தங்கத்திற்கு உலகெங்கிலும் தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது. சமீபத்தில் கண்டன நடிகை ரன்யா ராவ் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுவும் துபாயிலிருந்து அவர் இந்தியாவிற்கு வரும்போது பிடிபட்டார். இதனால் துபாய் மற்றும் இந்தியாவில் தங்க விலையின் வித்தியாசம் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. துபாயில் தங்கம் விலை இந்தியாவை விடக் குறைவு. இந்த விலை வேறுபாடுகளுக்கு என்ன காரணம்? துபாயிலிருந்து இந்தியா வரும் ஒருவர் எவ்வளவு தங்கத்தை எடுத்து வரலாம்? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
துபாயில் எந்த ஒரு வரியும் இல்லாமல் தங்கம் வாங்க முடியும். வரி இல்லாத காரணத்தினால், துபாய் தங்க வர்த்தக மையமாக திகழ்ந்து வருகிறது. இங்கு வர்த்தகர்கள் சந்தை விலையில் தங்கத்தை வாங்கிக் கொள்ளலாம். துபாயில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பல விற்பனையாளர்கள் போட்டி விலையில் தங்க விற்பனை செய்கின்றனர். அது மட்டுமின்றி துபாய் தங்கத்திற்கு இறக்குமதி வரியும் வசூலிப்பதில்லை.

இதற்கு அப்படியே நேர்மாறாக, இந்தியா இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 6 சதவீதம் வரி விதிக்கிறது. இந்தியாவிற்குள் தங்கத்தை கொண்டு வருவதற்கு வரம்புகள் உள்ளன. பொதுவாக இறக்குமதி வரி என்பது ஒரு நாட்டிற்குள் பிற நாட்டின் பொருட்களை கொண்டு வருவதற்கு அரசாங்கம் விதிக்கும் தொகை ஆகும்.
தங்கத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யும்போது இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக 1 கிராம் தங்கத்தின் உற்பத்தி விலை ஒரு குறிப்பிட்ட தொகையாக இருக்கும். அந்த தங்கத்தை இன்னொரு நாடு இறக்குமதி செய்யும் போது அதற்கு குறிப்பிட்ட தொகை வரி விதிக்கப்படும். இதனால் உள்நாட்டில் தங்க விலை அதிகரிக்கலாம்.
மார்ச் 11-ஆம் தேதி நிலவரப்படி துபாயில் 1 கிராம் 24 கேரட் தங்கம் 8,293 ரூபாயாக உள்ளது. ஆனால் இந்தியாவில் 1 கிராம் 24 கேரட் தங்கம் 8,749 ரூபாயாக உள்ளது
துபாயில் இருந்து ஒருவர் எவ்வளவு தங்கத்தை கொண்டு வர முடியும்?: பெண் ஒருவர் ஒரு லட்சம் மதிப்பிலான வரம்பிற்குள் தங்கத்தை கொண்டு வர முடியும். அதேசமயம் ஆணாக இருந்தால் 50,000 வரையிலான தங்கத்தை வரியின்றி கொண்டு வரலாம். அதுவே தங்கத்தின் அளவு அரசாங்கம் நிர்ணயித்த வரம்பை மீறினால் எடுத்து வரும் தங்கத்தின் அளவிற்கேற்ப கூடுதல் வரி விதிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications