இந்திய பங்குச் சந்தை கடந்த மூன்று நாட்களாக தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. குறிப்பாக, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டு வரும் காரணத்தால் முதலீட்டாளர்கள் உச்சக்கட்ட சோகத்தில் உள்ளனர். இந்த வீழ்ச்சியின் காரணமாக முதலீட்டாளர்கள் முதலீட்டு மதிப்பையும் இழந்துள்ளனர்.
சென்செக்ஸ் குறியீடு கடந்த 3 நாள் வர்த்தகத்தில் 1,951 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது, இதன் மூலம் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ரூ.6 லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டு மதிப்பை இழந்தனர். இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.459 லட்சம் கோடியிலிருந்து ரூ.453 லட்சம் கோடியாக குறைந்தது.

இந்த மோசமான சரிவுக்கு பின்னால் இருக்கும் 5 முக்கியமான காரணம் தெரிந்துக்கொண்டால் மட்டுமே பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை மாற்றியமைத்து பணத்தை பாதுக்காக முடியும்.
அமெரிக்காவின் நாணய கொள்கை முடிவு: அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவை எதிர்நோக்கி முதலீட்டு சந்தை எச்சரிக்கை உடன் காத்திருந்தது. அமெரிக்காவின் ஃபெடரல் ஓபன் மார்க்கெட் கமிட்டி (எஃப்ஓஎம்சி) இரண்டு நாள் கொள்கை கூட்டத்தை முடித்துள்ளது, அதன் முடிவுகளை இன்று வெளியிட உள்ளது.
இந்த கூட்டம் மிகவும் முக்கியமானது, காரணம் அமெரிக்க அதிபராக அடுத்த மாதம் டொனால்டு டிரம்ப் பதவியேற்கும் நிலையில், பைடன் ஆட்சியில் நடக்கும் கடைசி நாணய கொள்கை கூட்டம் இது என்பதால் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சி: அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது. ரூபாய் மதிப்பு 84.95 என்ற அளவிற்கு வீழ்ந்தது, இது முதலீட்டாளர் மனநிலையை பாதித்துள்ளது. வலுவடையும் டாலருக்கு இடையே ரூபாய் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையலாம் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் தான் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை முடிவை இன்று வெளியிட உள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விற்பனை: வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (எஃப்பிஐ) இந்திய பங்குகளை விற்பனை செய்வதை மீண்டும் தொடங்கியுள்ளனர். வலுவடையும் டாலர் மதிப்பு மற்றும் அமெரிக்க அரசு பத்திர முதலீட்டில் கிடைக்கும் அதிகப்படியான வட்டி வருமானம் போன்ற காரணங்களால் இந்திய பங்குகளை விற்று வருகின்றனர்.
டிசம்பர் 17 அன்று அன்னிய நிறுவன முதலீட்டாளர்களான எஃப்பிஐகள் ரூ.6,409.86 கோடி மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்றுள்ளனர். அதேபோல், டிசம்பர் 16 அன்று ரூ.278.70 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர். இருப்பினும், மாதாந்திர அடிப்படையில் பார்க்கும் போது FPI-க்கள் நெட் பையர்ஸ் ஆகவே உள்ளனர்.
வங்கிப் பங்குகளின் வீழ்ச்சி: சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை தாண்டி இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் வங்கி பங்குகளை அதிகம் பாதித்துள்ளது. கடந்த 3 நாட்கள் வர்த்தகத்தில் எச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகள் கடந்த பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதன் காரணமாக நிஃப்டி வங்கி குறியீடு 1.32 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மந்தமான வளர்ச்சி: இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை நவம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது முதலீட்டாளர் மனநிலையை மேலும் பாதித்துள்ளது. இரண்டாவது காலாண்டில் மந்தமான பொருளாதார வளர்ச்சி பதிவானதை தொடர்ந்து, அதிகரித்து வரும் வர்த்தக பற்றாக்குறை புதிய அச்சத்தை இந்திய முதலீட்டு சந்தையில் ஏற்படுத்தியுள்ளது.
இந்த காரணிகள் அனைத்தும் சேர்ந்து தான் இந்திய பங்குச்சந்தையை மோசமான நிலைக்கு தள்ளி முதலீட்டாளர்களுக்கு சவாலான சூழலை உருவாக்கியுள்ளது. இந்த 5 காரணங்களின் மூலம் பாதிக்காத துறை அல்லது நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம் சரிவில் இருந்து தப்பிக்கலாம்.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

பாகிஸ்தான்-க்கு மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி.. பாவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?



Click it and Unblock the Notifications