அமெரிக்காவுக்கு ஸ்கெட்ச் போடும் ஈரான்.. எதற்காக அடுத்தடுத்து தாக்குதல்.. ஈரான் சொல்லும் பரபர காரணம்..!

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் மத்தியிலான போர் தாக்குதல்கள் மிட்டேரம் தேர்தலுக்குப் பின்பு பெரியளவில் குறைந்திருந்த நிலையில், ஈரான் கடந்த ஒரு வாரமாக வளைகுடாவில் இருக்கும் அமெரிக்க ராணுவ கட்டமைப்புகள், விமான தளங்கள், அமெரிக்காவுக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இதில் முக்கியமாக வளைகுடாவில் மிகப்பெரிய இருக்கும் மிகப்பெரிய அமெரிக்க ராணுவ தளமான பஹ்ரைனில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் நாட்டின் IRGC படைகள் தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் IRGC படைகள் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு ஸ்கெட்ச் போடும் ஈரான்.. எதற்காக அடுத்தடுத்து தாக்குதல்.. ஈரான் சொல்லும் பரபர காரணம்..!

இதுமட்டும் அல்லாமல் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஹார்முஸ் வழித்தடத்தில் சுமார் 25 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்கப்பட்டு பெரும் தேசத்திற்கு உள்ளாகியுள்ளது, இதனால் மேற்கத்திய நாடுகளுக்கான கச்சா எண்ணெய் சப்ளை பெரியளவில் பாதிக்க உள்ளது.

ஈரானின் இந்த திடீர் தாக்குதலுக்கு மிக முக்கிய காரணம், அமெரிக்கா தற்போது எதிர்கொண்டு வரும் பொருளாதாரம் மற்றும் முதலீட்டுச் சந்தை நெருக்கடியைப் பயன்படுத்தி ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்க ராணுவம் விதித்துள்ள கடற்படை முடக்கத்தை நீக்க வைக்க வேண்டும் என்பதற்காக இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.

Also Read

அமெரிக்காவின் கடற்படை முடக்கமும், மேற்கத்திய நாடுகள் இணைந்து ஈரான் மீது விதித்துள்ள பொருளாதாரம் + வர்த்தக தடை காரணமாக ஈரான் பொருளாதாரமும், ஈரான் மக்களும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

இந்த கடற்படை முடக்கம் என்பது ஒரு சைலெட் எக்னாமிக் வார் போன்றது என ஈரான் நாட்டின் அதிபரான மசூத் பெசெஷ்கியான் விமர்சனம் செய்துள்ளார், மேலும் அமெரிக்காவின் இந்த கடற்படை முடக்கத்தை நீக்க நாங்கள் தொடர்ந்து ராணுவ தாக்குதல்களை மேற்கொள்வோம் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த திடீர் தாக்குதல் குறித்து சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூறுகையில், ஏற்கனவே அமெரிக்கா கடுமையான பணவீக்க பிரச்சனையில் தவித்தும் வரும் வேளையில் இதை மேலும் மோசமாக்க வேண்டும் என்பதற்காக ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது என கூறுகின்றனர்.

ஹார்முஸ்-ல் கடந்த ஒரு வாரத்தில் 25 எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்தியிருப்பது மூலம் இன்று கச்சா எண்ணெய் விலை உயரத் துவங்கியுள்ளது. எரிபொருள் விலை உயரும் போது தானாக அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்கும், இதைத் திட்டமிட்டே ஈரான் தற்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.

இதேவேளையில் ஈரான் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமாயின் அமெரிக்க அரசு ஈரான் ஏற்கனவே சொன்ன 7 நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே போர் முடிவுக்கு வரும். இதுமட்டும் அல்லாமல் 7 நிபந்தனைகள் ஏற்கப்படும் வரை ஐநா-வின் அணுசக்தி ஆய்வுகளை அனுமதிக்கப் போவதில்லை என்பதையும் ஈரான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

எனவே ஹார்முஸ் வழித்தடத்தில் இருக்கும் ஈரான் துறைமுகங்களை முடக்கியிருக்கும் அமெரிக்கக் கடற்படை முடக்கத்தை நீக்கவே இந்த தாக்குதல் என்பதை மிகவும் தெளிவாகத் தெரிவித்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் பொருளாதாரத் தடைகள் ஈரானை கடுமையாகப் பாதித்து வருவதையும் இதன் டிரம்ப் நிர்வாகம் தெரிந்துகொண்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+