45 வருட வெள்ளி முதலீட்டில் ஜீரோ லாபம்.. ஷாக் மேல ஷாக் கொடுக்கும் தகவல்..!!

ஏழைகளின் தங்கம், புதிய தங்கம் என பல வகையில் பாராட்டப்பட்ட வெள்ளி விலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது மட்டும் அல்லாமல் 45 வருட முதலீட்டுக்கு ஜீரோ லாபத்தைக் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் தங்கம் விலை சரிந்தது போலவே வெள்ளி விலையும் பெரும் சரிவை பதிவு செய்து அதிர்ச்சி கொடுத்தது. வெள்ளிக்கிழமை ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 3.86 சதவீதம் சரிந்து வெறும் 41.24 டாலராக சரிந்துள்ளது. இதன் மூலம் வெள்ளி விலை அதன் உச்ச விலையில் இருந்து 65 சதவீதம் வரையில் சரிந்து 1980களில் பதிவான விலையை தொட்டு உள்ளது.

45 வருட வெள்ளி முதலீட்டில் ஜீரோ லாபம்.. ஷாக் மேல ஷாக் கொடுக்கும் தகவல்..!!

1970 - 80 வரையில் வெறும் 10 டாலருக்கு வர்த்தகமான ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை, ஹாண்ட் பிரதர்ஸ் பிரச்சனை காரணமாக 1980ல் அப்போதைய வரலாற்று உச்சமான 36 டாலருக்கு உயர்ந்து 45 டாலர் வரையில் உயர்ந்தது.

அப்போதைய காலகட்டத்தில் இதுதான் அதிகப்படியான உயர்வாக இருந்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் படிப்படியாகக் குறைந்து மீண்டும் 10 டாலருக்கு குறைந்தது. இதன் பின்பு 2006 வரையில் வெள்ளி விலை தொடர்ந்து 10 டாலாருக்கு கீழேயே இருந்தது.

Also Read

2008 பொருளாதார நெருக்கடிக்குப் பின்பு தங்கமும், வெள்ளியும் முக்கியமான முதலீடாக இருந்த நிலையில் தொடர்ந்து உயர துவங்கி 2011ஆம் ஆண்டில் 1,477 டாலர் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது.

இந்த அதிரடியான உயர்வும் ஓரிரு வருடங்கள் மட்டுமே நீடித்தது, இதன் பின்பு 20-30 டாலரிலேயே வர்த்தகமானது. இந்த நிலையில் தான் 2024ஆம் ஆண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி விலை 30 டாலர் அளவீட்டில் இருந்து 2026ல் 90 டாலர் வரையில் உயர்ந்தது.

இந்த காலகட்டத்தில் தான் வெள்ளி ஏழைகளின் தங்கம், தங்கத்திற்கு மாற்று வெள்ளி, மத்திய வங்கிகள் இனி தங்கத்தைப் போலவே வெள்ளியை வாங்கும் என கூறப்பட்டது.

ஆனால் வெறும் 9 மாதத்தில் மொத்த கதையை மாற்றி 45 வருடத்திற்கு முன்பு உச்சக்கட்ட விலையில் முதலீடு செய்தவர்களுக்கு தற்போது ஜீரோ லாபத்தைக் கொடுத்து பெரும் சோகத்தைக் கொடுத்துள்ளது.

இவை அனைத்தும் சர்வதேச வர்த்தக விலையாகும், இந்திய சந்தையை பொறுத்த வரையில் ரூபாய் - டாலர் மதிப்பு இதில் முக்கிய பங்கு வகிக்கிறது, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வேகமாகச் சரிந்த காரணத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளி விலை அதிகமான விலைக்கு விற்கப்படுகிறது.

தங்கத்தை போல் வெள்ளி மத்திய வங்கிகளின் கொள்கைக்குள் அடங்குவது இல்லை, தொழிற்துறை குறிப்பாக சோலார் எனர்ஜி பிரிவில் அதிகம் பயன்படுத்தக்கூடிய உலோமாக உள்ளது. இந்த ஆண்டு சோலார் தேவை கடந்த ஆண்டை காட்டிலும் 19 சதவீதம் குறைந்திருக்கும் காரணத்தால் வெள்ளிக்கான தேவை பெரிய அளவில் குறைத்துள்ளது.

இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமாயின் உற்பத்தி செய்யப்பட்டும் வெள்ளியில் சுமார் 60 சதவீதம் தொழிற்துறையில் பயன்படுத்தப்படுகிறது, 35 சதவீகம் மட்டுமே புல்லின் மற்றும் நகைகளாக பயன்படுத்துகிறது.

ஆனால் தங்கம் 93 சதவீதம் நகை, காயின், பார்களாக ரீடைல் சந்தை வர்த்தகத்திற்கு செல்கிறது. இதனால் வெள்ளி விலை தீர்மானிப்பதில் மத்திய வங்கிகளின் கொள்கை காட்டிலும் தொழிற்துறை பங்கு அதிகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+