தங்கம் என்பது ஒரு விலை மதிப்பற்ற உலோகம். பொதுவாக தங்கம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும், பெண்களுக்கு தங்கம் மீதான ஆர்வம் சற்று அதிகம் தான். தங்கம் அலங்காரத்திற்காக மட்டுமின்றி, வீட்டில் தங்கம் இருப்பது மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. அதேபோல், திருமணம் மற்றும் பிற கொண்டாட்டங்களுக்காக தங்கம் வாங்குவது கட்டாயமாகிவிட்டது. இந்த சூழலில் தான், இந்தியாவில் தங்கம் வாங்கும் முறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜோஸ் அலுக்காஸ் (Jos Alukkas) குழுமத்தின் நிர்வாக இயக்குநர் வர்கீஸ் அலுக்காஸ் (Varghese Alukkas) தெரிவித்துள்ளார்.
பழைய நகைகளை கொடுத்து புதிய நகை: இதுதொடர்பாக, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "மொத்த தங்க விற்பனையில் 50-60% புதிய நகைகளை வாங்குவது, பழைய நகைகளைக் கொடுத்து மாற்றுவதன் மூலமே நடப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், தங்கத்தை மக்கள் இப்போது ஒரு சிறந்த முதலீடாகவும், பணப் பற்றாக்குறை காலங்களில் பணப்புழக்கத்தை உருவாக்கும் ஒரு கருவியாகவும் பார்க்கத் தொடங்கியுள்ளனர். எனவே, அவர்களுக்குப் புதிய நகை தேவைப்படும்போது, அவர்களிடம் இருக்கும் பழைய நகைகளை கொடுத்துவிட்டு, புதிய டிசைன்களுடன் புதுப்பித்துக் கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தங்க விற்பனையில் மாற்றம்: அதாவது, நகை வாங்கும் பெரும்பாலானவர்கள், பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளை வாங்குவதையே முக்கியமான வழியாகக் கொண்டு வருகின்றனர். இதனால், புதிய முதலீடு இல்லாமல் புதுப்பிப்பு நடைபெறுவதால் தங்க விற்பனையின் மூலதனச் சூழ்நிலை மாறி வருகிறது என்பதைக் காட்டுகிறது. சமீபகாலமாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலைமைகள், புவிசார் அரசியல் பதட்டங்கள், டாலரின் மதிப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலையில், பெரும் ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
வழக்கத்தை மாற்றிய மக்கள்: இதனால், ஒரு பெரிய தொகையை முதலீடாக செய்து புதிய நகைகளை வாங்குவதை விட, தங்களிடம் இருக்கும் பழைய நகைகளை விற்று அல்லது கொடுத்துவிட்டு, புதிய மாடல்களில் நகைகளை பெற மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நகை வியாபாரிகளுக்கு, இந்த மாற்றம் ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது. பழைய நகைகளை மாற்றுவது, அவற்றின் தரம், தூய்மை, எடை மற்றும் செய்கூலி போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. அத்துடன், புதிய நகைகளுக்கான செய்கூலியை ஈட்டுவதும், பழைய நகைகளை உருக்கி மறுசுழற்சி செய்வதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

சிறப்பு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்: மேலும் பழைய தங்கத்தை மாற்றுவதன் மூலம், புதிதாக தங்கம் வாங்குவதற்கான தேவையை குறைத்துக் கொள்ளலாம். பல நகைக்கடைகள் பழைய தங்கத்தை எக்ஸ்சேஞ்ச் செய்யும்போது சிறப்பு சலுகைகளும், தள்ளுபடிகளும் வழங்குகின்றன. தங்கத்தின் விலையானது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப மாறுபடும் என்பதால், அதை எக்ஸ்சேஞ்ச் செய்வதற்கு முன், தற்போதைய தங்கத்தின் விலையை சரிபார்த்துக்கொள்வது நல்லது என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
பழைய தங்கத்திற்கு கூடுதல் மதிப்பு: தங்கம் வாங்குவோரை பொறுத்தவரை பழைய நகைகளைக் கொடுத்துவிட்டுப் புதிய நகைகளைப் பெறுவது என்பது ஒரு லாபகரமானதாக பார்க்கின்றனர். தங்கத்தின் விலை அதிகரிக்கும்போது, பழைய தங்கத்திற்கு கூடுதல் மதிப்பு கிடைக்கிறது. மேலும், புதிய தங்கம் வாங்க வேண்டுமென்றால் கூட, முழு தொகையும் செலுத்த வேண்டியிருக்காது. புதுவிதமான மாடல்களும் உங்களுக்கு கிடைக்கிறது. இந்தியாவில் ஹால்மார்க்கிங் மற்றும் BIS சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தங்கத்தின் தூய்மை மற்றும் தரத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications