கடந்த சில வாரங்களாக ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சியான பிட்காயின் (Bitcoin) தற்போது முக்கியமான தொழில்நுட்பத் தடைகளை தாண்டி வலுவான மீட்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம், பிட்காயின் அடுத்த பெரிய ஏற்றத்தை நோக்கிச் செல்லலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வு தற்போது சரிந்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் கிரிப்டோவுக்குத் திரும்புவார்கள் என்பதால், பிட்காயின் 150,000 டாலர் முதல் 180,000 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பிட்காயினின் விலை அமைப்பு தற்போது Higher Lows உருவாக்குகிறது. இது ஒரு கிளாசிக் ஏற்றத்தின் அறிகுறியாகும். பிட்காயின், 108,000 டாலர் என்ற எதிர்ப்பை உடைத்து, வெற்றிகரமாக அதை மீண்டும் சோதித்து, இப்போது உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து கிரிப்டோ ஆய்வாளர் ஆஸ்டின் அர்னால்ட் கூறுகையில், "பிட்காயின் அதன் 200-நாள் நகரும் சராசரிக்கு மேலே வர்த்தகம் ஆகும் வரை, நாம் ஒரு ஏற்றச் சந்தையில்தான் இருக்கிறோம். இந்தக் கோட்டுக்கு மேலே பிட்காயின் விலை இருந்தால், நீண்ட காலத்துக்கு அதன் போக்கு ஏற்றத்தில்தான் உள்ளது என்று உறுதியாக நம்பலாம். இந்தக் கோடுதான் ஏற்றச் சந்தையையும், இறங்குச் சந்தையையும் பிரிக்கும் ஒரு முக்கிய எல்லையாகும்.
வரலாற்று ரீதியாக, 50 வார நகரும் சராசரி (50-WMA) ஒரு சுழற்சியின் குறைந்தபட்ச எல்லையாக செயல்படுகிறது. சமீபத்திய சரிவுகளின்போதும் கூட, பிட்காயின் இந்தப் புள்ளியில் இருந்து மீண்டு வந்துள்ளது. இது நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு வாங்கும் வாய்ப்பாகும்" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மேக்ரோ பொருளாதார கண்ணோட்டத்தில், தற்போதைய நிலைமைகள் 2020 ஆம் ஆண்டைப் போலவே உள்ளன. அப்போது தங்கம் உச்சத்தை எட்டிய பிறகு, பிட்காயின் அடுத்த ஆண்டில் 557% உயர்வுடன் ஒரு மிகப்பெரிய ஏற்றத்தை தொடங்கியது. வரலாற்று ரீதியாக, தங்கம் உச்சத்தை எட்டும் நேரத்தில் பிட்காயின் பெரும்பாலும் அதன் அடிப்பகுதியை (Bottom) அடைந்து, அங்கிருந்து மீளத் தொடங்குகிறது என்று அவர் கூறினார்.
தங்கம் சமீபத்தில் ஒரு அவுன்ஸுக்கு 4,380 டாலர் என்ற சாதனையை எட்டியுள்ளது. இது தங்கச் சந்தையில் முதலீட்டாளர்கள் அதிக உற்சாகத்தில் இருப்பதை காட்டுகிறது. சில்லறை முதலீட்டாளர்களின் அதிக ஆர்வம் ஒரு சந்தையின் உச்சத்தை நெருங்குவதை சுட்டிக்காட்டும். தங்கத்தில் லாபம் எடுப்பவர்கள், அந்தப் பணத்தை டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கப்படும் பிட்காயினை நோக்கித் திருப்புவார்கள் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மேலும், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கத் தயாராக இருப்பதால், சந்தைகளில் பணப்புழக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது கிரிப்டோகரன்சிகள் போன்ற அபாயகரமான சொத்துக்களுக்கு சாதகமாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த இலக்கு என்ன..?:பணப்புழக்கம் மற்றும் தங்கத்தின் உச்சம் ஆகியவை பிட்காயின் விரைவிலேயே அடுத்த ஏற்றத்தைத் தொடங்கலாம் என்பதைக் குறிக்கிறது. ஆய்வாளர்கள், 2025 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் பிட்காயின் 150,000 டாலர் முதல் 180,000 டாலர் வரை உயரும் என்று கணித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

தங்கம் விலை இனி எகிற போகுது: சிக்னல் தந்த உலக சந்தை..! ஈரான் போரில் நடந்த திடீர் திருப்பமே காரணம்?

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் தடாலடி சரிவு.. தங்க நகை வாங்கும் முன் உஷார்..!!



Click it and Unblock the Notifications