இந்தியர்கள் பார்த்து பார்த்து சேர்த்து வைக்கக்கூடிய ஒரு பொருளாக தங்கம் இருக்கிறது. செலவுகளை மிச்சப்படுத்தி சிக்கனப்படுத்தி நாம் கொஞ்சம் கொஞ்சமாக வாங்க சேர்க்கும் தங்கம் நம் இன்றியமையாத ஒரு சொத்து. தங்கத்தை வாங்குவது மட்டுமல்ல அதனை பாதுகாப்பதும் பெரிய வேலை தான்.
தங்கம் ஒரு சொத்து: இந்தியாவை பொறுத்தவரை ஒரு குடும்பத்தின் அந்தஸ்தாக பார்க்கப்படுகிறது தங்கம். இந்திய குடும்பங்களின் அனைத்து நல்ல காரியங்களிலும் தங்கத்திற்கு முக்கிய இடம் இருக்கிறது. அவசர காலத்திற்கு உடனே பணமாக மாற்ற கூடியது தங்கம். உறவுகளை வலுப்படுத்தி, பல நினைவுகளை நமக்கு தரக்கூடிய தங்க நகைகள் திடீரென நம்மிடம் இருந்து திருடப்பட்டு விட்டது அல்லது காணாமல் போய்விட்டது அல்லது தீயில் கருகி விட்டது , வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது எனும் போது அந்த இழப்பை நம்மால் அத்தனை எளிதாக ஈடு செய்து விட முடியாது.

நகை திருடுபோனாலும் கவலை வேண்டாம்: நகை திருடப்பட்டால் நாம் காவல்நிலையத்தில் புகார் அளிப்போம். காவல்துறையினரும் தேடுவார்கள் ஆனால் நிச்சயமாக நமக்கு அந்த தங்கம் திரும்ப கிடைக்குமா என்றால் 100% உத்தரவாதம் இல்லை. கிடைத்தால் நன்று, இல்லையென்றால் போனது போனது தான். ஆனால் இந்த ஒரு விஷயத்தை செய்து விட்டால் நாம் தங்க நகை திருடு போனால் கூட கவலைப்பட தேவையில்லை. பெரிய பெரிய நகை கடைகள் அனைத்தும் பின்பற்றும் ஒரு வழிமுறை தான் இது.
நகை காப்பீடு: நாம் நம்முடைய வாழ்க்கையை எப்படி காப்பீடு செய்கிறோமோ , நம்முடைய வாகனங்களை எப்படி காப்பீடு செய்கிறோமோ அதே போல தங்கத்தையும் காப்பீடு செய்யலாம். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி தங்கத்துக்கான காப்பீடு என ஒன்று இருக்கிறது என்பதே தெரிவதில்லை. சில சமயங்களில் தங்க நகை விற்பனை செய்யக்கூடிய கடைகளே கூட இந்த காப்பீடு திட்டங்களை வழங்குகின்றன.

எவ்வளவு பிரீமியம் : தங்க நகை வாங்கும்போது பில் போடும் சமயத்தில் நாம் காப்பீடு வேண்டுமென கேட்டு வாங்கலாம். வழக்கமாக தங்கத்தின் மொத்த மதிப்பில் 1 முதல் 2 சதவீதத்திற்கும் குறைவான தொகை தான் பிரீமியம் தொகையாக வரும் என இந்த துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில் வீடுகளில் புகுந்து கொள்ளை , சாலையில் நடக்கும் போது கழுத்தில் இருக்கும் தங்க செயின்கள் பறிக்கப்படுவது போன்ற சம்பவங்களை நாம் அதிகம் காண முடிகிறது.
ஏன் அவசியம்?: தற்போது தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தில் இருப்பதால் தங்க நகை திருட்டு என்பது பல மடங்கு அதிகரித்துவிட்டது. வங்கி லாக்கரில் இருக்கக்கூடிய நகைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை . மேனேஜர்கள் வங்கியில் வேலை செய்யக்கூடியவர்களே அவற்றை திருடிவிடும் அளவிற்கு நிலைமை சென்று விட்டது . வங்கிகள் இது போன்ற சமயத்தில் திருடு போன நகைக்கான மொத்த இழப்பை நமக்கு தராது.

எதை காப்பீடு செய்யலாம்: இத்தகைய சூழலில் தான் தங்க நகை காப்பீடு திட்டங்கள் நமக்கு கை கொடுக்கின்றன. தங்க நகைகளை நாம் காப்பீடு செய்யும் பட்சத்தில் திருடு போன நகையின் மொத்த மதிப்பும் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். தங்க நகை மட்டுமல்ல, வைரம், வெள்ளி ,நவரத்தின நகைகளையும் காப்பீடு செய்து கொள்ளலாம். வங்கி லாக்கர், வீட்டு பீரோவில் இருக்கும் நகைகள் , நாம் அணியும் நகைகளையும் காப்பீடு செய்ய முடியும்.
எதற்கெல்லாம் காப்பீடு கிடைக்கும்: உங்களின் நகை திருடுபோய்விட்டது, வீடு புகுந்து கொள்ளை, சாலையில் செல்லும் போது செயின் பறிப்பு, வங்கி லாக்கரில் இருந்து களவாடப்பட்டது, தீ விபத்து, வெள்ளப்பெருக்கு , நிலநடுக்கம் ஆகியவற்றில் தங்கத்தை இழந்திருந்தால் நிச்சயம காப்பீடு தொகை கிடைக்கும். தங்கத்தின் மதிப்பில் 95% வரை காப்பீடு தொகையாக கிடைத்துவிடும்.
எதற்கெல்லாம் கிடைக்காது: உங்களின் கவன குறைவால் தங்க நகை காணாமல் போனது, நீங்க எங்கேனும் கொண்டு சென்று மறந்து வைத்து மாயமாகிவிட்டது, போர், பயங்கரவாதம், கலவரம் போன்ற நிகழ்வுகளில் தங்க நகை மாயமானால் அதற்கு காப்பீடு கிடைக்காது.
எப்படி கிளைம் செய்வது?: நகை காணாமல் போன உடன் காவல்நிலையத்தில் புகார் தந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். முதல் தகவல் அறிக்கை நகல், ஓராண்டாக நகை கிடைக்கவில்லை என்பதற்கு காவல்துறை வழங்கும் அறிக்கை, நகைக்கான ரசீது, காப்பீடு திட்ட ஆவணம் ஆகியவற்றை கொண்டு விண்ணப்பம் செய்ய வெண்டும். காப்பீட்டு நிறுவனம் இதனை விசாரித்து உங்களுக்கான தொகையை கொடுக்கும்.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications