ஜெயின் மதத்தில் பால் தீட்சை என்ற பழமையான பழக்கம் உள்ளது. இதில், சில சமயங்களில் 8 வயது முதல் முதியவர்கள் வரையில் வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் பொருள் உலகைத் துறந்து துறவிகள் அல்லது சன்னியாசி ஆக மாறுகின்றனர்.
இப்படி துறவி வாழ்க்கையை மேற்கொள்ளும் 100ல் 90 பேர் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், பல நூறு கோடி சொத்து மதிப்புடன் 4-5 கார்கள், ஆடம்பர வீடு என சகல வசதிகளும் கொண்டு உள்ளவர்கள் என்பது தான் அதிர்ச்சியான விஷயம்.

சமீபத்தில் குஜராத்தில் வசிக்கும் பணக்கார ஜெயின் தம்பதியினர் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான தங்களது சொத்துக்களை நன்கொடையாக வழங்கி, துறவறம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர். பாவேஷ் பண்டாரி மற்றும் அவரது மனைவி, பிப்ரவரியில் துறவு ஏற்கும் விழாவின் போது தங்கள் முழு செல்வத்தையும் ஜெயின் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினர். மேலும் இந்த மாத இறுதியில் நடைபெறும் நிகழ்வில் அதிகாரப்பூர்வமாகத் துறவற வாழ்க்கைக்குச் செல்ல உள்ளனர்.
ரூ.600 கோடி சொத்து வேண்டாம்.. துறவியான குஜராத் தொழிலதிபர் பன்வர்லால் ரகுநாத் தோஷி..!
இந்த தம்பதியினரின் முடிவு ஜெயின் சமூகத்தில் எளிமையாக எடுத்துக்கொள்ளப்பட்டாலும், வர்த்தக உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலும் வைர வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள குஜராத்தி ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் செல்வத்தில் திளைத்தாலும் ஒரு குடும்பத்தில் தலைமுறைக்கு ஒருவராவது துறவம் ஏற்கின்றனர்.
பணக்கார ஜெயின் சமூகத்தினர் ஏன் துறவும் ஏற்கின்றனர் என்ற கேள்விக்கு ஒரே பதில் தான். மறுபிறவி என்ற சுழற்சியிலிருந்து மோட்சம் அடைவது என்ற ஆன்மீக இலக்கை அடையவே இவ்வாறு துறவு பூணுகின்றனர். இது ஜெயின் சமூகத்தில் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ரூ.40,000 கோடி சொத்துகளை விட்டுவிட்டு துறவியான மலேசிய தமிழ் பணக்காரரின் மகன்
துறவற வாழ்க்கை மேற்கொண்டால் வெறுங்கால்களால் நடப்பது என்பதில் துவங்கி, ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு உண்பது, மின்சாரம் மற்றும் நவீனத் தொழில்நுட்பத்தைத் தவிர்த்து வாழ்வது, உணவு, உடை, இருப்பிடம் என அனைத்திலும் அடிப்படை மனிதர்களை போல வாழ்க்கையை கடைப்பிடிப்பது, வீட்டில் தங்காமல் ஜெயின் மடத்தில் தங்கி அனைத்து விதமான பணிகளையும் செய்வது என அவர்களது காலம் நகரும்.
ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானோர் செல்வந்தர்கள் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். குஜராத்தில் இச்சமூகத்தினர் மிகவும் அதிகம். சூரத் நகரத்தைச் சேர்ந்த பல இளம் பெண்கள், ஆண்கள், குழந்தைகள் எனவும், பல நேரத்தில் குடும்பம் குடும்பமாகவும் ஜெயின் மக்கள் துறவி வாழ்க்கையைத் தேர்வு செய்கின்றனர்.
வைர வியாபாரத்தை விட்டுவிட்டு துறவியான குஜராத் குடும்பம்..!
தீட்சை விழா என்பது ஜெயின் மதத்தில் ஒரு முக்கியமான சடங்காகும், இது துறவியின் ஆன்மீக பயணத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. தீட்சா மகோத்சவத்தின் (Diksha Mahotsav) போது, தனிநபர்கள் உலக ஆசைகளைத் துறந்து கடுமையான விரதங்களைக் கடைப்பிடிப்பதற்கு ஆரம்பப் புள்ளியாக அமைகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications