உலகில் தங்கத்துக்கு மேல் பிளாட்டினம் தான் காஸ்ட்லியான மெட்டலாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் அவற்றை தூக்கி சாப்பிடும் அளவுக்கு பல்லேடியம் என்ற மெட்டலின் விலை நிலவுகிறது.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம், யுரேனியம் போன்ற மெட்டல்கள் போல பல்லேடியமும் அதிக டிமாண்டை கொண்டிருக்கிறது.
தீமை விளைவிக்கும் புகையின் நச்சுத்தன்மையை பல்லேடியம் குறைப்பதால் கார் கம்பெனிகள் பெருமளவில் பல்லேடியத்தை கொள்முதல் செய்கின்றன.

பல்லேடியம் உலோகத்தின் உற்பத்தி மற்றும் சப்ளை குறைவாக இருப்பதால் அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது. இது எல்லா நாடுகளிலும் கிடைப்பதில்லை. தென்னாப்பிரிக்காவில் பிளாட்டினத்தின் உப பொருளாக பல்லேடியம் உற்பத்தி செய்யப்படுகிறது. ரஷ்யாவிலோ நிக்கலின் உப பொருளாக பல்லேடியம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரு நாடுகளிலும் பெருமளவு பல்லேடியம் இருப்பு உள்ளது.
உலகிலேயே அரிதான உலோகம் பல்லேடியம் தான். தென்னாப்பிரிக்கா, ரஷ்யா தவிர வேறு எந்த நாடுகளிலும் பல்லேடியம் கிடைப்பதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் விலை கடந்த ஓராண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 10 கிராம் நார்மல் பல்லேடியம் ரூ.29,000 வரை விற்கப்படுகிறது.
2000 ஆம் ஆண்டில் இருந்து இந்த பல்லேடியம் விலை 900 சதவீதம் உயர்ந்துள்ளது. இதை கார் கம்பெனிகள் அதிகளவில் பயன்படுத்துவதால் எதிர்காலத்தில் பல்லேடியத்தின் விலை மிகக் கடுமையாக உயரும் எனக் கூறப்படுகிறது. அரிதான இந்த பல்லேடியம் மெட்டல் கேட்டலிட்டிக் ரியாக்ஷன்களுக்காக பல தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டாக, அன்சாச்சுரேட்டடு ஹைட்ரோகார்பன்களை ஹைட்ரோஜினேஷன் செய்வதற்கு பல்லேடியம் பயன்படுகிறது.
நகைகள் தயாரிப்பிலும் பல்லேடியம் பயன்படுத்தப்படுகிறது.
இதுமட்டுமல்லாமல் பல் சொத்தைகளை அடைப்பதற்கும் பல் அடைப்புகளுக்கும் இந்த மெட்டல் உபயோகப்படுத்தப்படுகிறது.
கார்களின் புகைபோக்கி அமைப்புகளில் பல்லேடியம் பயன்படுகிறது.
பல்லேடியம் போன்றே அரிதான ரோடியம் என்ற மெட்டலும் இதேபோன்று கார்களில் உள்ள புகைபோக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப் புகையின் விஷத்தன்மையை குறைப்பதற்கு இன்றியமையாத மெட்டலாக பல்லேடியம் விளங்குவதால் அதன் விலை மிக அதிகமாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications