25000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து.. நாட்டையே உலுக்கிய முறைகேடு.. மேற்குவங்கத்தில் நடந்தது என்ன?

கொல்கத்தா, மேற்குவங்கம்: மேற்குவங்க மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மாநில பள்ளிக்கல்வித்துறை மூலம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலியிடங்களுக்கான பணிகள் நிரப்பப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களை விட கூடுதலானவர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டதும் தகுதியே இல்லாதவர்கள் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

25000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து.. நாட்டையே உலுக்கிய முறைகேடு.. மேற்குவங்கத்தில் நடந்தது என்ன?

மேற்குவங்க மாநில பள்ளி சேவை ஆணையம் எனப்படும் West bengal school service commission, 2016 ஆம் ஆண்டிலிருந்து 2020 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேரை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்காக நியமனம் செய்தது. இந்த பணியாளர்கள் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ விசாரணையும் நடத்தப்பட்டது.

இதனை அடுத்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த பணி நியமங்களை ரத்து செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் சுமார் 25 ஆயிரம் பேரின் பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. இது மம்தா பானர்ஜி அரசுக்கு பெரும் தலைவலியாக மாறியது.

இந்த உத்தரவை எதிர்த்து மேற்குவங்க அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என்றும் இந்த 25 ஆயிரம் பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்தது உறுதி என்றும் தீர்ப்பு தந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலத்தில் 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்புக்கு 12,195 உதவி ஆசிரியர்கள் பணிக்கும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு சுமார் 5 , 712 ஆசிரியர் பணியிடங்களுக்கும் ஆட்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டது. இது தவிர குரூப் சி பிரிவில் ஆசிரியர் அல்லாத 2067 பணியிடங்களுக்கும் ,குரூப் டி பிரிவில் 1956 பணியிடங்களுக்கும் ஆட்கள் தேவை என விளம்பரம் செய்யப்பட்டது.

மேற்குவங்க மாநில பள்ளி சேவை ஆணையம் 22,193 பணியிடங்கள் மட்டுமே காலியாக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் 25,753 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த தேர்வினை நடத்தி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கொல்கத்தா மாநில எஸ்எஸ்சி அமைப்பு என்ஒய்எஸ்ஏ (NYSA) என்ற நிறுவனத்தை நியமனம் செய்தது. எந்த ஒரு பொது டெண்டரையும் வெளியிடாமல் மேற்குவங்க மாநில பள்ளி சேவை ஆணையம் சுயாதீனமாக என்ஒய்எஸ்ஏ அமைப்பினை ஆசிரியர் பணி தேர்வுக்காக நியமனம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

25000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து.. நாட்டையே உலுக்கிய முறைகேடு.. மேற்குவங்கத்தில் நடந்தது என்ன?

இந்த என்ஒய்எஸ்ஏ அமைப்புதான் தேர்வினை நடத்தி ஓஎம்ஆர் தாள்களை திருத்தம் செய்து அதில் இருந்து ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து இருக்கிறது. இந்த நிலையில் ssc அமைப்பை சேர்ந்தவர்களும் இந்த என்ஒய்எஸ்ஏ நிறுவனத்தை சேர்ந்தவர்களும் முறைகேடாக தகுதியற்ற பலரை ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்திருப்பதாக சிபிஐ நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

சிபிஐ அதிகாரிகள் இது தொடர்பாக என்ஒய்எஸ்ஏ அலுவலகத்தில் ஆய்வு நடத்தி கைப்பற்றிய ஆவணங்களில் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக நடைபெற்ற வழக்கை விசாரித்த கொல்கத்தா மாநில உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி 25,753 பேரின் பணி நியமனமும் ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்திருந்தது. பலர் லஞ்சம் கொடுத்து ஆசிரியர் வேலை பெற்று இருக்கின்றனர் என்றும் இந்த பணி நியமனத்தில் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்றும் உறுதி செய்தது.

இந்த வழக்கில் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம் .எல்.ஏக்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லும் என ஆணை பிறப்பித்திருக்கிறது.

இதன் மூலம் சுமார் 25 ஆயிரம் பேரின் எதிர்காலமும் , பள்ளி மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த 25 ஆயிரம் பேரில் 18,000க்கும் மேற்பட்டோர் 9ஆம் வகுப்பிலிருந்து 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள். உச்சநீதிமன்றம் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த முறைகேடுகள் வெட்கக்கேடானவை என தெரிவித்துள்ளன.

இந்த முறைகேடுகளை பார்க்கும் போது இவர்களை மாணவர்களிடம் நெருங்க கூட விடக்கூடாது என்றே தோன்றுகிறது என கூறியுள்ளன. ஆனால் இந்த 25 ஆயிரம் பேருமே முறைகேடாக வேலைக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பதால் இந்த விவகாரத்தில் நேர்மையாக தேர்வு எழுதி பாஸ் ஆகி வேலை பெற்றவர்களும் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிக தீவிரமான ஒரு மோசடியாக இருப்பதால் இவர்களில் யார் நேர்மையாக தேர்வெழுதி வந்தார்கள் யார் முறைகேடாக வந்தார்கள் என பிரித்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு மோசடி இருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறது கொல்கத்தா உயர்நீதிமன்றம். முறைகேடு நடக்க வேண்டும் என்பதற்காகவே மேற்குவங்க மாநிலத்தின் எஸ்எஸ்சி அமைப்பு என்ஒய்எஸ்ஏ நிறுவனத்தை ஆசிரியர் பணி தேர்வில் ஈடுபடுத்தியதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தேர்வில் வெளிப்படையாக கவுன்சிலிங் பட்டியல் வெளியிடாதது , வெளிப்படையாக மெரிட் பட்டியல் வெளியிடாதது ஆகியவையே இந்த முறைகேடு வெளிச்சத்துக்கு வருவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன. இது தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் ஆசிரியர் தேர்வு நடைமுறையில் முறைகேடாக 8,163 மதிப்பெண் தாள்களே மாற்றப்பட்டுள்ளன என கண்டுபிடித்துள்ளது.

1498 பேர் தேர்வில் பங்கேற்காமலே ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர் என்றும் சிலர் தங்களுடைய விடைத்தாளில் எந்த ஒரு பதிலையும் குறிப்பிடாமல் சப்மிட் செய்து வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர் என்றும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். இந்த குழந்தைகள் தான் நாளை நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்றனர். இப்படிப்பட்ட ஆசிரியர் பொறுப்பு முக்கியமானது என்பதால் தான் தகுதி தேர்வுகள் ஆகியவை நடத்தப்படுகின்றன.

ஆனால் அதிலும் முறைகேடுகள் நடத்தப்பட்டு தகுதியற்றவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த முறைகேட்டால் உண்மையாக தேர்வெழுதி வேலைபெற்றவர்களும் தற்போது பாதிக்கப்பட்டு போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+