நான் தங்கம் மட்டும் வாங்கவே மாட்டேன்: தங்கத்தில் முதலீடு செய்யாமலேயே உலக பணக்காரரான வாரன் பஃபெட்..!!

முதலீடு என்றாலே அனைவருமே வாரன் பஃபெட்டை தான் தங்களுடைய ஆசனாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த அளவிற்கு சிறுவயதிலேயே பங்குச்சந்தை முதலீடுகளை கற்று தெரிந்து முதலீடுகள் மூலமே நம்மால் கோடி கோடியாக சம்பாதித்து உலக பணக்காரர்கள் பட்டியலில் கூட இடம்பெற முடியும் என்பதை நிரூபித்து காட்டியவர் தான் வாரன் பஃபெட்.

தனக்கென ஒரு முதலீட்டு பாணியை உருவாக்கி அதனைப் பின்பற்றி சரியான நேரத்தில் சரியான நிறுவனங்களில் முதலீடு செய்ததுதான் இவருடைய சாமர்த்தியம். 12 வயதில் தொடங்கிய முதலீட்டு பயணம் 95 வயது வரை தொடர்ந்தது. இத்தனை ஆண்டுகள் முதலீட்டு துறையில் இருந்தாலும் வாரன் பஃபெட் தங்கத்தில் மட்டும் முதலீடு செய்தது கிடையாது.

நான் தங்கம் மட்டும் வாங்கவே மாட்டேன்: தங்கத்தில் முதலீடு செய்யாமலேயே உலக பணக்காரரான வாரன் பஃபெட்..!!

உலக அளவில் பாதுகாப்பான முதலீடு, பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கம் விலை தான் உயர்கிறது. கடந்த பல ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு பெருகிவிட்டது. அப்படி இருந்தும் வாரன் பஃபெட் ஏன் தங்கத்தில் முதலீடு செய்யாமல் தவிர்க்கிறார் என்பது தான் பெரும்பாலான முதலீட்டாளர்களுக்கு இருக்கக்கூடிய சந்தேகம். இதற்கு அவரே பதிலும் தந்திருக்கிறார்.

வாரன் பஃபெட்டை பொறுத்தவரை தங்கம் ஒரு செயலற்ற பொருள். 2011 ஆம் ஆண்டு தன்னுடைய நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு கடிதம் எழுதியிருந்த அவர் தங்கம் தொழில்துறை ரீதியாக சில இடங்களில் பயன்படுத்தப்படுகிறது ஆனால் பெரும்பாலும் அது நகையாக தான் மாற்றப்படுகிறது, இந்த சொத்து மூலம் ஏதாவது உற்பத்தியாகிறதா, ஏதாவது வளர்ச்சி அடைகிறதா என்றால் இல்லை.

இதுவே நிலம் ,தொழிற்சாலைகள் உள்ளிட்டவை தொடர்ந்து புதுப்புது விஷயங்களை புதுப்புது பொருட்களை உற்பத்தி செய்து வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும் என கூறுகிறார். அடுத்ததாக ஒரு தொழிலில் நாம் முதலீடு செய்தால் அது லாபம் பெறும் அந்த லாபத்தில் நமக்கு டிவிடெண்ட் வழங்குவார்கள், போனஸ் பங்குகள் கிடைக்கும், பங்கு பிரிப்பு நடக்கும் நாம் செய்த முதலீடும் பெருகும்.

ஆனால் தங்கம் அப்படியேதான் இருக்கும், நீங்கள் 10 கிராம் தங்கம் வாங்கி இருந்தால் 50 ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் அந்த 10 கிராம் தங்கமாக தான் அது அப்படியே இருக்குமே தவிர 10 கிராம் என்பது 15 கிராம் ஆக மாறி இருக்காது. எனவே எந்த ஒரு வருமானமும் இது தருவது கிடையாது என்பது தான் பஃபெட்டின் வாதம். தங்கத்தை வாங்கி மக்கள் பாதுகாப்பாக வைத்து கொள்வார்களே தவிர அது வளராது, அதனால் எந்த ஒரு பொருளும் உற்பத்தியாகாது, வளர்ச்சி அடையாது என்கின்றார்.

பொருளாதாரத்தில் பங்களிக்காக ஒரு பொருள் தான் தங்கம் என கூறும் வாரன் பஃபெட் நீண்ட கால அடிப்படையில் பெரிய அளவில் லாபம் தருவது, பங்குகள், தொழில்கள் மற்றும் ரியல் எஸ்டேட் தான் என்கிறார். வாரன் பஃபெட் பொருத்தவரை நான் முதலீடு செய்யக்கூடிய சொத்து பல்கி பெருக வேண்டும் என்கிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+