தங்கம், வைரம், பிளாட்டினம் இவை தான் விலை உயர்ந்தது என்று பலரும் நினைக்கிறோம். ஆனால் ஒரு கிராம் உலோகம் 200 கிலோ தங்கத்தின் மதிப்பிற்கு சமம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? கற்பனைக்கும் எட்டாத விலையில், ஒரு நாட்டின் பட்ஜெட்டையே உலுக்கும் வல்லமை கொண்ட ஒரு அதிசய உலோகம் உலகில் உண்டு. அதுதான் கலிபோர்னியம் (Californium).
வெறும் காகித அளவு எடை கொண்ட ஒரு பொருளுக்கு ஏன் கோடிக்கணக்கில் விலை பேசப்படுகிறது? இதன் பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் அறிவியல் உண்மைகளும், பயன்பாடுகளும் என்ன? உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இந்த விலையுயர்வின் ரகசியம் என்ன? வைரத்தை விட பல மடங்கு மடங்கு காஸ்ட்லி. ஒரு கிராம் இருந்தால் போதும், ஊரையே விலைக்கு வாங்கலாம் போல, அப்படி என்னதான் இருக்கிறது இந்த கலிபோர்னியம் உலோகத்தில்? ஏன் இதற்கு மட்டும் இவ்வளவு டிமாண்ட்? இந்தியாவின் ஒரு வருட பட்ஜெட்டை மிஞ்சும் இந்த உலோகத்தின் ரகசியங்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

பெரும் விலை உயர்ந்த உலோகங்களில் தங்கம் தான் கிங் என நினைக்கிறோம். ஆனால் ஒரு கலிபோர்னியத்தின் விலை சுமார் 27 மில்லியன் டாலர். இதன் இந்திய மதிப்பி கிட்டத்தட்ட 240 கோடி ரூபாய். தற்போதைய நிலவரப்படி பார்த்தால் 1 கிலோ தங்கமே 1.2 கோடி ரூபாய் தான். அப்படி இருக்கும்போது 1 கிராம் கலிபோர்னியத்திற்கு 200 கிலோ தங்கத்தை கொடுப்பதில் தப்பில்லை.
கலிபோர்னியம் என்பது மற்ற உலோகங்களை போல பூமியில் வெட்டி எடுப்பது கிடையாது. இது ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கை கதிரியக்க தனிமம். கடந்த 1950ல் அமெரிக்காவின் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இது முதன் முதலில் உருவாக்கப்பட்டது. அதன் நினைவாகவே இதற்கு கலிப்போர்னியம் என்று பெயரிடப்பட்டது.
அனு உலைகளில் மிகச் சிக்கலான செயல்முறைகள் மூலம் உருவாக்கப்படும் இந்த உலோகம், உலகின் சில இடங்களில் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதனால் தான் இதற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இவ்வளவு விலை உயர்ந்ததாக குறிப்பிடப்படும் உலோகத்தின் பயன்களுமே மிக காஸ்ட்லியானவை தான்.
குறிப்பாக புற்றுநோய் செல்களை மிகத் துல்லியமாகத் தாக்கி அழிக்க கலிபோர்னியம் 252 பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ உலகில் மிக பயனுள்ள ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. அணுமின் நிலையங்களில் உலைகளை தொடங்கி வைக்க, ஒரு ஸ்பார்க் ப்ளக் போலவும் செயல்படுகிறதாம். அதுமட்டுமல்ல பூமியின் ஆழத்தில் இருக்கும் கனிமங்கள் மற்றும் எண்ணெய் வளங்களை அடையாளம் காணவும், விமானங்களில் ஏதேனும் ஓட்டைகள் இருந்தாலும் கண்டறிய பயன்படுகிறது. இது மிகக் கடுமையான கதிரியக்கத்தை கொண்டது. எந்தளவுக்கு விலை உயர்ந்ததோ, அரிதான உலோகமோ, அதே அளவுக்கு சவாலான உலோகமும் கூட.
இதை நேரடியாக கையாள்வது எலும்புகளை பாதிக்கும் மற்றும் மரபணு மாற்றங்களை உண்டாக்கும். எனவே இது மிகவும் பாதுகாப்பான கவசங்களுக்கு பின்னாலேயே கையாளப்படுகிறது. மொத்தத்தில் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல இது மிக நுண்ணிய அளவுடைய உலோகம் என்றாலும், அதன் பலன்கள் மிகப்பெரியவை. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அதிகம் தான்.


Click it and Unblock the Notifications