இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றங்கள் மூலமும், அதிகளவிலான வங்கி மோசடி காரணமாகவும் இந்திய வங்கிகளில் வாராக் கடன் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இந்த வாராக் கடன்களுக்கு விரைவாகத் தீர்வு காணவும், அதேவேளையில் பொதுத்துறை வங்கிகளின் நிதி நிலை மற்றும் கணக்குப் புத்தகங்களை மேம்படுத்தவும் கடந்த பட்ஜெட் அறிக்கையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வாராக் கடன் வங்கி என அமைப்பை அறிவித்தார்.
இந்த வாராக் கடன் வங்கியாக விளங்கும் National Asset Reconstruction Company Ltd (NARCL) ஜூலை மாதமே நிறுவப்பட்டாலும், ரிசர்வ் வங்கியிடம் இருந்து இன்னமும் உரிமம் பெறவில்லை.
30,600 கோடி ரூபாய் உத்தரவாதம்
இந்த நிலையில் தான் நேற்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இந்த வாராக் கடன் வங்கிக்கு 30,600 கோடி ரூபாய் அளவிலான செக்யூரிட்டி ரெசிப்ட் வாயிலாக உத்தரவாதம் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உத்தரவாதம் அடுத்த 5 ஆண்டுக் காலம் வரையில் மட்டுமே அளிக்கப்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
செக்யூரிட்டி ரெசிப்ட் என்றால் என்ன..?
வங்கிகளிடம் இருந்து வாராக் கடனை NARCL அமைப்பு வாங்கும் போது அதற்குச் செக்யூரிட்டி ரெசிப்ட் வாயிலாக அரசு உத்தரவாதம் கொடுக்கும். NARCL அமைப்பு அந்த வாரக் கடனை முறையாக ஆய்வு செய்து சந்தையில் விற்பனை செய்ய நிதி திரட்டி வாராக் கடன் பாதிப்பைக் குறைக்க முடியும்.
5 வருடம் மட்டும் ஏன்..?
தற்போது அறிவிக்கப்பட்டு உள்ள திட்டத்தின் படி NARCL அமைப்புக்கு 5 வருடத்திற்கு மட்டுமே கடன் உத்தரவாதம் அளிக்கப்படும் நிலையில், 5 வருடத்திற்குப் பின்பு இந்த அமைப்பு வெற்றிகரமாக இயங்கவில்லை என்றால் மூடப்பட வாய்ப்பு உள்ளது.
வங்கிகளே போதும்..
இதற்கு முக்கியக் காரணம் வங்கிகளிடம் இருக்கும் வாராக் கடன் சொத்துக்களை விற்பனை செய்ய முடிந்தால் வங்கிகளே கட்டாயம் விற்பனை செய்திருக்க முடியும், ஏற்கனவே பல நிறுவன கடன்களையும், சொத்துக்களையும் வங்கிகள் விற்பனை செய்துள்ளது.
NARCL அமைப்பு எதற்காக
இந்த NARCL அமைப்பு மூலம் பொதுத்துறை வங்கிகளில் இருக்கும் வாராக் கடனை ஒன்று திரட்டவும், பணிகளை வேகப்படுத்த முடியும், ஆனால் 5 வருடத்தில் இதற்குத் தீர்வு காண முடியுமா என்றால் அது கட்டாயம் மிகப்பெரிய கேள்வி தான்.
22 பெரிய வாராக் கடன்
NARCL அமைப்பு முதல் கட்டமாக 22 பெரிய வாராக் கடன் கணக்குகளுக்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மதிப்பு மட்டும் 89,000 கோடி ரூபாய். மேலும் NARCL அமைப்பு உரிமம் பெற வங்கிகள் அமைப்பு ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
20 சதவீதம் மட்டுமே
இந்த 89,000 கோடி ரூபாய் வாராக் கடனில் NARCL அமைப்பு மூலம் எந்த அளவிற்குப் பணத்தைத் திரும்பப் பெற முடியும் என CNBC தொலைக்காட்சியில் சந்தை வல்லுநர்களிடம் கேட்ட போது 15 முதல் 20 சதவீதம் எனக் கூறினர். ஆனால் அரசு இதைவிடவும் அதிகமாகத் தொகையை வசூலிக்க முடியும் என நம்புகிறது.
5 வருடத்திற்குப் பின்பு
இந்தத் திட்டம் சாத்தியமாகாத பட்சத்தில் NARCL அமைப்பு 5 வருடத்திற்குப் பின்பு மூடப்பட்டு, வங்கிகளிடம் இருந்து NARCL அமைப்பு கைப்பற்றிய சொத்துகளைக் கலைக்க வேண்டிய நிலை வரும்.
ரூ.6,000 கோடி முதலீடு
NARCL அமைப்பு ஜூலை மாதம் மும்பையில் நிறுவப்பட்டு, 8 பொதுத்துறை வங்கிகள் பங்குகளைப் பெற உள்ளது மட்டும் அல்லாமல் சுமார் 6000 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த NARCL அமைப்பு அல்லது வாராக் கடன் வங்கி அமைக்கப்பட உள்ளது.
வெற்றி பெறுமா..?
இந்திய வங்கிகளில் இருக்கும் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வாராக் கடனை NARCL அமைப்பிற்கு மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அவை அனைத்தும் ரிசர்வ் வங்கி உரிமம் கொடுத்து முதல் வாராக் கடன் சொத்துக்குத் தீர்வு காணும் போது தான் இந்த NARCL கட்டமைப்பின் வெற்றி உள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications