இந்திய மக்களையும், தங்கத்தையும் ஒருபோதும் பிரிக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் காரணத்தால் மக்கள் தங்கம் வாங்குவதை குறைத்துள்ளனர். இதற்கு மாறாக ஆர்பிஐ தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்து வருகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்க இருப்பை அதிகரிப்பதை தீவிரப்படுத்தி , உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவை ஒரு வலிமையான நாடாக நிலைநிறுத்தியுள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், ஆர்பிஐ 57.5 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, இது 2017க்கு பிறகு இரண்டாவது அதிகப்படியான தங்க கொள்முதல் ஆகும்.

இதன் விளைவாக, மார்ச் 2025 முடிவில் இந்தியாவின் மொத்த தங்க இருப்பு 880 டன்னாக உயர்ந்துள்ளது, இது 2020 நிதியாண்டில் இருந்த 653 டன்னிலிருந்து 35% அதிகமாகும். இந்த உயர்வின் மூலம், தங்க இருப்பு அதிகம் வைத்துள்ள நாடுகள் பட்டியலில் 2015ல் உலகளவில் 10வது இடத்தில் இருந்த இந்தியாவை, தற்போது 7வது இடத்திற்கு உயர்த்தியுள்ளது. உலக தங்க கவுன்சிலின் தகவலின்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கத்தின் பங்கு 2021ல் 6.86% ஆக இருந்தது, தற்போது இதன் பங்கீடு 11.35% ஆக உயர்ந்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தை ஏன் வாங்கிக்குவிக்கிறது..?
ஆர்பிஐ தங்கத்தை அதிகளவில் வாங்குவதற்கு, உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளும், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்ற இறக்கங்களும் முக்கிய காரணங்களாக உள்ளன.
பேங்க் ஆஃப் பரோடாவின் தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், "டாலரின் மதிப்பு சமீப ஆண்டுகளில் அதிகமாக உயர்ந்துள்ளது. டாலர் ஆதிக்கம் மூலம் ஏற்படும் தாக்கத்தை குறைக்க தங்கம் பாதுகாப்பான மாற்றாக உள்ளது." என தெரிவித்துள்ளார்.
ஜனவரி 2025ல் 110ஐ தொட்ட டாலர் குறியீடு, தற்போது 100க்கு கீழே வீழ்ந்துள்ளது, இத்தகைய சூழ்நிலையில் தங்கம் அதிகமாக வாங்கும் போது இது டாலர் இருப்பில் ஏற்படும் பாதிப்பை தணிக்க முடியும். டாலர் மதிப்பு குறைந்து வருவதால், ஆர்பிஐ தங்கத்தின் பங்கை அதிகரிப்பது புத்திசாலித்தனமான முடிவாக பார்க்கப்படுகிறது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் இருக்கும் நாடுகளும் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது, இதன் மூலம் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை கட்டுப்படுத்த முடியும்.
இதேபோல் உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் நிலையற்ற தன்மைகளுக்கு மத்தியில் ஆர்பிஐயின் 2022 செப்டம்பர் முதல் 214 டன் தங்கத்தை லண்டன் பாதுக்காப்பு கிடங்கில் இருந்து இந்தியாவுக்கு மாற்றியது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் உலகளாவிய பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருந்தது மட்டும் அல்லாமல் போர் அச்சமும் அதிகளவில் இருந்தது. இதை கருத்தில் கொண்டு ஆர்பிஐ தனது தங்க இருப்பை இந்தியாவுக்கு மாற்றியது.
தங்க விலைகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், ஆர்பிஐ உட்பட உலகளாவிய பிற மத்திய வங்கிகளும் தங்கத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ரீடைல் சந்தையில் டிமாண்ட் குறைந்திருக்கும் வேளையிலும் சந்தையில் தொடர்ந்து தங்கத்திற்கு டிமாண்ட் இருந்துக்கொண்டே இருக்கிறது.
இதேபோல் பிரிக்ஸ் நாடுகள் தங்கத்தை அடிப்படையாக கொண்ட கிரிப்டோகரன்சியை அறிமுகம் செய்து அதை பிரிக்ஸ் நாடுகள் மத்தியிலான வர்த்தகத்திற்கு பயன்படுத்தும் முக்கியமான திட்டமும் ஆலோசனையில் உள்ளது. இதனால் சீனா கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியான தங்கத்தை வாங்கி வருகிறது. மேலும் சீனாவின் முக்கிய இன்சூரன்ஸ் நிறுவனங்களை தங்கம் வாங்குவதற்கு அனுமதி அளித்துள்ளது.
ஆர்பிஐயின் தங்க சேமிப்பு, இந்தியாவின் பொருளாதார பாதுகாப்பை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள முக்கிய அணுகுமுறையாக திகழ்கிறது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை



Click it and Unblock the Notifications