பிஸ்லெரி நிறுவனத்தின் சுமார் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான வணிகத்தினை டாடா நுகர்வோர் நிறுவனம் வாங்கவுள்ளதாக சில தினங்களுக்கு தகவல்கள் வெளியாகியது.
இது குறித்தான பேச்சு வார்த்தை தீவிரமாக நடந்து வருவவதாகவும் தகவல்கள் வெளியாகின.
பிஸ்லெரி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகியாக ரமேஷ் செளஹான், பிஸ்லெரியை வாங்க அடுத்தகட்ட விரிவாக்கத்துக்கு கொண்டு செல்ல, சரியான ஆள் யாரும் இல்லாததால், இந்த நிறுவனத்தை விற்கும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரமேஷ் செளஹானின் மகள் ஜெயந்தி செளஹான் ஏன் பிஸ்லெரியை நடத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
டாடா- பிஸ்லெரி வணிகம்
முன்னதாக பல ஆண்டுகளுக்கு ரமேஷ் செளஹான் குளிர்பான விற்பனை நடவடிக்கையிலும் ஈடுபட்டு வந்தார். இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்போதுள்ள நிர்வாகமே தொடரும் எனவும், அதன் பிறகே டாடா குழுமம் கையாளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிறுவனம் ஏற்கனவே டாடாவுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், தற்போது மீண்டும் இறுதி கட்டத்தினை எட்டியுள்ளது.
செளஹான் வருத்தம்
இதற்கிடையி சில தினங்களுக்கு முன்பே செளஹான், டாடா குழுமம் பிஸ்லெரியை சிறப்பாக வழி நடத்தி செல்லும் என கூறியிருந்தார். எனினும் பிஸ்லெரியை விற்பனை செய்வது என்பது மிக வருத்தமாக இருக்கிறது. எனினும் வேறு வழியில்லாதபட்சத்தில் டாடா குழுமத்திடம் விற்பனை செய்யவுள்ளதாகபும் கூறியிருந்தார்.
பிஸ்லெரியின் வாரிசு
பிஸ்லெரி நிறுவனம் தொடர்ந்த லாபம் ஈட்டி வரும் நிறுவனமாக உள்ளது. இப்படி லாபம் ஈட்டி வரும் ஒரு நிறுவனத்தை ஏன் அவரது மகள் ஏற்று நடத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ரமேஷ் செளஹானின் ஒரே மகள் ஜெயந்தி செளஹான் ஆடை வடிவமைப்பாளர் படிப்பினை படித்தவர். இன்றைய மாடர்ன் ஆடைகளை விரும்பி அணியக் கூடியவராக அறியப்படுகிறார். இது தவிர புகைப்பட கலை மற்றூம் நவீனமான தோற்றம் அளிப்பது குறித்த கலை படிப்பை லண்டில் படித்து முடித்தார்.
ஆர்வமில்லை
37 வயதான ஜெயந்தி தொடர்ந்து தனது துறை சார்ந்த வணிகங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் பல வருடங்களாக கடினமாக உழைத்து வளர்த்தெடுத்த பிஸ்லெரி நிறுவனத்தை தற்போது நிர்வகிக்க ஆள் இல்லை என்று வருத்துடன் கூறியுள்ளார்.
24 வயதில் வணிக பயணம்
ஜெயந்தி தனது சிறு வயதில் இருந்தே வெளி நாட்டில் தனது நேரத்தினை அதிகம் செலவிட்டுள்ள நிலையில், அவர் படித்ததும் வெளி நாட்டில், அதுவும் ஆடை வடிவமைப்பு துறை. jrc என்று அறியப்படும் ஜெயந்தி, தனது 24 வயதில் தந்தையின் வழிகாட்டுதல் படி தனது பயணத்தை தொடங்கினார். 2011ம் ஆண்டில் மும்பை அலுவலகத்தினை கண்கானிக்க தொடங்கியுள்ளார்.
பிஸ்லெரியின் எதிர்காலம்
தான் படித்த துறையை விடுத்து மற்ற துறைக்குள் நுழைய விரும்பாவிட்டாலும், இந்த காலகட்டத்தில் இதுபோன்ற லாபகரமான வணிகம் வேண்டாம் ஏன் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே எழுந்துள்ளது.
எப்படியிருப்பினும் லாபகரமான ஒரு நிறுவனத்தினை டாடா குழுமம் கையகப்படுத்துவது என்பது, அந்த வணிகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் எனலாம். பிஸ்லெரியின் எதிர்காலமும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவும் எனலாம்.


Click it and Unblock the Notifications