தங்கத்தின் மகுடம் இறக்குகிறதா? கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்து வந்த தங்கம் விலையானது, சமீபத்திய வாரங்களாக அவ்வப்போது சரிவையும் காணத் தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் எவ்வளவு குறையும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
உலகளாவிய பொருளாதார குறியீடுகள் மற்றும் அமெரிக்க டாலரின் வலுவான உயர்வு காரணமாக, மஞ்சள் உலோகத்தின் விலை சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது. முக்கியமாக, 10 கிராம் தங்கம் 1.4 லட்சத்திற்கும் கீழே செல்ல வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கணிப்பது, நகைப்பிரியர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. குறிப்பாக புது நகை வாங்க காத்திருப்பவர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த சரிவு தற்காலிகமானதா? இப்போது முதலீடு செய்வது லாபத்தைத் தருமா? ஆபரண தங்கத்தின் விலை எப்படி இருக்கும்? வாருங்கள் விரிவாகப் பார்க்கலாம்.

மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களானது, தற்போதைக்கு முடிவுக்கு வராது என்பது போலவே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் சமீபத்திய உரை இருந்தது. இது உலகளாவிய அளவில் பங்குச் சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் டாலர் மதிப்பானது உச்சத்தை எட்டி வருகிறது. பொதுவாக டாலர் மதிப்பானது அதிகரிக்கும் போது, தங்கம் மற்றும் வெள்ளி விலையானது சரிவை காணும். தற்போது இந்த காரணத்தினாலேயே தங்கம் விலையானது சரிவைக் கண்டு வருகிறது.
குறிப்பாக ஸ்பாட் தங்கத்தின் விலையானது 1.54% குறைந்து, 4,684.97 டாலராக காணப்படுகிறது. இதே ஸ்பாட் வெள்ளி விலை 3.13% குறைந்து, 72.76 டாலராகவும் காணப்படுகிறது. இது மேற்கொண்டு இந்திய சந்தையிலும் கடும் சரிவை ஏற்படுத்தலாம். அது ஆபரண சந்தையிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை அமெரிக்காவிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே பார்ப்பதாக டிரம்ப் தனது உரையில் குறிப்பிட்டிருந்த நிலையில், உலகின் முக்கிய கடல் வர்த்தக பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி மூடப்பட்டது குறித்து,ம் பேசியிருந்தார். அதை திறக்க வேண்டிய பொறுப்பு பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உரியது என்றும், இதில் வாஷிங்டன் தலையிடாது என்றும் கூறிவிட்டார். இது மேற்கொண்டு தொடர்ந்து போர் நீடிக்கும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்ந்து கச்சா எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதனிடையே தான் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலையானது 4550 டாலர் என்ற சப்போர்ட் விலையை உடைத்தால், தொடர்ந்து 4,354.8 டாலர்கள் வரையில் சரிய வாய்ப்பிருப்பதாகவும் கோடக் செக்யூரிட்டீஸ் கணித்துள்ளது. இதே வெள்ளியும் 69.13 டாலர் என்ற சப்போர்ட் விலையை உடைத்து கீழே செல்லும் பட்சத்தில் 63.9 டாலராகவும் குறையலாம் என கூறியுள்ளது.
இதே எம்சிஎக்ஸ் தங்கத்தின் உடனடி சப்போர்ட் விலையாக 10 கிராமுக்கு 1.46 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளது. இதை உடைத்து மேற்கொண்டு சரிவைக் கண்டால், அடுத்து 1.4 லட்சத்தை எட்ட வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதே எம்சிஎக்ஸ் வெள்ளியின் உடனடி சப்போர்ட் 2.23 லட்சம் ரூபாயாகும். இதை உடைக்கும் பட்சத்தில் அடுத்த சப்போர்ட் 2.09 லட்சம் ரூபாயாகும்.
சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தால் அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும். ஆனால் ஆபரணத் தங்கம் வாங்கும் போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தால், இந்தியாவிலும் ஆபரணத் தங்கம் விலையில் சரிவு ஏற்படும். ஒருவேளை சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்தாலும், இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக மிகவும் பலவீனமடைந்தால், இந்தியாவில் விலை குறையாமல் அப்படியே நீடிக்கலாம். ஆக இதையும் கவனத்தில் கொள்வது நல்லது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications

