முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டம் ஜூன் 24ஆம் தேதி முடிந்த நிலையில் ஜூன் 25ஆம் தேதி வர்த்தகத்தில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையும் என அனைத்து தரப்பினரும் கணித்த நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் 2,253.8 ரூபாயில் இருந்து இன்று 2081 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இந்த மாபெரும் சரிவுக்கு என்ன காரணம்..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
நேற்று நடந்த வருடாந்திர கூட்டத்தில் 75,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கிரீன் எனர்ஜி வர்த்தகம், மலிவு விலை ஸ்மார்ட்போனான ஜியோபோன் நெக்ஸ்ட், சவுதி ஆரம்கோ தலைவரை ரிலையன்ஸ் நிர்வாகக் குழுவில் சேர்த்தது எனப் பல முக்கிய அறிவிப்புகள் இருந்தது.
பங்குகள்
ஆனாலும் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ரிலையன்ஸ் பங்குகள் சரிந்து வருவது எதனால்..? பொதுவாக ரிலையன்ஸ் குழுமத்தின் வருடாந்திர கூட்டத்தில் வெளியிடும் அறிவிப்பு நாளில் பெரிய அளவிலான உயர்வை அடையவில்லை என்றாலும் அடுத்த நாள் சிறப்பான வளர்ச்சி அடையும்.
ஜூன் மாதம் வர்த்தகம்
ஜூன் மாதத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் ஜூன் 23 வரையில் சுமார் 12 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்தது, ஆனால் கடந்த 2 நாட்களில் மட்டும் ரிலையன்ஸ் பங்குகள் சுமார் 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.
முதலீட்டாளர்கள் மனநிலை
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ஸ்ட்ரீஸ் பங்குகள் முதலீட்டாளர்கள் இந்த வருடாந்திர கூட்டம் சவுதி ஆரம்கோ குறித்த முடிவுகளை எதிர்பார்த்தனர், அது நடக்காமல் போகவே லாப நோக்கத்தில் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர். இதன் வாயிலாகவே 2 நாட்களாக ரிலையன்ஸ் பங்குகள் சரிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications