இந்திய ரிசர்வ் வங்கி, கடந்த சில ஆண்டுகளாக தங்கம் வாங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தாண்டு ஜூன் மாதத்திலும் பெருமளவில் தங்கத்தை வாங்கியுள்ளது. இதன் மூலம், நாட்டின் தங்க கையிருப்பு மேலும் அதிகரித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிலவரங்கள் மற்றும் நாணய மதிப்பில் ஏற்படும் மாறுபாடுகளை எதிர்கொள்ளவும், நிதி நிலைமையை உறுதியாக வைத்திருக்கவும், ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிகமாக வாங்கி வருகிறது.
கடந்த ஜூன் மாதத்தில், ரிசர்வ் வங்கி சுமார் 400 கிலோ அளவுக்கு தங்கம் வாங்கியது. இதன் மூலம், ஜூன் மாத இறுதியில் இந்தியாவின் மொத்த தங்க கையிருப்பு 879.6 டன்னில் இருந்து 879.8 டன்னாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, 2025 ஏப்ரல் மாதத்தில் ரிசர்வ் வங்கி 57.5 டன் தங்கம் வாங்கியிருந்தது. இது அப்போது சீனா வாங்கிய மாதாந்திர தங்க அளவை மீறிய முக்கிய நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பில் தங்கத்தின் பங்கு கடந்த காலங்களைவிட கணிசமாக அதிகரித்துள்ளது. அதாவது, 8.9%-இல் இருந்து 12.1% வரை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை நிலைத்தன்மையும், பன்னாட்டு சந்தைகளில் அதன் மதிப்புத் திறனும் காரணமாக, தங்கம் பாதுகாப்பான முதலீடு என கருதப்படுவதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலர் உள்ளிட்ட நாணயங்களில் ஏற்படும் விலை மாற்றங்களை சமாளிக்க, தங்கம் போன்ற சொத்துகளில் முதலீடு செய்வது ரிசர்வ் வங்கியின் நிதி நெறிமுறையாக மாறியிருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தங்க கையிருப்புகளை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டு நாணய கையிருப்புகளை விரிவுபடுத்தவும், அதிக அபாயத்திற்கு உள்ளாகும் நிலையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
தங்கம் வாங்குவதன் பின்னணியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரி மிரட்டல்களால் உருவான உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் மற்றும் வர்த்தக போர் ஏற்படும் என்ற அச்சங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. இதனால், உலக சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியும் தங்கத்தை அதிகளவில் வாங்கி குவித்து வருகிறது,
இதுதொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், "ஒரு நாட்டின் தங்க கையிருப்பு அதிகமாக இருக்கும் போது, அந்த நாட்டின் பொருளாதார வலிமையும் உயர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கியும் கையிருப்புகளில் இருக்கும் தங்கத்தை அதிகரித்து வருகிறது.
இந்தியா தங்கத்தை வாங்குவதற்கான முக்கிய காரணம், உலக பொருளாதாரம் தற்போது மிகவும் குழப்பமான நிலைக்குள் சென்றுவிட்டது. அதே நேரத்தில், அமெரிக்க டாலரின் மதிப்பும் சில நேரங்களில் குறையக்கூடும் என்ற அச்சமும் உள்ளது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்பதால், ரிசர்வ் வங்கி தங்கத்தை அதிகமாக வாங்குகிறது. தங்கம் நிலைத்திருக்கக்கூடிய சொத்தாக கருதப்படுவதால், வருங்காலத்தில் பொருளாதார சரிவுகள் ஏதேனும் நிகழ்ந்தால், அது நாட்டையே பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications