சென்னை: இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கிவிட்டது விநாயகர் சதுர்த்தி தொடர்ந்து ஆயுத பூஜை, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை காலம் தான். இந்த காலத்தில் இந்தியாவில் மக்களிடையே நுகர்வு போக்கு அதிகமாக இருக்கும் எனவே நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தள்ளுபடிகளை அறிவிக்கும்.
பண்டிகை கால தள்ளுபடி: பண்டிகை என்றால் நிறுவனங்கள் போனஸ் வழங்குவது, சேமிப்புகளை மக்கள் கையில் எடுப்பது என பணப்புழக்கம் அதிகரித்து மக்கள் துணிமணிகள், வீட்டிற்கு தேவையான பொருட்கள், வாகனங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவார்கள். எனவே ஜவுளி கடைகள் தொடங்கி வாகன விற்பனை நிலையங்கள் வரை இந்த பண்டிகை காலத்தில் தங்களுடைய விற்பனையை பெருக்குவதற்காக பல்வேறு தள்ளுபடிகளை அள்ளி வீசுவார்கள். ஈ காமர்ஸ் தளங்களான அமேசான், பிளிப்கார்டிலும் பிக் பில்லியன் சேல்ஸ் தள்ளுபடிகள் வந்துவிடும்.

தள்ளுபடி அறிவிப்பில் குழப்பம்: இந்த ஆண்டு பண்டிகை காலம் தொடங்கிவிட்டது இருந்தாலும் நிறுவனங்கள் இன்னும் தங்களுடைய தள்ளுபடி தொடர்பான முடிவை எடுக்கவில்லை. ஏற்கனவே வாகன விற்பனை மந்த நிலையில் இருப்பதால் இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி பல தள்ளுபடிகளை அறிவித்து பெரிய அளவில் வாகன விற்பனையை முடித்துக் கொள்ளலாம் என நிறுவனங்கள் திட்டமிட்டு இருந்தன. இந்த சூழலில் தான் மத்திய அரசு ஜிஎஸ்டி வரிசையை திருத்தம் குறித்த அறிவிப்பை கொண்டு வந்திருக்கிறது .
ஜிஎஸ்டி வரி: வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே மக்களுக்கு பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்து விடும் என மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. முன்னதாகவே பல்வேறு டீலர்களும் தங்கள் வசம் விற்பனையாகாமல் இருக்கக்கூடிய பழைய மாடல் வாகனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடிகளை அறிவித்திருந்தார்கள். இதற்கு முக்கிய காரணம் ஜூலை மாதத்தின் இந்தியாவில் வாகனங்களின் விற்பனை 4.3 சதவீதம் குறைந்து இருந்தது. ஆனால் ஜிஎஸ்டி வரி குறைப்பு தானாகவே இந்த பொருட்களின் விலையை குறைத்துவிடும்.

வாகனங்கள் விலை குறையும்: எனவே தற்போது நிறுவனங்கள் இந்த தள்ளுபடியை நிர்ணயம் செய்வதில் பெரிய குழப்பத்தில் வந்து நின்று இருக்கின்றன. மக்களும் ஜிஎஸ்டி வரி குறைந்தால் வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை குறையும் என்பதால் தங்களுடைய ஷாப்பிங் திட்டத்தையே தள்ளி வைத்திருக்கிறார்கள். நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் அதில் எடுக்கப்படும் முடிவு அதன் பிறகு இந்த ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் முறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நிறுவனங்களின் தள்ளுபடிகளும் பொதுமக்கள் அவற்றை வாங்கும் விதமும் மாற்றம் காண இருக்கிறது.
மக்களே டபுள் தள்ளுபடி கிடைக்குமா?: டீலர்களை பொறுத்தவரை கைவசம் இருக்கும் பொருட்களை விற்பனை செய்து முடிப்பதா அல்லது லாபம் பார்ப்பதா என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். அரசின் ஜிஎஸ்டி வரி குறைப்பு பலனை நிறுவனங்களும் டீலர்களும் நேரடியாக மக்களிடம் கொண்டு சென்றால் மட்டுமே விற்பனை பெருகும் என்பதே உண்மை. எனவே டீலர்கள் தள்ளுபடியும் வழங்கி ஜிஎஸ்டி வரி குறைப்பும் நடந்தால் இந்த பண்டிகை கால நுகர்வு பல மடங்கு பெருக வாய்ப்புள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் இதனை நாம் தெரிந்து கொள்ள முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications