இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு அரசு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி உள்ளது.
இந்தியாவில் இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதன் படி இருசக்கர வாகனத்தின் இன்ஜின் திறனை பொறுத்து இந்த ஜிஎஸ்டி வரி விகிதம் மாற்றப்படும்.

350 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீதமும், 350சிசிக்கும் அதிகமான என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி + 3 சதவீத செஸ் வரி என மொத்தம் 31 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கேள்வி எழுப்பி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள விஷ்ணு என்கிற நபர், மத்திய அரசு இருசக்கர வாகனங்களை கூட ஆடம்பரப் பொருட்களாக கருதுகிறதா என கேள்வி எழுப்பி உள்ளார். இந்தியாவில் லோயர் மிடில் கிளாஸ் மக்களும், சாதாரணமான வேலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களும் கூட பைக்குகளை பயன்படுத்துகின்றனர் அப்படி இருக்கும்போது அது எப்படி ஆடம்பர பொருளில் சேரும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தவிர இருசக்கர வாகனங்களுக்கான காப்பீடு பாலிசி எடுக்கும் போது அதற்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். அரசு 350 சிசி வரையிலான என்ஜின் திறன் கொண்ட வாகனங்களுக்கு ஜிஎஸ்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார், விஷ்ணுவின் இந்த பதிவு பலரது கவனத்தையும் பெற்றுள்ளது.
சிலர் அரசு வரி விகிதங்களை மாற்றி அமைக்க வேண்டும் என கோரியுள்ளனர். சிலர் ஜிஎஸ்டி வருவதற்கு முன்பு 30 சதவீதம் என இருந்த வரி தற்போது 28 சதவீதம் என குறைந்து தான் இருக்கிறது என பதில் அளித்துள்ளனர். இருந்தாலும் சாமானிய மக்களை மனதில் கொண்டு வரி விகிதத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜூம் ஜிஎஸ்டி வரி விகிதம் காரணமாகவே இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விலை உயர்ந்துவிட்டது என கூறி இருந்தார்.
இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன்பு 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் விற்பனையான இருசக்கர வாகனங்கள் பலவும் தற்போது 1 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் உள்ள ஒழுங்குமுறைகளும் , அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் தான் காரணம் என தெரிவித்திருந்தார்.
இருசக்கர வாகனங்களுக்கு அரசு ஏன் 28 % ஜிஎஸ்டி விதிக்கிறது , குறிப்பாக சாதாரண மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஏன் 28% ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். வளர்ந்து வரும் மற்ற நாடுகளையும் , அவர்களின் இருசக்கர வாகன சந்தைகளையும் ஒப்பிடும் போது இந்தியாவில் தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என அவர் கூறியிருந்தார்.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications