தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் கடந்த ஒரு வார காலமாகவே திடீரென உயர்வது, திடீரென சரிவது என ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியிலும் சாமானிய மக்கள் மத்தியிலும் பெரிய குழப்பத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த வியாழக்கிழமை வரலாற்று உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி மூன்றே நாட்களில் பெரும் சரிவை சந்தித்தது. நேற்று இரவு உயர்ந்த தங்கம் விலை இன்று காலை சரிவடைந்துள்ளது. தங்கம் விலை இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு போக்கினை கொண்டிருப்பதால் எப்படி தான் சொத்து சேர்ப்பது என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானி இந்தியர்கள் என்ன செய்தால் தங்களுடைய பணத்தை பல மடங்கு பெருக்க முடியும் என்பது குறித்து முக்கியமான அறிவுரையை வழங்கியிருக்கிறார்.

மும்பையில் முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ஜியோ பிளாக் ராக் நிறுவனத்தின் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய முகேஷ் அம்பானி கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா 60 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தங்கத்தையும் 15 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வெள்ளியையும் இறக்குமதி செய்து இருக்கிறது. இவை அனைத்தும் நம்மிடம் ஒரு சேமிப்பாக மட்டுமே இருக்கிறது. இதனை நாம் ஆக்கபூர்வமான முறையில் எதற்கும் பயன்படுத்தவில்லை என்கிறார்.
தங்கமும், வெள்ளியும் நமக்கு பாதுகாப்பான சொத்துக்களாக இருக்கின்றன ஆனால் நாட்டின் பொருளாதாரத்தில் இவற்றின் பங்கு இருக்கிறதா என பார்த்தால் இல்லை. ஆனால் இதற்கு தான் அதிக பணம் செல்கிறது என்கிறார். பொதுமக்கள் இப்படி தங்கம், வெள்ளியை வாங்குவதற்கு மாற்றாக மூலதன சந்தைகளில் முதலீடு செய்தால் உங்களுடைய வருமானம் காம்பவுண்டிங் முறையில் அதிகரிக்கும் என கூறியிருக்கிறார்.
அதாவது தங்கம், வெள்ளி வாங்கி வெறுமனே வீட்டில் செயலற்ற சொத்துக்களாக வைத்திருப்பதற்கு மாற்றாக வளர்ந்து வரக்கூடிய இந்தியா போன்ற ஒரு பொருளாதார நாட்டில் மக்கள் தங்களுடைய பணத்தை பொருளாதார வளர்ச்சிக்கு வணிகங்களின் வளர்ச்சிக்கும் வழங்கி முதலீடு செய்ய வேண்டும் என்கிறார். அந்த வகையில் உங்களுடைய பணமும் இரட்டிப்பாகும் எனக் கூறியிருக்கிறார். தங்கமும், வெள்ளியும் உங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது ஆனால் அது புதிதாக எந்த ஒரு மதிப்பையும் உங்களுக்கு உருவாக்கி தருவதில்லை.
அதுவே மூலதன சந்தைகள் அதாவது பங்குச்சந்தைகள் போன்றவற்றி செய்யக்கூடிய முதலீடு நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் உங்களுடைய செல்வத்தையும் அதிகரிக்கச் செய்யும் என தெரிவித்திருக்கிறார். பாரம்பரியமாகவே இந்தியர்கள் தங்கத்தில் தான் முதலீடு செய்து வருகிறார்கள் எனும் நிலையில் அவருடைய இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதாவது பங்குச்சந்தையில் நாம் முதலீடு செய்யும்போது ஒரு குறிப்பிட்ட நிறுவனம் வளரும், இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் பெருகும், நாட்டின் பொருளாதாரம் உயரும், புதிய கண்டுபிடிப்புகள் கிடைக்கும் உள்கட்டமைப்புகள் அதிகரிக்கும் என கூறுகிறார்.
இது அதிகரிக்கும் போது நீங்கள் செய்த முதலீடும் உங்களுக்கு அதிகரிக்கும் என்கிறார். அடுத்த அடுத்த பல ஆண்டுகளுக்கு இந்தியா தான் உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடையக்கூடிய ஒரு பொருளாதாரமாக இருக்கிறது எனும் போது அதன் பலனை மக்களும் பெற வேண்டும் என்றால் மூலதன சந்தையில் முதலீடு செய்யுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications