டெல்லி: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தின் மத்தியிலேயே கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து படு வீழ்ச்சி கண்டு வந்தன.
ஆனால் இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கிய சந்தையானது, பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 1861 ஏற்றம் கண்டு, 28,535 ஆக முடிவடைந்துள்ளது.
இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 516 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 8,317 ஆக முடிவடைந்துள்ளது.
பொருளாதாரத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு
உலகளாவிய சந்தையில் கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மக்களையும், பொருளாதாரத்தினையும் கட்டுபடுத்த பல நாடுகளும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருகின்றன. மேலும் கொரோனாவினால் ஏற்பட்டுள்ள தாக்கத்தினை ஈடுசெய்ய பல பில்லியன் ரூபாயினை ஒதுக்கி வருகின்றன. இதனால் பல நாட்டு பங்கு சந்தைகளும் சற்று ஏற்றம் கண்டுள்ளன.
அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கை
குறிப்பாக அமெரிக்கா, கொரோனாவின் வெடிப்பில் இருந்து பொருளாதார தாக்கத்தினை போக்க, அமெரிக்கா செனட் அதிகாரிகளும். டிரம்பின் நிர்வாக குழு அதிகாரிகளும் பொருளாதாரத்தினை தூண்ட மசோதா ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர். இது தற்போது ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளது. அந்த உடன்பாட்டின் படி விரைவில் இந்த 2 டிரில்லியன் தொகைக்காக அமெரிக்க பிரதி நிதிகள் சபை விரைவில் இதை செயல்முறைக்கு கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி இந்த ஊக்கத் தொகை வெளியிடப்படும் நிலையில், பணப்புழக்கம் அதிகரிக்கும். இது மேலும் பொருளாதாரத்தினை ஊக்குவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனாலேயே உலகளாவிய பங்கு சந்தைகள் சிறிது ஏற்றம் கண்டு வருகின்றன.
சர்வதேச பங்கு சந்தைகள் ஏற்றம்
அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் 2% ஏற்றம் கண்டுள்ளது. இது வால் ஸ்ட்ரீட்டில் இரண்டாவது நாள் எழுச்சியாகும். இதே எஸ் &பி 500 ப்யூச்சர் வர்த்தகமும் ஏற்றம் கண்டுள்ளது. இதே செவ்வாய்கிழமையன்று டவ் ஜோன்ஸ் இண்டஸ்ரியல் ஆவரேஜ் 11.37% ஏற்றம் கண்டுள்ளது. இது 1933லிருந்து ஒப்பிடும்போது இது மிகப்பெரிய ஏற்றமாகவும் கருதப்படுகிறது. இதே நாஸ்டாக் மற்றும் எஸ் &பி 500 ப்யூச்சர் வர்த்தகமும் 8 மற்றும் 9% ஏற்றம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதே ஆசிய பங்கு சந்தையான MSCI's broadest index குறியீடு 3.4% ஏற்றமும், இதே ஜப்பானின் நிக்கி 6.9% ஏற்றமும் கண்டுள்ளது.
இதே ஐரோப்பிய சந்தைகளும் லாபத்துடன் திறக்கப்பட்டன. இங்கிலாந்தின் FTSE 1.56% ஏற்றமும், இதே பிரெஞ்சு சந்தையான CAC 2.07% ஏற்றத்துடனும், ஜெர்மனின் DAX 2.65% ஏற்றத்துடனும் உயர்ந்துள்ளது. இந்த பலமான ஏற்றமானது உலகளாவிய முதலீட்டாளார்களிடையே பெரும் சாதகமான உணர்வை உருவாக்கியுள்ளது.
அதிக வாங்குதல் திறன்
இந்திய பங்கு சந்தையில் முன்னனி நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்டிஎஃப்சி, ஹெச் டிஎஃப்சி பேங்க் பங்குகளை முதலீட்டாளர்கள் அதிகம் வாங்கியதால் இது சந்தை ஏற்றத்திற்கு சற்று வழிவகுத்தது என்று கூறலாம். சொல்லப்போனால் இந்த மூன்று பங்குகள் மட்டும் சுமார் 1100 புள்ளிகள் ஏற்றத்திற்கு வழிவகுத்தது எனலாம்.
குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மட்டும் 21% ஏற்றம் கண்டு 1,141 ஆக ஏற்றம் கண்டது. இது பில்லியனரான முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்தின் 10% பங்குகளை பேஸ்புக் நிறுவனம் வாங்கலாம் என்ற செய்தி வெளியானதை அடுத்து இந்த ஏற்றம் கண்டுள்ளது.
இதே ஹெச் டி எஃப்சி பேங்க் பங்கின் விலை 9% ஏற்றம் கண்டு 835 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
இந்தியா நிதி ஒதுக்கீடு நடவடிக்கை
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அடுத்து வரும் ரிசர்வ் வங்கிக் கூட்டத்தில், வட்டி குறைப்பு இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் மக்கள் நாளுக்கு நாள் கொரோனாவினால் அதிகமாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மக்களின் பாதுக்காப்புக்காகவும், அத்தியாவசிய தேவைக்காகவும் மக்களுக்கு நிதி ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் நாட்டில் நிலவி வரும் நிலையில் பணப்புழக்கத்தினை ஊக்குவிக்க, பொதுத்துறை வங்கிகளுக்கு அதிகப்படியான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டெக்னிக்கல் பேட்டர்ன்ஸ்
இதே டெக்னிக்கலாக பார்க்கும் போது நிஃப்டி மற்றும் பேங்க் நிஃப்டி சற்று நேர் மறையானதாக உள்ள நிலையில், அனலிஸ்டுகள் இது சற்று ஏற்றம் காணலாம் என்றும் கூறி வருகின்றனர்.
இதன் உடனடி சப்போர்ட் விகிதம் 7,600 - 7,500 ஆகும். இதே உடனடியான ரெசிஸ்டன்ட் விகிதம் 8,050 - 8,200 வரை செல்லலாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications