டெல்லி: கடந்த வாரம் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை சேர்ந்த குகேஷ் வெற்றி பெற்று இளம் வயதிலேயே உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்றார். உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தோடு குகேஷுக்கு 11 கோடி ரூபாய் ரொக்க பணமும் பரிசாக கிடைக்கிறது.
இந்த பரிசு தொகைக்காக குகேஷ் செலுத்த போகும் வரியை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வைத்து பல்வேறு மீம்களை பகிர்ந்து வருகின்றனர். இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் வரி விகிதங்களின் அடிப்படையில் பார்க்கும்போது 11.34 கோடி ரூபாய் பரிசு தொகையில் குகேஷ் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை அரசுக்கு வரியாக செலுத்த வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே இந்தியாவின் வரி நடைமுறைகள் குறித்து தொடர்ந்து புகார் கூறி வரக்கூடிய நம்முடைய நெட்டிசன்கள் இந்த தகவலை பயன்படுத்தி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை வைத்து பல்வேறு மீம்களை பகிர்ந்துள்ளனர் அதில் ஒருவர் குகேஷுக்கு கிடைத்த பரிசு தொகையிலிருந்து வரியை பெற்றுக் கொள்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமான நிலையத்தில் காத்திருக்கிறார் என மீம் வெளியிட்டுள்ளார்.

மற்றொரு பயனர் எப்பொழுதெல்லாம் ஒரு நபர் பெருந்தொகையை பரிசாக பெறுகிறாரோ அப்பொழுதெல்லாம் நிர்மலா சீதாராமன் இப்படித்தான் தயாராக இருப்பார் என ஒரு மீம் வெளியிட்டுள்ளார். ஒரு நபர் 11.45 கோடி ரூபாய் பரிசு தொகை அதற்கு செஸ் போட்டி பாணியிலேயே செக் எனக் குறிப்பிட்டு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4.67 கோடி வரி என குறிப்பிடுவதைப் போல மீம் பகிர்ந்துள்ளார்.

குகேஷ் செஸ் சாம்பியன்ஷிப்பையும் 11 கோடி ரூபாய் ரொக்கத்தையும் வென்றிருக்கிறேன் என கூறுவதாகவும், அதற்கு நிர்மலா சீதாராமன் வாழ்த்துக்கள், நீங்கள் தற்போது 4 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடுவதாகவும் ஒரு மீம் வெளியாகியுள்ளது. மற்றொரு பயனர் எப்போதெல்லாம் ஊதியம் பெறக்கூடிய தனிநபர்கள் வருமான வரி பெறக்கூடிய பிரிவுக்கு வருகிறார்களோ அப்பொழுதெல்லாம் நிர்மலா சீதாராமன் மகிழ்ச்சி அடைவதைப் போல மீம் வெளியிட்டுள்ளார்.

2024 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமானவரிக்கான வரம்புகளில் மாற்றங்களை கொண்டு வந்தார். இது நடப்பு நிதியாண்டில் இருந்தே செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறினர்.

புதிய வருமான வரி வரம்பு அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவில் குறைந்தபட்சம் 3 லட்சம் ரூபாயிலிருந்து 7 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் ஈட்டக்கூடிய தனி நபர்கள் 5% வருமான வரி செலுத்த வேண்டும் . அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 30% வருமான வரி விதிக்கப்படுகிறது.
இந்த வருமான வரியை தவிர, வரி செலுத்தக்கூடிய அனைத்து நபர்களுமே அவர்கள் செலுத்தும் வரி தொகையில் 4 சதவீதம் தொகையை கூடுதலாக சுகாதாரம் மற்றும் கல்விக்கான செஸ் வரியாக செலுத்தியாக வேண்டும். இந்தியாவில் இவ்வாறு அதிகபட்ச வரி விகிதங்கள் இருப்பது ஊதியம் பெறக்கூடிய தனிநபர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடுத்தெருவுக்கு வந்த Raymonds அதிபர்.. மகனால் தூக்கிவீசப்பட்ட தந்தை-யின் சோக கதை.!!/
மத்திய அரசு வரி வரம்புகளில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென பலமுறை கோரிக்கை வைத்திருந்தாலும் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுக்கவில்லை . எனவே எப்பொழுதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்பொழுது எல்லாம் இது போன்ற மீம்களை பகிர்ந்து நெட்டிசன்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications