தேர்தல் முடிவுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த 100 டன் தங்கம்.. ஆர்பிஐ செய்தது எதற்காக..?

சென்னை: இந்திய ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தங்கத்தை அதிகளவில் வாங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டு முழுவதும் ரிசர்வ் வங்கி வாங்கிய தங்கத்தை விட ஒன்றரை மடங்கு அதிக தங்கத்தை இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே வாங்கியுள்ளது.

இப்படி ஆர்பிஐ வாங்கும் தங்கத்தில் பெரும்பகுதியை வெளிநாடுகளில் சேமித்து வைத்துள்ளது. இந்த நிலையில் வெளிநாட்டு சேமிப்பு வால்ட்-ல் இருந்து ஒரு பகுதியை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியா வெளிநாடுகளில் ஏன் தங்கத்தை வைத்திருக்க வேண்டும்? அதன் நன்மைகள் என்ன? குறைபாடுகள் என்ன?

தேர்தல் முடிவுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு வந்த 100 டன் தங்கம்.. ஆர்பிஐ செய்தது எதற்காக..?

காசுபோட்டு வாங்கிய தங்கத்தை யாராவது வெளிநாட்டிலேயே வைத்திருப்பார்களா..? என்ற கேள்வி எல்லோருக்கும் இருக்கும், ஆனால் ஆர்பிஐ இதைக் காரணம் இல்லாமல் செய்யாது. இதேபோல் திடீரென வெளிநாட்டில் இருக்கும் தங்கத்தை திடீரென இந்தியாவுக்குக் கொண்டு வர என்ன நெருக்கடி என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

ரிசர்வ் வங்கியின் வெளிநாட்டுத் தங்கக் கையிருப்பு எவ்வளவு?: 2024 மார்ச் மாதம் 31 ஆம் தேதி இறுதி நிலவரப்படி, ரிசர்வ் வங்கி 822.10 மெட்ரிக் டன் தங்கத்தை வைத்திருந்தது. இதில், 408.31 மெட்ரிக் டன் தங்கம் நாட்டிற்குள் இருந்தது. மீதமுள்ள 387.26 மெட்ரிக் டன் தங்கம் இங்கிலாந்து வங்கி (Bank of England) மற்றும் சர்வதேச கணக்கீட்டு வங்கி (Bank for International Settlements - BIS) ஆகியவற்றின் பாதுகாப்பான கிடங்கில் வைத்திருந்தது. மேலும், 26.53 மெட்ரிக் டன் தங்கம் டெபாசிட் வடிவில் வைக்கப்பட்டிருந்தது.

வெளிநாடுகளில் ஏன் தங்கத்தை வைத்திருக்க வேண்டும்?: 1990-91 ஆம் ஆண்டில், இந்தியா வெறும் 15 நாட்களுக்கான இறக்குமதியை மட்டுமே நிதியளிக்கக்கூடிய அந்நிய செலாவணி கையிருப்பைக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில், 1991 ஆம் ஆண்டு மே மாதம் தனது தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை இங்கிலாந்து வங்கிக்கு அடகு வைத்தது.

அப்போது, 46.91 டன் தங்கத்தை இங்கிலாந்துக்கு அனுப்பி 405 மில்லியன் டாலர் கடனை பெற்றது, இதோடு ஜப்பான் வங்கியிடமும் சில அடகு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இந்தக் கடன் 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருப்பிச் செலுத்தப்பட்ட போதிலும், ரிசர்வ் வங்கி தங்கத்தை இங்கிலாந்து வங்கி காவலிலேயே வைத்திருக்க முடிவு செய்தது.

இதற்குக் காரணம், சான்றிதழ் வடிவில் இருக்கும் தங்கத்தை வர்த்தகத்திற்காகப் பயன்படுத்தி ஸ்வாப் ஒப்பந்தங்கள் செய்து சிறிய லாபத்தை ஈட்ட முடியும் என்பதே. மேலும், சர்வதேச சந்தைகளில் இருந்து தங்கத்தை வாங்கி வரும் ரிசர்வ் வங்கி, அவற்றை இங்கிலாந்து வங்கி கிடங்கில் வைத்திருப்பது சர்வதேச நிதி செயல்பாட்டுக்கு வசதியாக இருக்கும்.

வெளிநாடுகளில் தங்கம் வைத்திருப்பதின் ஆபத்து என்ன?: புவிசார் அரசியல் பதற்றங்கள் நிலவும் சமயங்களில், வெளிநாடுகளில் உள்ள சொத்துகளின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது. தற்போதைய சூழ்நிலையில், ரஷ்யாவின் வெளிநாட்டுச் சொத்துகள், முதலீடுகளை மேற்கத்திய நாடுகள் அவரவர் நாடுகளில் முடக்கியது.

இதேவேளையில் பிரிட்டன் பொருளாதாரம் தற்போது இருக்கும் சூழ்நிலையும் இந்தியாவுக்குப் பல கேள்விகளை எழுப்பியது. இதனால் பேங்க் ஆப் இங்கிலாந்தில் இருக்கும் தங்கத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது ஆர்பிஐ.

இதேபோல் ரஷ்யாவுடனான வர்த்தகம் காரணமாக இந்தியா சர்வதேச அளவில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம், இதனையும் கருத்தில் கொண்டு இந்திய சொத்துக்களை ஆர்பிஐ இந்திய மண்ணுக்குக் கொண்டு வந்துள்ளதாகவும் கருத்து நிலவுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கி, பிரிட்டன் நாட்டில் இருந்து கிட்டத்தட்ட 100 டன்னுக்கும் அதிகமான தங்கக் கட்டிகளை இந்தியாவுக்குக் கொண்டு வந்துள்ளது, இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது, காரணம், 1991 ஆம் ஆண்டுக்குப் பிறகு இவ்வளவு அதிகமாகத் தங்கம் ரிசர்வ் வங்கி தனது கஜானா-வில் சேர்த்தது இதுவே முதல் முறையாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+