சென்னை: இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் புகழ் பெற்ற உணவாக மாறி இருக்கிறது சிக்கன் 65. கடந்த 2024 ஆம் ஆண்டில் உலக அளவில் கோழிக்கறியில் வறுத்து செய்யும் மிகச்சிறந்த உணவுகளின் பட்டியலில் சிக்கன் 65 க்கு மூன்றாவது இடம் கிடைத்தது என்ற ஃபுட் அட்லாஸ் என்ற அமைப்பு தெரிவித்தது.
ஒவ்வொரு வருடமும் மக்களால் ருசித்து உண்ணப்படும் உணவுகளை பிரித்து அதில் முன்னிலை வகிக்கும் உணவுகளின் பட்டியலை ஃபுட் அட்லாஸ் வெளியீடு செய்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிக்கன் 65 மூன்றாவது இடத்தில் இருக்கிறது. கடந்தாண்டு இந்த பட்டியலில் இந்தியாவிலிருந்து இடம் பெற்ற ஒரே உணவு என்ற பெருமையும் இதற்கு உண்டு .

சிக்கன் 65 சென்னை மவுண்ட் ரோடில் உள்ள புகாரி ஹோட்டலில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. சிக்கனில் செய்வது சரி அது என்ன 65 என பெயர் வந்தது என்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உதாரணமாக இதில் பயன்படுத்தப்படும் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு சிக்கன் 65 என பெயர் சூட்டப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். ஒரு தரப்பினர் 1965 ஆம் ஆண்டில் தான் இது அறிமுகம் செய்யப்பட்டது அதை குறிப்பிடும் வகையில் இதற்கு சிக்கன் 65 என பெயர் சூட்டப்பட்டதாக கூறுகின்றனர்.
1951 ஆம் ஆண்டு ஏ.எம். புகாரி என்பவரால் சென்னை மவுண்ட் ரோடில் தொடங்கப்பட்டது தான் புகாரி ஹோட்டல். தமிழ்நாட்டில் Fine Dining என்ற கான்செப்ட்டை கொண்டு வந்த முதல் உணவகம் புகாரி ஹோட்டல் என சொல்லப்படுகிறது. ஆங்கிலேயர்களும் கூட அப்போது புகாரி ஹோட்டலில் வந்து விரும்பி உணவு உண்பார்களாம்.
குறிப்பாக ராணுவ வீரர்களுக்கு பிடித்த ஹோட்டல் இது என சொல்லப்படுகிறது. அப்படி ஒரு வீரர் உணவருந்த வந்த போது புகாரி ஹோட்டலில் கிடைக்கும் உணவு மெனுவில் பல்வேறு உணவுகள் இடம் பெற்றிருந்தன. ராணுவ வீரர் ஒருவர் எண் 65 என்ற பக்கத்தில் இருந்த சிக்கன் ஸ்டாட்டரை ஆர்டர் செய்து இருக்கிறார். அதன் ருசி அவருக்கு பிடித்த போகவே அவர்தான் சிக்கன் 65 என என்ற பெயரில் அதனை பிரபலப்படுத்தியதாகவும் அவ்வாறே சிக்கன் 65 என்ற பெயர் உருவானது என்று சொல்லப்படுகிறது.
புகாரி ஹோட்டலின் சிக்கன் 65 செம ஹிட்டானது, இதனை ருசிப்பதற்காகவே மக்கள் இங்கே வருகை தர தொடங்கினார்களாம். பின்னர் ஏ எம் புகாரி தன்னுடைய ஹோட்டலில் பல்வேறு புதுமைகளை கொண்டு வந்தார். குறிப்பாக உணவருந்தும் இடத்தில் ஜூக் பாக்ஸ் வைத்து பல்வேறு சினிமா பாடல்களை ஒலிபரப்பினார். இது மக்களுக்கு புதுமையானதாக இருந்ததால் பலரும் இந்த ஹோட்டலுக்கு விரும்பி வரத் தொடங்கினார்களாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications