நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

தங்கம், வெள்ளி விலை எப்போது குறையும்? எப்போது நம் வீட்டு விசேஷங்களுக்கு வாங்கலாம் என்று ஏங்கி காத்திருந்தவர்களுக்கு இன்று ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களாகவே கனவாகவே இருந்து வந்த தங்கத்தின் விலை, இன்று அதிரடியாக குறைந்து நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கு பெரும் நிம்மதியை தந்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவும் போர் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு என சந்தையில் அலைபாயும் சூழலுக்கு மத்தியில், கடந்த சில தினங்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சரிவு நகை வாங்குபவர்களுக்கு ஒரு சிறிய ஆசுவாசத்தை தந்துள்ளது இந்த சரிவானது தற்காலிகமானதா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? சந்தையின் இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? இன்றைய நிலவரம் என்ன? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

வரும் வாரங்களில் தங்கம், வெள்ளி விலையானது தொடர்ந்து சரிவை காண வாய்ப்பிருப்பதாக கூறும் நிபுணர்கள், முதலீட்டாளர்கள் தொடர்ந்து புவிசார் அரசியல் பதற்றங்களில் ஏற்பட்டு வரும் சூழலை கண்காணித்து வருகின்றனர். இதையடுத்து மத்திய வங்கிகள் எந்த மாதிரியான முடிவை எடுக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. தற்போது பொருளாதாரத்தில் நிலவி வரும் நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியில், வட்டி விகிதம் குறைக்கப்படுமா அல்லது தொடர்ந்து மாற்றம் செய்யப்படாமல் அப்படியே இருக்குமா என்ற பெரும் கேள்வியானது காணப்படுகிறது. இது குறுகிய காலத்தில் விலையில் அதிக ஏற்ற இறக்கத்தை காணலாம்.

இருப்பினும் முதலீட்டாளர்கள் கவனம் முழுமையாக மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றத்துக்கு மத்தியில் காணப்படுகிறது. அங்கு பதற்றம் மீண்டும் அதிகரித்தால், அது சர்வதேச நிதி சந்தைகளை ஆட்டம் காண வழிவகுக்கலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். அதேசமயம் மத்திய வங்கிகளின் கொள்கைகளும் வெளியாக இருப்பதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

Also Read

வரவிருக்கும் புதன்கிழமை அன்று தனது கொள்கை முடிவை அறிவிக்க இருக்கும் அமெரிக்க மத்திய வங்கியின் தாக்கம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் இங்கிலாந்து வங்கிகளிலும் எதிரொலிக்கலாம். சீன வங்கியானது வெள்ளிக்கிழமை அன்று தனது முடிவை அறிவிக்க உள்ளது. ஆக இந்த நிகழ்வுகள் நடப்பு வாரம் முழுக்கவே அதிக ஏற்ற இறக்கம் காண வழிவகுக்கலாம்.

இருப்பினும் பெரும்பாலும் மேற்கண்ட வங்கிகள் வட்டி விகிதத்தை பெரிதாக மாற்றம் செய்யாமல் அப்படியே வைத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இது உன்னிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த வாரம் தொடங்கி கடும் அழுத்தத்தில் இருக்கும் தங்கம் மற்றும் வெள்ளி விலையானது, வலுவான டாலர் மற்றும் பத்திர சந்தை ஏற்றம் மத்தியில் காணப்படுகிறது. இருப்பினும் தற்போது கச்சா எண்ணெய் விலையானது உயர்ந்து வருவது மேற்கொண்டு வட்டி குறைப்பை தாமதப்படுத்தலாம். இது மேற்கொண்டு தங்கம் விலையை அழுத்தத்திற்கு உண்டாக்கலாம். வரவிருக்கும் நாட்களிலும் இந்த போக்கு தொடரும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆக நீண்ட கால முதலீட்டாளர்களும் பொறுத்திருந்து முதலீடு செய்யலாம்.

Recommended For You

ஆபரண தங்கம் வாங்க நினைப்பவர்களுக்கு, இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பு என்றாலும், சிறிது சிறிதாக வாங்கலாம். இது மேற்கொண்டு குறையும் போது குறைந்த விலையில் வாங்க வாய்ப்பாக கிடைக்கும். இன்று சென்னையில் கிராமுக்கு 24 கேரட் தங்கம் விலை 54 ரூபாய் குறைந்து, 16,046 ரூபாயாகவும், 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு 14,710 ரூபாயாகவும், 18 கேரட் தங்கம் விலை 12,400 ரூபாயாகவும் காணப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலையானது சவரனுக்கு 1,17,680 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளி விலையானது கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 276 ரூபாயாகவும், கிலோவுக்கு 4,000 ரூபாய் குறைந்து 2,76,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+