ஈரானில் மீண்டும் போர் வெடிக்கிறதா? USA போர் கப்பலை தாக்க திட்டம்போசும் IRGC.. பஹ்ரைனில் நடத்த அட்டாக்!

உலகளாவிய முதலீட்டு சந்தை மோசமான நிலையில் இருக்கும் வேளையில், ஈரான் மீண்டும் போர் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது, ஈரானுக்கு உதவியாக ஹவுதியும் சவுதி மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் ஈரான் நாட்டின் ராணுவ படையான IRGC ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்கா விதித்திருக்கும் கடற்படை முடக்கத்தை முழுமையான நீக்குவதற்கான 3 போர் கப்பல் மீது தாக்குதல் நடத்துவதற்காகத் தயாராகியுள்ளது.

ஈரானில் மீண்டும் போர் வெடிக்கிறதா? USA போர் கப்பலை தாக்க திட்டம்போசும் IRGC.. பஹ்ரைனில் நடத்த அட்டாக்!

ஈரான் நாட்டின் IRGC படை ஏற்கனவே பஹ்ரைனில் உள்ள அல்-ரஃபா மற்றும் அவாலி விமானப்படைத் தளங்களில் அமைந்துள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு ரேடார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பஹ்ரைன் நாட்டில் உள்ள ஒரு தொழிற்சாலை டிரோன் தாக்குதல் மூலம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

மறுமுனையில் யெமன் நாட்டில் ஹவுதி அமைப்புகள் தொடர்ந்து சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வரும் வேளையில், இஸ்லாமிய புனித தளமான மக்கா நகருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஹூதி அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரீ தெரிவித்துள்ளார். இதேவேளையில் சவுதி மீதான தாக்குதல் நிறுத்தப்படுவது குறித்து எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.

Also Read

இப்படி கடந்த ஒரு வாரமாக ஈரானைச் சுற்றி பதற்றம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் ஈரான் துறைமுகத்தை முற்றியிடும் வகையில் அமெரிக்க ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தில் விதிக்கப்பட்டு உள்ள கடற்படை முடக்கம் போர் நடவடிக்கையாகக் கருதுவதாக ஈரான் தெரிவித்துள்ளது.

எனவே இந்த கடற்படை முடக்கத்தை உடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக ஈரான் நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சரான கரிபாபாடி எச்சரித்துள்ளார்.

இந்த எச்சரிக்கைக்கு முன்பே ஈரான் நாட்டின் முக்கிய ஏற்றுமதி பகுதியான கார்க் தீவில் 10க்கும் அதிகமான எண்ணெய் கப்பல்கள் முழுமையாக லோடு செய்யப்பட்டு ஏற்றுமதிக்குத் தயார் நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

ஈரான் எண்ணெய்யை கொண்டு செல்லும் கப்பல்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தினால், வளைகுடா நாடுகளில் இருக்கும் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு தளம் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தி ஹார்முஸ் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால் அடுத்தகட்ட போர் தாக்குதல் துவக்கம் என்பது அமெரிக்க ராணுவத்தின் கையில் தான் உள்ளது. ஈரான் எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல் மீது தாக்குதல் நடத்தாவிடில் எவ்விதமான பிரச்சனையும் இருக்கப்போவது இல்லை, இல்லையெனில் மீண்டும் பெரும் தாக்குதல் வெடிக்கும். இதனால் தற்போது எதிர்கொண்டு வரும் பணவீக்கம் நிலையைக் காட்டிலும் மோசமாக இடத்திற்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் அமெரிக்க ராணுவம் தனது கடற்படை முடக்கத்தை எப்படி கையாளப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+