு திரும்பத் திரும்பச் சொல்வது ஏன்..?!

ஆனாலும் மத்திய அரசு மக்கள் தங்கத்தை வாங்குவதை ஏன் நிறுத்த வேண்டும் என விரும்புகிறது?

பொதுவாக இந்தியாவில் அதாவது உள்நாட்டில் நிறையத் தங்கத்தை உற்பத்தி செய்யப்படுவது இல்லை. இந்தியா ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறது. இந்திய மக்களின் ஆர்வத்திற்கு இது எப்படிப் போதுமானதாக இருக்கும்.

மக்கள் மத்தியில் டிமாண்ட் அதிகமாக இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் வசிப்பவர்கள் தங்கத்தை வாங்க விரும்பினால், மொத்த விற்பனையாளர்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து ரீடைலில் விற்கப்படுகிறது. இப்படி இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது!.

2023ல் தங்கத்தை இறக்குமதி செய்ய மட்டுமே ரூ.2.8 லட்சம் கோடி செலவிட்டோம்! இது கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக நாம் இறக்குமதி செய்யும் இரண்டாவது அதிக மதிப்புடைய பொருளாக உள்ளது.

தங்கத்தை இறக்குமதி செய்யவேண்டுமெனில் ரூபாய் நாணயத்தில் செய்ய முடியாது, வெளிநாட்டு நாணயங்களில் (பெரும்பாலும் டாலரில்) பணத்தில் வாங்க முடியும். மேலும் நமது ஏற்றுமதியை விட நமது இறக்குமதிகள் பெரியதாக இருந்தால், அது வர்த்தகப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்.

வர்த்தகப் பற்றாக்குறை நமது பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்தி, உள்நாட்டு நாணயத்தின் மதிப்பைக் குறைக்க வழிவகுக்கும். அதனால் தான் மக்கள் தங்கம் வாங்குவதை அரசாங்கம் விரும்பவில்லை.

ஆனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைத் தடுக்க முடியாது என்பதையும் அரசுக்குக் கட்டாயம் தெரியும். இதனாலேயே மக்களின் தங்கம் மீதான மோகத்தைக் குறைக்க 2015-16 ஆம் ஆண்டில், கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடியைச் சந்தித்தபோது, இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து தங்கத்திற்கு மாற்றாக ஒரு முதலீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நினைத்தது.

இது தங்கம் தரும் அதே வருமானத்தை இந்த முதலீட்டு திட்டமும் தரும். மேலும் அதை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற, அரசாங்கம் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகை மீது 2.5% வருடாந்திர வட்டியை வழங்கத் தொடங்கியது. அதற்கு மேல், இந்த முதலீட்டை 8 ஆண்டுகள் வைத்திருந்தால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கிடையாது என்றும் தெரிவித்தது.

இந்த முதலீட்டு கருவியின் பெயர் தான் சவரின் கோல்டு பாண்ட்ஸ், இதை 1 கிராம் தங்கத்தின் மதிப்பிலேயே வாங்கிக்கொள்ள முடியும் என்பதால் தங்கத்தை வாங்குவதைப் போல் இது செயல்படும். மேலும் தங்கம் விலை உயர்ந்தாலும், குறைந்தாலும் நிலையாக 2.5 சதவீதம் வட்டி வருமானம் கிடைக்கும்.

இந்தச் சவரின் கோல்டு பாண்ட்ஸ் வாங்க விருப்பம் இருந்தால் அருகில் உள்ள தபால் நிலையம், வங்கிகளுக்குச் செல்லுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+