தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா? ஆகஸ்ட் மாதத்தில் என்ன நடக்கும்?

ஜூலை மாதத்தில் பெரிய அளவில் விலை மாறாமல் இருந்த தங்கம் ஆகஸ்ட் மாதத்திலாவது விலை குறைந்து ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் இன்றைய தங்கம் விலை என்ன, வரும் நாட்களில் அதன் போக்கு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் ஆபரண தங்கத்தின் விலை லேசாக உயர்ந்திருக்கிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து 13,250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று 13,220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாயும் ஒரு சவரனுக்கு 240 ரூபாயும் உயர்ந்து 1,06,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் தங்கே இதே விலைக்கு தான் விற்பனையாகிறது.

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கு கீழ் செல்லுமா? ஆகஸ்ட் மாதத்தில் என்ன நடக்கும்?

ஜூன் மாதம் தங்கம் விலை 10% வரை சரிந்தது. ஜூலை மாதம் பெரிய அளவில் விலை மாறாமல் ஒரு வரம்பிலேயே இருந்தது. இந்த சூழலில் தான் ஆகஸ்ட் மாதத்திலாவது தங்கம் விலை சரிந்து ஒரு சவரன் 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Also Read

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை மாற்றவில்லை என அறிவித்ததால் உலக சந்தையிலேயே தங்கம் விலை குறைந்து தான் வருகிறது. எனவே இனி வரும் சில வாரங்களுக்கும் இந்த விலை குறைவு நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே தங்கம் விலை குறைவதற்கான வாய்ப்புகள் இந்த மாதம் பிரகாசமகவே உள்ளன. பெரிய அளவில் விலை குறையவில்லை என்றாலும் விலை பெரிய அளவில் உயராது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே தங்கம் வாங்க வேண்டியவர்களுக்கு ஆகஸ்ட் மாதமும் நல்ல வாய்ப்பு தான்.

Recommended For You

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 14,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,44,550 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை இன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி 235 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு வாரமாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை.

உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,068 டாலராக குறைந்துள்ளது. உலக சந்தையில் தங்கம் விலை குறைந்தால் இந்தியாவிலும் விலை குறையும். அந்த வகையில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,44,550 ரூபாயாக வர்த்தகமாகிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+